பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

எனக்காகவா நான் உனக்காக வா enakaaga vaa naan unakkaaga vaa

மனம் மயக்கும் K ஜமுனாராணி அவர்களின் குரலில் மீண்டும் மீண்டும் மனம் மயக்கும் ஒரு பாடல். அருமையான குரல்கள் தேர்வு. சிவாஜிக்காக தாராபுரம் சுந்தரராஜன் குரல் கொடுக்கவில்லை. பாடும் குரல்கள் பின்புலமாக ஒலிக்கிறது ஒரு நல்ல முடிவு. வித்தியாசமான, நவீன பின்னணி இசை.
பாடல் காட்சி தந்துதவிய சிட்டுக்குருவிக்கு நன்றி.

திரைப் படம்: செல்வம் (1966)
இசை: K V மகாதேவன்
பாடல்: வாலி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
பாடியவர்கள்: தாராபுரம் சுந்தரராஜன், K ஜமுனாராணிவா வா வா வா வா வா
எனக்காகவா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா

எனக்காகவா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா

எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா
எனக்காக வா நான் உனக்காக வா

இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய
இதழோரம் தேனும் பாய
இதழோரம் தேனும் பாய
எனக்காக வா நான் உனக்காக வா

தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தணல் மீது புழுவோ என்று
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
எனக்காக வா நான் உனக்காக வா

மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க

மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
மடி மீது நீ தூங்க
வா வா வா

நீராட நதியா இல்லை

நிழல் தேட இடமா இல்லை

பசியார உணவா இல்லை

பகிர்ந்துண்ண துணையா இல்லை

எனக்காகவா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா
எனக்காக வா நான் உனக்காக வா

புதன், 29 அக்டோபர், 2014

பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் poonthendrale nalla neram kaalam serum

அழகான பாடல். ஜெயச்சந்திரன் குரல் சில பாடல்களில் தனி வசீகரம்தான்.
இது ரஜினிகாந்தின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம்.

திரைப் படம்: புவனா ஒரு கேள்விக் குறி ()
இயக்குனர்:  எஸ். பி. முத்துராமன்
இசை: இளையராஜா
நடிப்பு: ரஜினி, சுமித்ரா, சிவகுமார்
பாடல்: பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

ல ல ல ல ல ல ல
ந ந ந ந ந ந ந ந ந ந

பூந்தென்றலே
நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா

பூந்தென்றலே
நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா

பூந்தென்றலே


பார்வை சொல்லும் ஜாடை
என்ன தேவை என்பதோ
கண்ணான ராஜா


ஏ கண்ணான ராணி


தோளில் உன்னை சாய்த்து
அந்த அர்த்தம் சொல்லவோ

பொன்னான ராணி


ஏ கண்ணான ராஜா

பாலில் நெய்த இளவேனிர்
பருவம் விளையாடும்

பாலில் நெய்த இளவேனிர்
பருவம் விளையாடும்


பொன் மேடை மேனியெங்கும்
நாதம் உருவாகும்


என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்


என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்


பூந்தென்றலே
நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா

பூந்தென்றலே


தாழம்பூவின் வாசம்
உந்தன் தேகம் கொண்டதோ

கண்ணான கண்ணே


ஏ கண்ணான கண்ணா

வாசம் கண்ணின் நேசம்
கொள்ளும் சொந்தம்
வந்ததோ கண்ணான கண்ணா

ஏ கண்ணான கண்ணே

ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்
ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்


என்னாளும் பாவை உள்ளம்
காதல் பண் பாடும்


என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்


என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்


பூந்தென்றலே
நல்ல நேரம் காலம் சேரும்


பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா


பூந்தென்றலே


ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையை புடிச்சான் antha mappillai kaathalichan kaiyai

எம் ஜி யார் நடனம் ஆடிய மிக சில பாடல்களில் இதுவும் ஒன்று. மிகவும் பழைய (மதுரை வீரன் போன்ற படங்கள்) படங்களில் பிரமாதமாக நடனமாடியிருக்கிறார். ஆனாலும் அரசியலுக்கு வந்த பின் சில பாடல்களில் மேலோட்டமாக நடனம் ஆடியிருப்பார்.


திரைப்படம்: பணம் படைத்தவன்(1965)
இயக்கம்: T R ராமண்ணா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: எம் ஜி யார், K R விஜயா
பாடல்: வாலி
குரல்கள்: டி எம் எஸ், P சுசீலா


ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம் ம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையை புடிச்சான்

என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன்

பின்னால் சென்றேன்

வா வா என்றான்

கூடவே வா வா என்றான்


அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையை புடிச்சான்

என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன்

பின்னால் சென்றேன்

வா வா என்றான்

கூடவே வா வா என்றான்


ஊரடங்க காத்திருந்தான்

ஒய்வில்லாம பார்த்திருந்தான்

ஊரடங்க காத்திருந்தான்

ஒய்வில்லாம பார்த்திருந்தான்

பால் பழத்தை வாங்கி வந்தான்

பள்ளியறையின் வாசல் வந்தான்

வெட்கத்திலே நானிருந்தேன்

பக்கத்திலே தானிருந்தான்


அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையை புடிச்சான்

என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன்

பின்னால் சென்றேன்

வா வா என்றான்

கூடவே வா வா என்றான்


கண்ணுரங்க பாய் விரிச்சான்

கொடி இடையில் காய் பறிச்சான்

கண்ணுரங்க பாய் விரிச்சான்

கொடி இடையில் காய் பறிச்சான்

குத்து விளக்கைக் கொரைச்சி வைச்சான்

கொதிச்சிருந்தேன் குளிர வைத்தான்

வெட்கத்திலே நானிருந்தேன்

பக்கத்திலே தானிருந்தான்ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

மன்னளந்த பார்வை என்ன

மயங்க வைத்த வார்த்தை என்ன

மன்னளந்த பார்வை என்ன

மயங்க வைத்த வார்த்தை என்ன

முத்து நகையின் ஓசை என்ன

மூடி வைத்த ஆசை என்ன

என்னருகே பெண்ணிருந்தா

பெண்ணருகே நானிருந்தேன்


அந்தப் பூங்கொடி பூத்திருந்தா

காத்திருந்தா

என்னை பார்த்திருந்தா

அங்கே கண்ணால் கண்டேன்

பின்னால் சென்றேன்

நீ தான் என்றேன்

வாழ்வே நீ தான் என்றேன்


கையருகில் பாவை வந்தாள்

கண்ணிரண்டில் மாலையிட்டாள்

கையருகில் பாவை வந்தாள்

கண்ணிரண்டில் மாலையிட்டாள்

முல்லை விரிப்பால் வண்ணம் குழைத்தாள்

முத்துச் சிரிப்பால் வாவென்றழைத்தாள்

அம்மம்மா என்ன சொல்ல

அத்தனையும் கண்டதல்ல


அந்தப் பூங்கொடி பூத்திருந்தா

காத்திருந்தா

என்னை பார்த்திருந்தா

அங்கே கண்ணால் கண்டேன்

பின்னால் சென்றேன்

நீ தான் என்றேன்

வாழ்வே நீ தான் என்றேன்அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையை புடிச்சான்

என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன்

பின்னால் சென்றேன்

வா வா என்றான்

கூடவே வா வா என்றான்

வெள்ளி, 24 அக்டோபர், 2014

என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் ennai muthal muthalaga partha

இன்று மறைந்த லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களுக்கு அஞ்சலியாக இந்தப் பாடல். கம்பீரமான நடிகர். அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் தமிழர்களை கவர்ந்தவர்.

படம்: பூம்புகார் (1964)

இசை: S ஸுதர்சனம்
இயக்கம்: நீலகண்டன்
நடிப்பு: விஜயகுமாரி, S S R
படியவர்கள்: T M S, S ஜானகி

என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்

என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்


நான் உன்னை நினைத்தேன்


என் கைகள் உன் மேல் பட்ட போது என்ன உணர்ந்தாய்


நான் என்னை மறந்தேன்

நான் என்னை மறந்தேன்


என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்


நான் உன்னை நினைத்தேன்


கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா

கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா


ஏகாந்தம் பறந்தது

ஏகாந்தம் பறந்தது


இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா


இல்லை சொர்க்கம் தெரிந்தது

சொர்க்கம் தெரிந்தது


ஹா ஹா


என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்


நான் உன்னை நினைத்தேன்


காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே

காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே

காதலுக்கு பாடம் சொல்ல பிறந்து வந்தவரே


குளிர் கால காற்று போலே குழைந்து வந்தவளே

குளிர் கால காற்று போலே குழைந்து வந்தவளே

கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே


என்னை முதல் முதலாக பார்த்த போது


உன்னை நினைத்தேன்


நான் உன்னை நினைத்தேன்

புதன், 22 அக்டோபர், 2014

நான் சிரித்தால் தீபாவளி

தீபாவளிக்கும் இந்தப்பாடலுக்கும் சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும், இந்தத் தீபாவளித் திருநாளிலாவது நாம் இது போல சிரித்து சந்தோஷமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்
யாரிசைத்தாலும் இன்னிசை பாடும்....
படத்தில் பாடுவது விபசாரிகள் போல காட்டினாலும், அழகான கவிதை.

அனைவருக்கும் எங்களது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

திரைப்படம் : நாயகன் (1987)
நடிப்பு: கமல், சரண்யா
பாடியவர்கள்: K ஜமுனா ராணி, M S ராஜேஸ்வரி
இசை: இளையராஜா
பாடல்: புலமைபித்தன்நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை

வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே

காயம் என்றால் தேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே

காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

 ல ல ல ல ல ல

கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது

யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்
யாரிசைத்தாலும் இன்னிசை பாடும்

மீட்டும் கையில் நானோர் வீணை
வானில் வைரம் மின்னும் வேலை
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

செவ்வாய், 21 அக்டோபர், 2014

திங்கள், 20 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்கள்


அழகிய கண்ணே உறவுகள் நீயே azhagiya kanne uravugal neeye

அழகான பாடல். ஏனோ இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் மனதை கவரவில்லை. இதற்கும் ஜேன்ஸியை வைத்து ஒரு சிறிய இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. அருமை.

திரைப்படம் : உதிரிப்பூக்கள் (1979)
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பாடல் : கண்ணதாசன்
நடிப்பு: விஜயன், அஸ்வினி
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயுமல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே உறவுகள் நீயே


சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்

அழகிய கண்ணே உறவுகள் நீயே

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

வெள்ளி, 17 அக்டோபர், 2014

மழையே மழையே இளமை முழுதும் mazhaiye mazhaiye ilamai

நீண்ட வருடங்கள் கழித்து இவ்வளவு மழையில் நான் சென்னையில் இருப்பது இன்றுதான். முன்னர் இருந்திருக்கிறேன், ஆனால் அனுபவித்து இருப்பது இன்றுதான். மற்றைய சமயங்களில் வேலைகளுக்கு நடுவே மழை பெய்தால் ஏன் இந்த மழை என எண்ணத் தோன்றும். ஆனால் இன்று பலருக்கு இந்த மழை தொந்திரவாக இருந்தாலும் எனக்கு சுகானுபவமே.
எத்தனை இளமைகளை நனைக்கிறதோ?

திரைப் படம்: அம்மா (1982)
நடிப்பு: பிரதாப் போத்தன், சரிதா
இயக்கம்: தெரியவில்லை
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ் பி பி, ஜானகி


ல ல ல ல ல ல ல ல

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

ல ல ல ல ல ல ல

விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை

நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்

கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

ல ல ல லல்ல லல்ல லல்ல லாலல

நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
ப பாப்பா ப பாபா

மார்கழி மாதத்து வேதனை
நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
மார்கழி மாதத்து வேதனை

மடி மீது சாயும் இந்நேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்

கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
ல ல ல ல ல ல ல ல ல
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ 

புதன், 15 அக்டோபர், 2014

வசந்தமும் நீயே மலர்களும் நீயே vasanthamum neeye malargalum

சங்கர் கணேஷ் இசையில் ஒரு அருமையான பாடல். கவிதை வரிகளுக்கு கண்ணதாசன் சொந்தமாக இருக்கலாம். எஸ்.ஜானகி குரலில் சுகராகம். படக் காட்சி கிடைக்கவில்லை. இதே டெம்போவில் பாடல் காட்சி இருந்திருக்குமா?
கேட்கக் கேட்க திகட்டாத பாடல்.

திரைப்படம்: கண்ணீர் பூக்கள் (1981)
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: ராஜசேகர்
நடிப்பு: விஜயன், ஸ்ரீபிரியா
 
வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே

வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

மாலை நான் மலரானவள்
மார்பில் தேன் நதியானவள்

நாளும் நீ அதில் நீந்தவும்
தேடும் ஓர் கரை காணவும்
நான் உன்னை மார்போடு தாலாட்டலாம்
ஒன்றான நெஞ்சங்கள்
தழுவுவதும் உருகுவதும்
மயங்குவதும் மருவுவதும்
நூறாண்டு காலங்கள்
நாம் காணலாம்
வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே

இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

ஆடை ஏன் கலைகின்றது
ஆசை ஏன் அலைகின்றது
மோகம் ஏன் எழுகின்றது
தேகம் ஏன் சுடுகின்றது
ஏனிந்த மாயங்கள்
யார் தந்தது
ஏழேழு ஜென்மங்கள்
எனதிளமை உனதுரிமை
இது முதல் நாள்
இனி வரும் நாள்
எல்லாமும் பேரின்ப நாளல்லவோ
வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

தீபங்கள் எரிகின்றன
தேகங்கள் இணைகின்றன
ஆரம்பம் இதுவென்றது
ஆனந்தம் வருகின்றது
செவ்வானம் தேன்மாரி பெய்கின்றது
சிங்கார ராகத்தில் இசை எழுந்தது
துயில் கலைந்தது
உயிர் கலந்தது
தனை மறந்தது
காணாத பேரின்பம்
நான் காண்கிறேன்
வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் Senthazham poovil

இனிமையான , இளமையான பாடல்.  கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களுக்கே அமைந்த பாடல். 
இது நடிகரின் சொந்த வாழ்க்கைதான் என்றாலும், பொதுவான வாழ்க்கையில்  வந்துவிட்டதால் இந்த மேற்படி விபரம் எனக்கு தெரிந்தவரை.
நடிகை ஷோபாவின் பரிதாபமான திரையுலக வாழ்கை நமக்கு தெரிந்ததுதான். கொஞ்ச நாட்களே திரையுலகில் இருந்ததால்  அவரைப் பற்றி நிறைய கிசி கிசுக்கள் இல்லை.
இது சரத்பாபு பற்றி நான் கேள்விப் பட்ட ஒரு புது (எனக்கு?) விஷயம். இவர் திரை உலகம் வந்த பின் ரமா பிரபா என்ற நடிகையை மணந்துக் கொண்டார். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும்.
இந்த நடிகை ரமாப்ரபா, ஏற்கனவே நடிகர் சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி. 3 குழந்தைகளுக்கு தாயார். யார் இந்த நடிகர் சண்முகசுந்தரம்? 
கரகாட்டக்காரன் என்ற படத்தில் கனகாவின் தந்தையாக வந்து சிவாஜி போல நடிப்பதாக நினைத்து நம்மை மிரட்டியிருப்பாரே அவரேதான். பாவம்.
இனி பாடலை ரசிப்போம்.

திரைப்படம்: முள்ளும் மலரும் (1978)
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: இளையராஜா

நடிப்பு: ரஜினி, ஷோபா
இயக்கம்:J  மகேந்திரன்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று
வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வியாழன், 9 அக்டோபர், 2014

படிக்க வேண்டும் புதிய பாடம் padikka vendum puthiya paadam

வாத்தியாரைய்யா மற்றும் வாத்தியாரம்மா காதலை பல பாடல்கள் சொல்லியிருந்தாலும் இது தனி இனிமை பாடல். வித்தியாசமான பாடல் வரிகள்.

திரைப் படம்: தாயில்லா பிள்ளை (1961)

குரல்கள்: K ஜமுனாராணி, P B ஸ்ரீனிவாஸ்

இயக்கம்: L V பிரசாத்
 நடிப்பு: கல்யாண்குமார், முத்துக் கிருஷ்ணன், T S பாலையா, நாகேஷ்,  M V ராஜம்மா
பாடல்: மருதகாசி

இசை: K V  மகாதேவன்

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரைய்யா

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரைய்யா

பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா
நான்
படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா
பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா
நான்
படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா

கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு
நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு

ஒட்டும் இரு உள்ளம் தன்னில் பற்றிக் கொண்டது
ஒட்டும் இரு உள்ளம் தன்னில் பற்றிக் கொண்டது
அந்த புத்தம் புது நெருப்பைத் தானே காதல் என்பது
கவிஞர் சொன்னது

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரைய்யா

தன்னை தானே சுற்றிக் கொண்டு இந்த உலகமே
செங்கதிரோனை சுற்றும் சேதி பழைய பாடமே

என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்த உள்ளமே
என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்த உள்ளமே
இன்று உன்னை சுற்றி கேட்கும் பாடம் புதிய பாடமே
புதிய பாடமே

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா

பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரைய்யா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

திங்கள், 6 அக்டோபர், 2014

பூந்தளிர் ஆட பொன் மலர் சூட poonthalir aada pon malar

ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவலான இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் இளையராஜாவால் பெருமை அடைந்தன. இனிமையான பல பாடல்களில் இது மிகவும் அருமை.


திரைப் படம்: பன்னீர் புஷ்பங்கள் (1981)
பாடும் குரல்கள்: எஸ் பி பி, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சுரேஷ், சாந்தி கிருஷ்ணா
பாடல்: கங்கை அமரன்
இயக்கம்: பாரதி-வாசு


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூந்தளிர் ஆட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் மலர் சூட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூந்தளிர் ஆட
பொன் மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும்
புது ராகங்கள்
இனி நாளும்
சுப காலங்கள்
பூந்தளிர் ஆட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் மலர் சூட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ல ல ல ல ல ல
காதலை ஏற்றும்
காலையின் காற்றும்
நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில்
வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே

கோடிகளாசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே
கோலமிட்டதே

தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

பூந்தளிர் ஆட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் மலர் சூட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்ம்

பூ மலர் தூவும் 
பூ மரம் நாளும்
போதை கொண்டு
பூமி தன்னை பூஜை செய்யுதே
பூ விரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே

பூ மழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே
வண்ணம் நெய்யுதே

ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

பூந்தளிர் ஆட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் மலர் சூட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும்
புது ராகங்கள்
இனி நாளும்
சுப காலங்கள்

பாடும்
புது ராகங்கள்
இனி நாளும்
சுப காலங்கள்

சனி, 4 அக்டோபர், 2014

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் ellorum kondaaduvom

இந்தப் பாடலை வண்ணத்தில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கண்ணை உறுத்தாத வண்ணம். அருமை. 
இந்த நன் நாளில் இந்தப் பாடலை நினைவுக் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன். 
என் இனிய இஸ்லாமிய நண்பர்களுக்கு Eid வாழ்த்துக்கள்.

திரைப் படம் : பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: T.M. சௌந்தராஜன், நாகூர் ஹனிபா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, தேவிகா
 
பாடலாசிரியர்: கண்ணதாசன
இயக்கம்: A பீம்சிங்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

கல்லாகப் படுத்திருந்து
கழித்தவர் யாருமில்லை
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பது லாபமில்லை
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே 

ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அதனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்பில்ல, வெளுப்பில்ல
கடவுளுக்கு உருவமில்ல
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணை கண்டு
ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமே
ஆடி முடிக்கையில் 

அள்ளி சென்றோர் யாருமுண்டோ
படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்..

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

வியாழன், 2 அக்டோபர், 2014

வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே vaan meethile inba then mari peyuthe

பாடல் தமிழும் தெலுங்கும் கலந்த தழுங்கு மொழியில் இருப்பதால், பாடல் வரிகள் சில இடங்களில் தவறாக இருக்கலாம். உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே போட்டு பாடிக் கொள்ளுங்கள். வாய் அசைப்புக்கும் பாடல் வரிகளுக்குமே சரியாக வரவில்லை டப்பிங் என்பதனால்.
ஆனாலும் இனிமையான இசையில் இளமையான என் டி ஆர், பானுமதி combination அருமையாக உள்ளது.
இந்த பாடலை ஞாபகப்படுத்தியதற்கு எனது நண்பர், சிந்தனையாளர், கதாசிரியர், கவிஞர் திரு பால கணேஷ்  அவர்களுக்கு எனது நன்றி.

திரைப் படம்: சண்டிராணி (1953)
பாடல்: K D சந்தானம்
இசை: கண்டசாலா
பாடியவர்கள்:கண்டசாலா, பானுமதி
இயக்கம்:பானுமதி
நடிப்பு: ராமராவ், பானுமதி


வான் மீதிலே

வான் மீதிலே

வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

சுகாதீபம் மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மது வண்டு கேளாய்

சுகானந்தம் ஜீவிய கானம் இதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

வசந்தத்திலாடும்
மலர் தென்றல் நீயே

மையல் கொண்டு நாடும்
தமிழ் தென்றல் நானே

நிஜந்தானே என் ஆருயிர்
நீ வாழும் நாள்
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது
மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது

இமைகின்ற போகமும் ஆகாது
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே