பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

அன்பர்களுக்கு வணக்கம்


அன்பர்களுக்கு வணக்கம்,
எங்க வீட்டுலே விஷேசமுங்க அதனாலே பாடல் வெளியிடுவதில் கொஞ்ச காலம் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் தொடர்ந்து ஆதரவு கொடுக்கனும். நன்றி

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றென்ன நூறாய்

நல்லதொரு இளமை பாடல்.


அம்மன் அருள் (1973)
பாடியவர்கள்: S P B, P சுசீலா,
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: பட்டு
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி


ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

பட்டுத் தளிர் கொடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டு கொண்டு பேசும் சிந்து
புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாளை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
ஓடும் தென்றல் பூவை பார்த்து
கூறும் கதைகள் என்னென்ன

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

உன்னைக் கண்டு எனக்கு என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம் நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
நாலில் ஒன்று நாணம் என்று
பெண் மனம் கொஞ்சம் அஞ்சுவதென்னென்ன
அச்சம் என்ன ஆசை கொண்டு
துள்ளிடும் உள்ளம் பூப்பந்து..

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹ்
ல ல ல ல

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

காலத்திற்கேற்ற நல்ல இளமை துள்ளும் பாடல் நல்ல தமிழில்.


திரைப் படம்: தங்க மகன் (1983)
இயக்கம்: A ஜெக நாதன்
நடிப்பு: ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ்
இசை:இளையராஜா
குரல்கள்: S P B, S ஜானகி
பாடல்: வாலிராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ


வீணை என்னும் மேனியிலே
தந்தி என்னை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய் பண் பாடுதே

S P Bயின் குரல் அருமைக்கும் இனிமைக்கும் இன்னுமொரு பாடல்.


திரைப் படம்: மனசுக்குள் மத்தாப்பு (1988)
இசை: S A ராஜ் குமார்
இயக்கம்: ராபற்ட் ராஜசேகர்
நடிப்பு: பிரபு, சரன்யா

கூ குகுகூ கூ குகுகூ
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீத காலை எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஓ ஓ ஓ பெண்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்

வானைத் தொட்ட மேகம் இங்கே
பூவை தொட்ட தாகம் என்ன
தேனைத் தொட்ட வண்டு இங்கே
காற்றில் விட்ட செய்தி என்ன
தங்க மலைச் சாரலெந்தன் ஊரோ
இங்கு என்னை கைது செய்வார் யாரோ
அன்பாய் ஒரு தெய்வம் வந்து
தாலாட்டுதே
நெஞ்சில் புது சந்தம்
வந்து நீருற்றுதே
கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்
என்னை இன்று கண்டு கொண்டேன்

ஓ ஓ ஓ பெண்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நானிருந்த கூண்டுக்குள்ளே
ராகம் சொல்ல யாருமில்லே
ஞாபகத்தை விட்டுவிட்டேன்
கீதம் இங்கே காணவில்லே
ஊமை என்னை பேச வைத்தார் யாரோ
உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ
மன்னன் என்று தென்றல் என்னை தாலாட்டுதே
துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே
பச்சை நிற பாய் விரித்து கச்சேரி தான்
சோலைக்குள்ளே

ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதேவியாழன், 19 ஏப்ரல், 2012

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

ஒரு அழகான பாடல். அப்போதைய கால கட்டத்தில் அரசியல் அர்த்தமுள்ள பாடலும் கூட. கவிஞர் சரியாக இந்த காதல் பாடலை பயன்படுத்திக் கொண்டார் என்பார்கள்.


திரைப் படம்: பட்டணத்தில் பூதம் (1967)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: R கோவர்தனம் (நன்றி திரு நாகராஜன்)
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயாhttp://www.divshare.com/download/15140852-089
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே

நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ

காலம் மாறினால் காதலும் மாறுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ

மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன்
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆ ஆ ஆ ஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

திங்கள், 16 ஏப்ரல், 2012

காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

எல்லா வகையிலும் இளமை ததும்பும் ஒரு பாடல். வசீகிக்கிறது.


திரைப் படம்: பெண்னொன்று கண்டேன் (1974)
நடிப்பு: முத்துராமன், பிரமிளா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: S P B , சுசீலா
இயக்கம்: கோபு
காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

இன்னும் என்ன தட்டிக் கழிக்க இதயம் உண்டு கொட்டியளக்க...


வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது...

வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது...

ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது உறவில் இன்பம் அள்ளித் தந்தது...

காத்திருந்தேன் கட்டியணைக்க...

கன்னி இதழில் முத்து பதிக்க...

பூந்துகில் மூடிய பைங்கிளி மேணியை நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது ஏன் ஏன் ஏன்...

மாதுளம் என்பது மாங்கனி போன்றது காதலன் கைப் பட பொங்கி வழிந்தது தேன் தேன் தேன்...

தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என்று நான் துடித்தேன் இந்த வேளையிலே...

நான் தரவோ இல்லை நீ தரவோ என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே

காத்திருந்தேன் கட்டியணைக்க...

கன்னி இதழில் முத்து பதிக்க...

மானிடை ஊறிடும் திராச்சையை போல் இரு சேல் இடை பார்த்ததும் காதல் பிறந்ததோ சொல் சொல் சொல்...

பாதரசம் என ஓடிடும் பார்வையில் காதல் ரசம் தரும் கன்னி என் அருகே நில் நில் நில்...

ஆத்திரமோ இல்லை அவசரமோ எனை அணைத்திடவே இந்த நாடகமோ...

நீ அறிவாய் அதை நான் அறிவேன் இதில் கேள்விகள் நூறு கேட்கனுமோ...

காத்திருந்தேன் கட்டியணைக்க

கன்னி இதழில் முத்து பதிக்க...

இன்னும் என்ன தட்டிக் கழிக்க

இதயம் உண்டு கொட்டியளக்க...

காத்திருந்தேன் கட்டியணைக்க

சனி, 14 ஏப்ரல், 2012

முன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்

வழக்கமான இனிமைக் குரல்கள் படு குசும்பான கவிதை வரிகளை அழகான இசையில் பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: எங்களுக்கும் காதல் வரும் (1975)
நடிப்பு: ரவிசந்திரன், காஞ்சனா
இயக்கம்: விட்டல்
இசை: விஜய பாஸ்கர் அல்லது சங்கர் கணேஷ்முன்னிரவு நேரம்
உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஹா ஹா

இன்னொருவன் காண
என் பொன்னுடலும் நான
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஹா ஹா

முன்னிரவு நேரம்
உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஹா ஹா

இன்னொருவன் காண
என் பொன்னுடலும் நான
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஹா ஹா

காதல் பொல்லாதது

காவல் இல்லாதது

காதல் பொல்லாதது

காவல் இல்லாதது

பருவம் தூங்கிடும் பூங்கொடியில்
பறிக்க ஏங்கிடும் மாங்கனிகள்

ஒருவன் பார்க்கலாம் மறைந்திருந்து
உனக்குத் தான் இந்த தனி விருந்து

இருவர் ஒருவராய் இணைந்திருந்து

இரவெல்லாம் தழுவலாம்

இதழ்களால் எழுதலாம்

முன்னிரவு நேரம்
உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஹா ஹா

இன்னொருவன் காண
என் பொன்னுடலும் நான
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஹா ஹா

ஊரில் ஒசைகள் அடங்கையிலே
உறவின் ஆசைகள் தொடங்கையிலே

கூந்தல் தொடங்கி கால் வரையும்
இளமை படிக்கும் நூல் நிலையம்

நீயும் நானும் என்றிருக்க

விவரமாய் படிக்கலாம்

விடிந்தபின் முடிக்கலாம்

முன்னிரவு நேரம்
உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஹா ஹா

இன்னொருவன் காண
என் பொன்னுடலும் நான
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஹா ஹா

காதல் பொல்லாதது

காவல் இல்லாதது

காதல் பொல்லாதது

காவல் இல்லாதது

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அனைவருக்கும் எமது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தற்போது Div Share இல் பாடலை ஏற்றி பதிவதில் ஏதோ பிரச்னை இருப்பதால் மாற்று ஏற்பாடுகளுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டும் முழுமையாக வருவேன். அன்பர்கள் அதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாள் இருந்தேன் தனியாக ஒரு பெண் நடந்தாள் அருகே


1967 களில் மிகப் பிரபலமான ஆங்கிலப் பாடலான இந்த பாடல் உலகின் பல வித மொழிகளில் மொழி மாற்றம் செய்து மகா வெற்றி பெற்றது. (கொலைவெறி பாடலுக்கு முன்னரே). வேதாவும் தன் பங்குக்கு மிக இனிமையாக இந்தப் பாடலை வழங்கியுள்ளார்.

திரைபடம்: எதிரிகள் ஜாக்கிரதை (1967)
பாடியவர்கள்: T M S, P சுசீலா, வசந்தா
பாடல்: கண்ணதாசன்
இசை: வேதா
நடிப்பு: ரவிசந்திரன், R S மனோகர், L. விஜயலக்ஷ்மி

ல ல லல லல ல ல லல லல
ஒரு நாள் இருந்தேன் தனியாக
ஒரு பெண் நடந்தாள் அருகே
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே

அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
சபாஷ்டா கண்ணா
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா

குலுங்கும்  வசந்தம் அவளானாள்
குவளை மலராய் மலர்ந்தாள்
தவழும் தென்றல் அவனானான்
தழுவும் மலரை மணந்தான்

அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா

பழகும் காதல் பரிசாக
பாவை கேட்டாள் உன்னை
கேட்டேன் கொடுத்தார் துணையாக
எடுத்தேன் அணைத்தேன் அன்னை

அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
லல ல ல ல லல ல ல ல

வியாழன், 12 ஏப்ரல், 2012

உலக மகா திரைப் படம் 3


நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!

3 என்கின்ற தமிழ் படம் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்போது இந்தக் திருக்குரள் தான் நினைவுக்கு வந்தது.  எந்தவித குறிக்கோளும் இல்லாத தமிழ் கலாச்சாரத்தை தூக்கி காலடியில் போட்டு மிதிக்கும் ஒரு அருமையான திரைப் படம். தமிழ் ஆர்வாளர்களோ மற்றும் ஏனைய எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிக்கும் நல்லவர்களோ ஏன் இது பற்றி வாயே திறக்கவில்லை என்று புரியவில்லை. பணக்காரர்கள் வம்பு நமக்கு வேண்டாம் என்று சும்மா இருந்துவிட்டார்களோ? பணம் நம்மிடம் இருக்கிறது என்பதற்காக இப்படி எல்லாம் எடுக்கலாம் என்றால் அவர்கள் வேறு என்ன செய்தாலும் நாம் சொல்வதற்க்கு ஏதுமில்லை. Pub இல்  தாலி கட்டி கல்யாணம், கணவனும் மனைவியும் சேர்ந்து தண்ணி அடிப்பது, மனைவி கணவனை அறைவது, அடுத்தவனுக்கு எதிரே கணவனை நக்கு நக்கு என்று நக்குவது என்று இப்படி புல்லரிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த இனிய தமிழ் படமாக அமைந்துள்ளது.
இறுதியில் எனக்கு தோன்றியது துக்கிரிக்கு பிறந்த துக்கிரிகள் எடுத்த படம் இப்படித்தான் இருக்கும் என்று. வாழ்க நிறைய சூடு சொரணை உள்ள தமிழன்கள்.

மாலை மலர் பந்தலிட்ட மேகம்


நல்ல அழகான குரல்கள் மற்றும் இசையுடன் ஒரு பாடல்.


திரைப் படம்: அக்கா (1976)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய் கணேஷ், K R விஜயா
இயக்கம்: மதுரை திருமாறன்
http://www.divshare.com/download/17382421-187
ஆ ஆ ஹா ஹா ஹா ஹா
தஸ தஸ மக தஸ மக தஸ
மக தஸ மக தஸ
ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ
மகரி மகரி பமம மகர
மகரி மகரி பமம மகர
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்

கரி மக கரி கரி மக கரி
தப நித தப தப நித தப
ஸா நிதனீ சரிக சனிதபா
கார் கமலக் கூந்தலிலே
இளந்தென்றல் விளையாடி ஓட
களிப் பாக்கு வெற்றிலையை போலே
வரும் செவ்வாயில் இசை பாடல் பாட
கம கக கச ம ம ம ம ம
ம ம தப பப சானீ ச தானீ தானா
இவள் திருமகள் புகழ் தரும் அவள்
துணை என் வாழ்வில் அவன்
தந்த தெய்வீகம்

மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
தம பத நிஸ தனி தப ம தப நீ
தப மக தா தப மக
ரி ரி த த
தம பதனீ நிஸ நித ர தரிஸ
நிதனீ தனி நி பத பத நிஸ
தப ப மக ர ரா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ல ல ல ல

ஞான மழை வீணையுடன்
மகராணி கலைவாணி வந்தாள்
நடமாடும் திருக் கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
க க கக கக
ம ம ம ம ம ம
ம ம பப பா பா பாரீ ரீ
கா நீ சாரி
நகை ஒரு வகை இசை அவள் கதை
அவள் நான் மீட்டும் ஸ்ருங்கார கல்யாணி

மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே


இனிமையான இளையராஜா இசையில் S P Bயும் ஜானகி அம்மாவும் அடக்கி வாசித்திருக்கும் பாடல்.

திரைப் படம்: எனக்குள் ஒருவன் (1984)
நடிப்பு: கமல், ஷோபனா
இசை: இளையராஜா
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: S P B,S ஜானகி

Free Music - Upload Audio Files - Mutham Pothathe


முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்

போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே
ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்

மிக லாவகமாகவும் எளிமையாகவும் இசையமைத்து சிறப்பாக பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: மாலதி (1970)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெமினி, சரோஜாதேவி

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்
அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்

உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே - இல்லைக்
கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே
யாரும் சொல்லித் திரியாத இன்பக் கலையே - அதை
அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்

என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் - அங்கு
வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் - அங்கு
காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

பாவை நீ மல்லிகை பால் நிலா புன்னகை

மிகச் சாதாரணமான பாடல் தான் ஆனாலும் இனிமையான இசையும் குரலும் பாடலை நன்றாக மெருகேற்றியுள்ளது.திரைப் படம்: தெய்வீக ராகங்கள் (1980)

இயக்கம்: A வீரப்பன்

இசை: M S விஸ்வனாதன்

பாடல்: புலமைபித்தன்

குரல்கள்: P ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
பாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வைமாதமோ கார்த்திகை

மையலில் காரிகை

மன்மதன் பண்டிகை

மாலையில் காதலின் ஒத்திகைஅந்த வானோரும் காணாத எழில் மேனகை

தமிழ் தேனூறும் சொல் பேசும் அமுதாம்பிகை

அந்த வானோரும் காணாத எழில் மேனகை

தமிழ் தேனூறும் சொல் பேசும் அமுதாம்பிகை

வானிலோர் தாரகை வந்ததோ கன்னிகை

பூவுடல் மாளிகை தேவையோர் நாழிகைவிழி மை தீட்ட தேடும் கை அது தூரிகை

சுகம் மாறாமல் கூடும் கை மணவாளன் கை

விழி மை தீட்ட தேடும் கை அது தூரிகை

சுகம் மாறாமல் கூடும் கை மணவாளன் கை

பாவையோ ஓர் வகை பண்புகள் நால்வகை

அம்புகள் ஐவகை அல்லவோ என் பகைபாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வைஒரு தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை

அதில் தேனூற நீ பாடும் இசை ஏழ்வகை

ஒரு தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை

அதில் தேனூற நீ பாடும் இசை ஏழ்வகை

சேல்விழி வேல்வகை சிற்றிடை நூல்வகை

தாங்கியே வந்த கை வாங்குமோ வாடகைபாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வைமாதமோ கார்த்திகை

மையலில் காரிகை

மன்மதன் பண்டிகை

மாலையில் காதலின் ஒத்திகை

திங்கள், 2 ஏப்ரல், 2012

வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே


அருமையான பாடல்.  S P B அனைத்து வித வித்தைகளையும் இந்தப் பாடலில் காட்டியுள்ளார். ஜனரஞ்ஜகமான பாடல். இளையராஜாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

திரைப் படம்: உயர்ந்த உள்ளம் (1985)
இயக்கம்: S P  முத்துராமன்
நடிப்பு: கமல், அம்பிகா
பாடல்: வாலி


வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியெனின் குடி வாழ நலம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து ஹா ஹா பொங்கலிட்டாள்
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாட்க்ஷியோ மீனாக்ஷியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா

நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்
சபாஷ்
ஆ ஆ ஆ ஆ ஹா ஆ ஆ ஆ ஹா  ஆ ஆ ஆ
தக்தி தரி நிஸா கரி நிஸா கரி நிஸா ரி ரி ரி ரி ரி த்ப ம ச திட தப திட தப சனி  ச ச ச ச சா சா ப ப ப ப ப சரி சரி சரி சரி ரி ரி ரி ரி ரி ரி ரிகரிச ரிகரிச ரிகரிச ப ப ப ப ம ம ம ம ம த த த த நி நி நி நி சப்தப்த  நிசப்த நிசானி ரிகரி நின்னி தன்னிப சனித
ஆகா ஆகா ஆகா
ப ப ப ப ப ப ட ட ட ட ட ட நி நி நி நி நி ச
ப ப ப ப ப ப ட ட ட ட ட ட நி நி நி நி நி ச

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை இதழில் வழிய இளமை விளைய
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே ஹாஹா
அடியெனின் குடி வாழ நலம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ