பின்பற்றுபவர்கள்

திங்கள், 20 அக்டோபர், 2014

அழகிய கண்ணே உறவுகள் நீயே azhagiya kanne uravugal neeye

அழகான பாடல். ஏனோ இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் மனதை கவரவில்லை. இதற்கும் ஜேன்ஸியை வைத்து ஒரு சிறிய இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. அருமை.

திரைப்படம் : உதிரிப்பூக்கள் (1979)
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பாடல் : கண்ணதாசன்
நடிப்பு: விஜயன், அஸ்வினி
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயுமல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே உறவுகள் நீயே


சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்

அழகிய கண்ணே உறவுகள் நீயே

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக