பின்பற்றுபவர்கள்

புதன், 24 ஏப்ரல், 2013

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே

ரஜினி படங்கள் ஒரு காலத்தில் பாட்டுக்காகவே ஓடிய படங்களும் உண்டு. அந்த வரிசையில், ரஜினி திரையில் பாட்டு பாடுபவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே சிறந்த பாடல்கள் வரிசையில் வரும்.   ஸ்வர்ணலதாவின்  அழகானக் குரலில் கேட்டு மகிழ்வோம்.

திரைப் படம்: வீரா (1994)
நடிப்பு: ரஜினி, மீனா
இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பாடல்: வாலி

http://asoktamil.opendrive.com/files/Nl80OTQ3Mzg3X1drWktoXzBiYmU/MalaiKovil.mp3

ஒ  ஒ  ஒ   ஒ  ஒ  ஒ   ஒ   ஒ   ஒ   ஒ   ஒ   ஒ  
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 

நாடகம்  ஆடிய  பாடகன்
ஒ  ஒ   ஒ   ஒ  
நீ  இன்று  நான்  தொடும்  காதலன்
ஒ  ஒ   ஒ   ஒ  

நீ  சொல்ல  நான்  மெல்ல  மாறினேன் 
நன்றியை  வாய்  விட்டு   கூறினேன் 

நீர்  அழகும்  செல்ல  பேர்  அழகும் 
உன்னை  சேராதா  உடன்  வாராதா 
மான்  அழகும்  கெண்டை  மீன்  அழகும் 
கண்கள்  காட்டாதா  இசை  கூட்டாதா
பாலாடை  இவன்  மேலாட  
வண்ண  நூலாடை  இனி  நீ  ஆகும் 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

நான்  ஒரு  பூச்சரம்  ஆகவோ 
நீள்  குழல்  மீதினில்  ஆடவோ 
நான்  ஒரு  மேலிசை  ஆகவோ 
நாளும்  உன்  நாவினில்  ஆடவோ 
நான்  படிக்கும்  தமிழ்  கீர்த்தனங்கள் 
இங்கு  நாள்  தோறும்  உந்தன்  சீர்  பாடும் 
பூ  மரத்தில்  பசும்  பொன்  நிறத்தில் 
வலை  பூத்தாடும்  உந்தன்  பேர்  பாடும் 
மா  கோலம்  மழை  நீர்  கோலம் 
வண்ண  நாள்  காணும்  இந்த  ஊர்கோலம் 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 
முத்து  முத்து  சுடரே சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லு

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட்டகாசமான பாடல் ஆயிற்றே... நன்றி சார்...

பெயரில்லா சொன்னது…

வணக்க்ம் சார். இந்த பாடல் மனோ பாடிய பாடல். இருந்தாலும் அருமையான பாட்டு அற்புதமான மெட்டு. பகிர்விற்க்கு நன்றி.

Unknown சொன்னது…

ரொம்ப நன்றி கோவை ரவி சார். திருத்திவிட்டேன்.

கருத்துரையிடுக