பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

எனக்காகவா நான் உனக்காக வா enakaaga vaa naan unakkaaga vaa

மனம் மயக்கும் K ஜமுனாராணி அவர்களின் குரலில் மீண்டும் மீண்டும் மனம் மயக்கும் ஒரு பாடல். அருமையான குரல்கள் தேர்வு. சிவாஜிக்காக தாராபுரம் சுந்தரராஜன் குரல் கொடுக்கவில்லை. பாடும் குரல்கள் பின்புலமாக ஒலிக்கிறது ஒரு நல்ல முடிவு. வித்தியாசமான, நவீன பின்னணி இசை.
பாடல் காட்சி தந்துதவிய சிட்டுக்குருவிக்கு நன்றி.

திரைப் படம்: செல்வம் (1966)
இசை: K V மகாதேவன்
பாடல்: வாலி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
பாடியவர்கள்: தாராபுரம் சுந்தரராஜன், K ஜமுனாராணிவா வா வா வா வா வா
எனக்காகவா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா

எனக்காகவா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா

எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா
எனக்காக வா நான் உனக்காக வா

இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய
இதழோரம் தேனும் பாய
இதழோரம் தேனும் பாய
எனக்காக வா நான் உனக்காக வா

தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தணல் மீது புழுவோ என்று
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
எனக்காக வா நான் உனக்காக வா

மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க

மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
மடி மீது நீ தூங்க
வா வா வா

நீராட நதியா இல்லை

நிழல் தேட இடமா இல்லை

பசியார உணவா இல்லை

பகிர்ந்துண்ண துணையா இல்லை

எனக்காகவா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா
எனக்காக வா நான் உனக்காக வா

2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

இத்திரைப்படம் 1966 ஆம் ஆண்டு வெளியானது. நல்ல பொழு போக்குப் பாடம்.

இதே பாடலை - முழுமையாக - இயக்குனர் தான் இயக்கிய வாழையடி வாழை (1972 வெளியானது) படத்தில் உபயோகப் படுத்தியிருப்பார்.

Unknown சொன்னது…

புதிய விபரங்கள். நன்றி சார்.

கருத்துரையிடுக