பின்பற்றுபவர்கள்

சனி, 29 ஆகஸ்ட், 2015

தங்கக் கிளியே மொழி பேசு..Thanga kiliye mozhi pesu..


OPENDRIVE update செய்திருக்கிறார்கள். audio சரியாக அமையவில்லை. மன்னிக்கவும். விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறேன். அதுவரை காண்னோளியில் ரசியுங்கள்.

சீர்காழி கோவிந்தராஜன்:
அன்றைய காலத்தில்,’நீ அல்லால் தெய்வம் இல்லை ,எனது நெஞ்சே நீ வாழும் எல்லை ,முருகா !..’ என்று பாடி இறுதி வரை பல தெய்வப் பாடல்கள் தந்தவர். இவர் தமிழ் திரை வானிலும் பல இன்னிசை பாடல்களை நமக்குத் தந்தவர். எனக்குத் தெரிய இவரது முதல் திரைப் பாடலாய் நான் ரசித்தது , ‘அமுதும் தேனும் எதற்கு ...’ தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில். உயரிய ராகத்தில் ,தெளிவான உச்சரிப்பில், கணீரென்று அன்று பாடியது இவர் ஒருவரே. அந்த இடத்தை இன்னும் யாரும் பிடிக்கவில்லை என்றே சொல்லலாம். பிறகு வரிசையாக, ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ... ‘ நல்லவன் வாழ்வானிலும், ‘தங்கக் கிளியே மொழி பேசு ...’ வீரக்கனல், ‘செங்கனிவாய் திறந்து சிரித்திடுவாய் .....’இது, யானைப் பாகனில்.. தத்துவப் பாடலாய் ,’ உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதேங்கே சொல் என் தோழா.....’ மன்னாதி மன்னன்.; ’சமரசம் உலாவும் இடமே...’ ரம்பையின் காதல். ‘சிரிப்பவர் சில பேர் அழுபவர் பல பேர்....‘ சபாஷ் மாப்பிள்ளே, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ’நீர்க்குமிழியை மறக்க முடியுமா....! நாட்டுப் பாடல்களை திரையில் இவர் பாடிய, ‘ ஆத்துல தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க, ,காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன் கண்ணம்மா! ...வண்ணக் கிளியிலும், ‘பட்டணந்தான் போகலாமடி... ’எங்க வீட்டு மகாலக்ஷ்மியில் பாடிக் களித்தவர். ‘கண்ணே வண்ணப் பசுங்கிளியே .,கண்ணே என் தாரகையே கண்ணு றங்காயோ....’யானை வளர்த்த வானம பாடி ...நெஞ்சை இன்னும் தாலாட்டுகிறது. அறுபடை வீடு கொண்ட.....முருகனைத் தொடர்ந்து , கர்ணனைக் கொன்ற பாவியாய் கண்ணபிரானை மனம் உருகி பாட செய்த,’உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...... இவர் பாடல்களை கேட்பவர்க் கெல்லாம் விளங்கும். ‘தொட்ட இடம் துலங்க வரும் தாய்க் குலமே வருக......பாடல், ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி......இவர்தம் பாடல் மனதில் நிழலாடாத நெஞ்சமில்லை.
 நன்றி: tamilenkalmoossu.blogspot.in 

தமிழின் இனிமையை கூட்டும் பாடல் வரிகள்.

திரைப் படம்: வீரக் கனல்
பாடியவர்கள்:சீர்காழி கோவிந்தராஜன், P சுசீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, அஞ்சலி தேவி
இயக்கம்: G K ராமு
தங்கக் கிளியே மொழி பேசு
சர்க்கரை இதழால் கவி பாடு
தங்கக் கிளியே மொழி பேசு
சர்க்கரை இதழால் கவி பாடு
தங்கக் கிளியே மொழி பேசு

சிங்கத் தமிழன் மார்பினிலே
சிரிக்கும் மயிலே விளையாடு
சிங்கத் தமிழன் மார்பினிலே
சிரிக்கும் மயிலே விளையாடு
சிங்கத் தமிழன் மார்பினிலே

வேலில் வடித்த கண்ணாலே
மேனியில் வளரும் கலையாலே
வேலில் வடித்த கண்ணாலே
மேனியில் வளரும் கலையாலே
பாலில் பிழிந்த சொல்லாலே
பருவம் பொங்கும் சிலை போலே
தங்கக் கிளியே மொழி பேசு

அணைக்கும் காதல் கைகளிலே
அன்னக் கொடி போல் உறவாடு
அணைக்கும் காதல் கைகளிலே
அன்னக் கொடி போல் உறவாடு
படைகளை வென்ற தோள்களிலே
பறவையைப் போல இசை பாடு 
சிங்கத் தமிழன் மார்பினிலே
சிரிக்கும் மயிலே விளையாடு
சிங்கத் தமிழன் மார்பினிலே

கன்னம் என்பது பழத் தோட்டம்
கண்ணும் முகமும் மலர் தோட்டம்
கன்னம் என்பது பழத் தோட்டம்
கண்ணும் முகமும் மலர் தோட்டம்
மின்னும் கனியிதழ் சிந்தும் புன்னகை
அன்பெனும் காதல் சுவையூட்டும் 
தங்கக் கிளியே மொழி பேசு

அன்று கலந்தோம் கரையினிலே
இன்று கலந்தோம் உயிரினிலே
அன்று கலந்தோம் கரையினிலே
இன்று கலந்தோம் உயிரினிலே
இன்பக் கடலில் அன்புப் படகில்
என்றும் வாழ்வோம் உலகினிலே
தங்கக் கிளியே மொழி பேசு
சர்க்கரை இதழால் கவி பாடு

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே


சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே

திரைப்படம்: திருவருட்செல்வர் (1967)
இயக்குனர்: ஏ. பி. நாகராஜன்
நடிப்பு: சிவாஜி கணேசன், பத்மினி
இசையமைப்பு: கே. வி. மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்

பாடியவர்: டி எம் எஸ்Music podcasts - Music podcasts -பித்தா பிரைசூடி பெருமானே அருளாளா
எத்தாள் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லுர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலானேன்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய
இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே
இறைவா
சித்தம் எல்லம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

இறைவா

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

விமானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் போது ரொம்ப நேரம் செய்ய ஒன்றுமில்லாமல் பார்க்க ஆரம்பித்த படம். ஓகே ஓகே தான். நீண்ட நாட்கள் கழித்து மனத்தில் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துக் கொண்ட A R ரஹ்மான் பாடல். 
சமீபத்தில் சைவம் படத்தில் இது போல் ஒருமையான பாடல் கேட்டேன். அதற்கு பிறகு இது. திகட்டாத பாடல்.
K S சித்ரா...Excellent...

திரைப்படம்: OK கண்மணி அல்லது ஓ காதல் கண்மணி? (2015)
இயக்கம்: மணிரத்தினம் 
பாடியவர்கள் : A R ரஹ்மானுடன் K S சித்ரா 
பாடல்: வைரமுத்து 
நடிப்பு: பிரகாஷ்ராஜ், சல்மான், நித்யா மேனன்.
இசை: A R ரஹ்மான் 
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் 

ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின் உனையே தருவாய்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

காற்றில் தொலைந்தேன் வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளி யாய் வந்தனை

காற்றில் தொலைந்தேன் வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளி யாய் வந்தனை

எதனில் தொலைந்தால்  எதனில் தொலைந்தால்

நீ 
நீ
நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை

வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த் தனை

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை

வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த் தனை

எதனில் வீழ்ந்தால்
ஆ ஆ ஆ 

எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் 

ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை


வியாழன், 6 ஆகஸ்ட், 2015

திரும்பி வா ஒளியே திரும்பி வா thirumbi vaa oliye thirumbi vaa

விஸ்வநாதன், கண்ணதாசன், டி  எம் எஸ், சுசீலா மற்றும்  எம் ஜி யார் கூட்டணியில் மற்றும் ஒரு இனிமை  பாடல். கேட்க கேட்க தெவிட்டாத பாடல். பாடலின்  வரிகள் அனைத்தும் முத்துக்கள்.

திரைப்படம்: நாடோடி (1966)
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: ராமகிருஷ்ண பந்துலுதிரும்பி வா ஒளியே
திரும்பி வா
விரும்பி வா
என்னை விரும்பி வா
திரும்பி வா
ஒளியே திரும்பி வா
விரும்பி வா
என்னை விரும்பி வா

இட்ட அடி கனிந்திருக்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிர்ந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க

திரும்ப வா
அறிவே திரும்ப வா
திரும்பி வா
ஒளியே திரும்பி வா

கன்னி விழி திறந்திருக்க
காதல் வழி புரிந்திருக்க
நல்ல மனம் அழைத்திருக்க
நாலு குணம் தடுத்திருக்க

திரும்ப வா
அறிவே திரும்ப வா
திரும்பி வா
ஒளியே திரும்பி வா

கண் படுவதில் பட்டு தேறும்
கை தொடுவதை தொட்டுத் தீரும்
கண் படுவதில் பட்டு தேறும்
கை தொடுவதை தொட்டுத் தீரும்
இடை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய் மொழி கூறும்
இடை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய் மொழி கூறும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்

திரும்பி வா
ஒளியே திரும்பி வா
திரும்ப வா
அரிவே திரும்ப வா

ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
இள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்கும்
இள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்கும்


திரும்ப வா
அறிவே திரும்ப வா
திரும்பி வா
ஒளியே திரும்பி வா
திரும்பி வா