பின்பற்றுபவர்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது

அழகான அமைதியான பாடல், அண்னன் தங்கை பாடல் வரிசையில். குழந்தை நடிகையாக பல படங்களில் நடித்தவர் சுமதி. அப்போதிருந்த  அவருக்கான ரசிகர்கள் அதிகம்.   வழக்கம் போல பின்னர் காணாமல் போனார்.
ஜி.கே.வெங்கடேஷ் இசைக்காகவும் பாடிய குரல்களுக்காகவும் பாடலை நிச்சயம் ரசிக்கலாம்.


திரைப் படம்: பெண்ணின் வாழ்க்கை
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
நடிப்பு: சுதாகர், சுமதி

http://asoktamil.opendrive.com/files/Nl85MzQ4NDg2X0I2SnVCXzhlN2M/veedu%20thedi%20vanthathu.mp3


வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர் பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
அன்னை தந்தை யாவும் என் அண்ணன் அல்லவோ
உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ
அன்பு முல்லை வாசம்
இந்த அண்ணன் தங்கை பாசம்
இது நாளும் வாழ வேண்டும்
வருங்காலங்கள் வண்ணக் கோலங்கள்
மின்னும் மாளிகையாகாதோ
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர் பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
காலம் என்ற கடலில் நாம் கலங்கி வாடினோம்
கடவுள் செய்த கருணை நாம் கரையை நாடினோம்
நன்றி சொல்ல வேண்டும்
சொல்ல வார்த்தை என்ன தோன்றும்
இந்த உள்ளம் ஒன்று போதும்
ஒரு தாய் வழி வந்த பைங்கிளி
இன்று புன்னகை கொண்டாட
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர் பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
அண்ணன் மாலை சூட ஓர் அண்ணி வேண்டுமே
தங்கை உன்னை காக்க ஓர் தலைவன் வேண்டுமே
மாமன் மகளை வேண்ட
உந்தன் மடியில் பிள்ளை தோன்ற
அதை நாமும் காண வேண்டும்
பல ஆசைகள் இந்த வேளையில் எண்ண ஊஞ்சலில் ஆடாதோ
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர் பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

அடடா எத்தனை நாட்களுக்குப்பிறகு இந்த பாடலை கேட்கிறேன். என் மனதின் அடியாழத்தை கிண்டி விட்டீர்கள். சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டது. மிக மென்மையான சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் பாடல். இதற்கு சமமான பாடலாக பாசமலர் படத்தில் இடம் பெற்ற “எங்களுக்கும் காலம் வரும்” என்ற பாடலை குறிப்பிடலாம்.

கருத்துரையிடுக