பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை

பாடலை முடிக்க மனமேயில்லை. அவ்வளவு இனிமை. குரலும் பாடலும், இசையும் ஒன்றும் சொல்வதற்கில்லை. அனைவரின் திறமையும் இணைந்து மனமகிழ்வு தரும் பாடல். பாடல் காட்சியிலும் நடித்த நடிகர்களை நிறைய காட்டாமல் இயற்கை காட்சிகளை காட்டி வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள்.

இளையராஜா இளம் புயலென தமிழ் திரையுலகில் வலம் வந்த நேரம், K பாலசந்தர், M S விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசன் மூவரும் இணைந்து அவருக்கு போட்டியாக  சிறந்த இன்னிசை மழையாக ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப் பட்டு உண்மையாகவே இன்னிசை மழையாக வெளி வந்த படம்.
ஆனால் இளையராஜா என்ற புயலை தடுக்க முடியவில்லை. பின்னர் பாலசந்தரே இளையராஜாவின் இசையில் பல படங்களை பண்ணினார் என்பது வரலாறு.

திரைப் படம்: நினைத்தாலே இனிக்கும் (1979)
இசை: M S விஸ்வநாதன்
பாடியவர்: எஸ் பி பி
நடிப்பு: கமல், ஜெயப்ரதா
இயக்கம்: K பாலசந்தர்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMDUyODgxNl92T3RGMl83NjU4/What%20a%20waiting%20Ninaithale%20Inikkum.mp3

what a waiting what a waiting
Lovely birds tell my darling
you are watching
you are watching

Love Is But A Game Of Waiting 

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை

பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
பச்சை கிளி சாட்சி சொல்லு

நாத்து வச்சு காத்திருந்தா
நெல்லு கூட வெளஞ்சிருக்கும்

காக்க வச்சு கன்னி வந்தா
காதல் உண்டா
கேட்டு சொல்லு

ம் ம் ம் ம் ம் ம் ம்

what a waiting what a waiting
Lovely birds tell my darling
you are watching
you are watching
Love Is But A Game Of Waiting 

ரூ ரூ ரூ ரூ ரூ 
ப ப ப ப ப 
ரூ ரூ ரூ ரூ 

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை

பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
பச்சை கிளி சாட்சி சொல்லு 


புதன், 29 ஜனவரி, 2014

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

P சுசீலா அம்மாவின் இனிமையான வித்தியாசமான குரல் இந்த பாடலில். அதற்காகவே இந்த பாடலை பலமுறை கேட்கலாம். வேதாவின் இனிமையான இசை.

திரைப் படம்: நான்கு கில்லாடிகள் (1969)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இசை: வேதா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: L பாலு
நடிப்பு: ஜெயசங்கர்,  பாரதி

http://asoktamil.opendrive.com/files/Nl8zMDMxMjAzNl9Nb0w0U19hNTQz/sevaanathil%20oru%20natchathiram.mp3செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத

நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சிந்தனை செய் மனமே

பாடலை கேட்டாலே மனம் அமைதிகொள்ளும். சில பாடல்களுக்கு மட்டுமே இந்த திறம் உண்டு. நிதானமாக நடிகரோடு இணைந்து இனிமையாக உருகிப் பாடியிருக்கிறார் டி எம் எஸ்.
பாடல் வரிகளை எடுத்து எழுதிய போது வரிகளில் ஏதாவது தவறு கண்டால் மன்னிக்க வேண்டும்.

திரைப் படம்: அம்பிகாபதி  (1957)
இசை: G ராமனாதன்
இயக்கம்: P நீலகண்டன்
நடிப்பு: சிவாஜி, பானுமதி
பாடல்: K D சந்தானம்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMDA5OTEwN185aEtjVl9lOTE4/Sinthanai%20sei%20maname.mp3


சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே
தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே

செந்தமிழ் தருள் ஞான தேசிகனை
ஞான தேசிகனை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
செந்தமிழ் தருள் ஞான தேசிகனை
செந்தில்
ஸ்கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே

ஸ்தந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை
ஸ்தந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமரை பரவிய ஷரவணபவ குகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது

ஸ்லோவான பாடல். எஸ் பி பி குரலாகவே தெரியவில்லை. இரண்டு ஜாம்பவான்கள் பாடியும் பாடலில் அவ்வளவாக சுரத்தில்லை. நல்ல வேளையாக பாடல் காட்சி கிடைக்க வில்லை.

திரைப் படம்: வசந்த மலர்கள் (1992)
குரல்கள்: S P பாலசுப்ரமணியம் , K S சித்ரா
இசை: தேவா
இயக்கம்: A R ரமேஷ்
நடிப்பு: ஹரிராஜ் (யார்?), ரேகா??

http://asoktamil.opendrive.com/files/Nl8yOTkxMDU3OV8yVUlYSF81MWRl/Paadatha%20padalai.mp3ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது
காணாத காட்சியை கண்கள் காணும் நாளிது

வந்ததொரு இளைய கன்னி தந்ததொரு சிவரஞ்சனி
இதுவரை இங்கே நிலவை மறைத்தது மேகம்
இவள் வரவாலே இனிமேல் பௌர்ணமி ஆகும்

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது

நீ பார்க்க உனை நான் பார்க்க கண்ணெல்லாம் கவிதை பூக்க

நான் கேட்க இசை தேன் வார்க்க நெஞ்செல்லாம் இனிமை சேர்க்க

நீ எனக்கென நான் உனக்கென பூமியில் பிறந்தோம்

ஏழ் பிறப்பிலும் ஓர் உயிரென சாசனம் வரைந்தோம்

ஒருவர் நெருங்க ஒருவர் மயங்க இதய கதவை இருவரும் திறந்தோம்

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது
காணாத காட்சியை கண்கள் காணும் நாளிது

உன் பேரை ஒரு கல்வெட்டாய் உள்ளத்தில் எழுதும்போது

பூச்சூடும் இளம் பூஞ்சிட்டாய் பக்கத்தில் உலவும்போது

நீ தழுவிட நான் நழுவிட ஆனந்த மயக்கம்

யார் கொடுப்பது யார் எடுப்பது கேள்விகள் பிறக்கும்

இளைய கிளிகள் சிறகை விரித்து திசைகள் முழுதும் தினசரி பறக்கும்

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது
காணாத காட்சியை கண்கள் காணும் நாளிது

வந்ததொரு இளைய கன்னி தந்ததொரு சிவரஞ்சனி
இதுவரை இங்கே நிலவை மறைத்தது மேகம்

இவள் வரவாலே இனிமேல் பௌர்ணமி ஆகும்

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது
காணாத காட்சியை கண்கள் காணும் நாளிது

செவ்வாய், 21 ஜனவரி, 2014

தங்கமலரே உள்ளமே

அன்பர்கள் மன்னிக்க வேண்டும் கொஞ்சம் பிசி.

இதோ பாடல். பாடலின் ஆரம்ப வரிகளும் சுசீலா அம்மாவின்  குரலும் இணைந்து தாலாட்டு பாடல் போலிருக்கிறது. பாடல் காட்சி, காதல் பாடலாக இருக்கிறது. இனிமையான குரலில் அழகான பாடல்.

திரைப் படம்: தங்க மலர் (1969)
இசை: T G லிங்கப்பா 
குரல்: P சுசீலா 
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி 
இயக்கம்: D S ராஜகோபால் 
பாடல்: கண்ணதாசன் 

http://asoktamil.opendrive.com/files/Nl8yOTI3OTI0OV9QRnRjb19mMmQy/thangamalare%20ullame.mp3


தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே

தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே 
அந்தி பகலாய் எந்தன் மனதில்
அருள் விளங்கும் தெய்வமே
தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே

தூக்கி வைத்த கரம் தனிலே
தாயைக் கண்டேனே
நீ துள்ளி வந்து சிரித்த போது
சேயைக் கண்டேனே

சூடி வைத்த மலர்களில் 
உன் கருணை கண்டேனே
சூடி வைத்த மலர்களில் 
உன் கருணை கண்டேனே

என்னை தொட்டிழுத்து அணைத்த போது
தெய்வம் கண்டேனே
தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே 

எந்த நாட்டில் பொன்னி வெள்ளம்
பெருகி ஓடுமோ
எந்த நாட்டில் கோபுரங்கள்
உயர்ந்து காணுமோ

அந்த நாட்டில் பிறந்து வந்த
தலைவன் அல்லவா
அந்த நாட்டில் பிறந்து வந்த
தலைவன் அல்லவா
அந்த நாட்டில் பிறந்து வந்த
தலைவன் அல்லவா
என்னை ஆள வந்து வாழ வைத்த
இறைவன் அல்லவா 

தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே 
அந்தி பகலாய் எந்தன் மனதில்
அருள் விளங்கும் தெய்வமே
ம்ம்ம்ம்ம் 
ம்ம்ம்ம் 
ம்ம்ம்ம்ம்ம் 
ம்ம்ம்ம்ம்!

வெள்ளி, 17 ஜனவரி, 2014

காமதேவன் ஆலயம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், S.ஜானகி ஆகியோரின் குரலில்

பாக்யராஜின் இசையில் இப்படி ஒரு அருமையான பாடலா? இயக்கம் 

பாலகுமாரன் எனவும் போட்டிருக்கிறார்கள். 

பாடல் காட்சி கிடைக்கவில்லை. ஒரு வேளை வேளை படத்தில் 

இந்தப் பாடலை தவிர்த்துவிட்டார்களோ? நல்ல பாடல்.


படம்: இது நம்ம ஆளூ (1988) 


பாடலாசிரியர்:வாலி

இயக்குநர்:கே.பாக்யராஜ்

பாடகர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், S.ஜானகி 

நடிகர்: கே.பாக்யராஜ், சோபனா

http://asoktamil.opendrive.com/files/Nl8yOTI3ODUwNV96NG55YV9lMzZi/KAAMA%20DEVAN%20aalayam-ithu%20namma%20aalu.mp3காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்
காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை
இரவினில் ராஜ லீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

பன்னீர் பூவில் இவள் தேகம்
அதை பார்க்க பார்க்க வரும் மோகம்

கண்கள் காதல் கதை பேசும்
அவை காம பானங்களை வீசும்

நெஞ்சனை பஞ்சனை இடக்கூடாதோ

கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ

தத்தி வந்த தத்தைக் கிளி
முத்தம் இட்டு முத்துக்குளி

சொர்கத்துக்கு எந்த வழி
சொல்லித் தந்தேன் நல்ல படி

இன்னும் இன்னும் என்று
மனம் ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது

காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை
இரவினில் ராஜ லீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

கட்டில் ராஜ சபை கூடும்
அதிகாலை வேலை வரை நீளூம்

தொட்டால் கை நழுவி போகும்
இந்த தோகை தேவியின் நயம் ஆகும்

ஒத்திகை நித்தம் இனி பார்க்காது

சித்திர முத்திரை இதழ் கேட்காதோ

பஞ்சு மெத்தை இட்டு செல்ல
பட்டு விரல் தொட்டு கொள்ள

நித்தம் உன்னை உச்சரிக்க
முத்தம் உன்னை அச்சடிக்க

மெட்டி சத்தம் மெட்டுச் சொல்ல
பாடவேண்டும் நூறு கவிதைகள்

காமதேவன் ஆலயம்

அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை

இரவினில் ராஜ லீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்

அதில் காதல் தீபம் ஆயிரம்

காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

செவ்வாய், 14 ஜனவரி, 2014

பாவலன் பாடிய புதுமை பெண்ணை பூமியில் கண்டது இன்று

கருத்துகள்  நன்றி: msvtimes.com/forum

மெல்லிசை மன்னரின் நண்பரும் மிகசிறந்த அரசியல் விமர்சகருமான திரு சோ ராமசாமி முதலில் நாடகமாகவும் பின்னர் திரைபடமாகவும் எடுத்த வெற்றி சித்திரம் முகமது பின் துக்ளக்.. 1971 இல் வெளிவந்தது….

இப்படத்தின் பெயரை கேட்டவுடன் பெரும்பாலோருக்கு நினைவு வருவது….அல்லா அல்லா என்ற பாடல்… பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றது…இன்றும் இஸ்லாமிய புனித தினங்களில் இப்பாடலானது கேட்கபடுவது….எம்.எஸ்.வி. யே பாடியது

ஒரு சுதந்திர போராட்ட தியாகி தன் சீடர்களுடன் சேர்ந்து இந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு அறியாமையில் வாழ்கிறார்கள் என்றும் எவ்வளவு முட்டாள்கள் என்றும் ……எளிதாக நம்பிவிடுவார்கள் என்று உணர்த்துவதற்காக ஒரு செயலை செய்வார்கள்... டில்லியை ஆண்ட முகமது பின் துக்ளக் உண்மையில் இறக்கவில்லை என்ற ஒரு மாயையை உண்டாக்கி அவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கி பின்னர் பிரதம மந்திரியாகவும் ஆகிவிடுகிறார்.அவர் நடத்தும் ஆட்சி கேலிகூத்தாகிறது...ஒரு துணை பிரதம மந்திரியை அமர்த்துகிறார். (மனோரமா...அந்த தியாகியின் பெண் )...பதவி ஆசை யாரைத்தான் விட்டது..அவருக்கு அப்பதவி மிகவும் பிடித்துபோக அவர் அதை நன்றாக னுபவிக்கிறார்...ஊழல்கள் செய்கிறார்...அதிகாரத்தை செலுத்துகிறார்….அவர் பிறந்த நாளை மிக விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார்...அச்சமயத்தில் தான் இந்த பாடல் வரும்...

தீர்க்க தரிசி சோ நேற்று இன்று நாளை என நமது அரசியல்வாதிகளை படம் பிடித்துகாட்டியிருப்பார் இந்த படத்தில்.

http://asoktamil.opendrive.com/files/Nl8yODk0NTI3MV9vdVpWQ183ODdj/PAAVALANPAADIYA_MOHAMEDPINTHUUKLAK.mp3

லலலலலலலலல
பாவலன் பாடிய புதுமை பெண்ணை
பூமியில் கண்டது இன்று
பாவலன் பாடிய புதுமை பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய் குலம் தந்த
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று

ல ல ல ல ல

நீ இருக்குமிடம் குடியிருக்கும்
குடி இருக்கும்
குடியிருக்கும்
அன்பு குடியிருக்கும்

நீ இருக்குமிடம் குடியிருக்கும்
அன்பு குடியிருக்கும்
உன் நிழலிருக்குமிடம் ஒளி இருக்கும்
என்றும் ஒளி இருக்கும்
நல்ல ஓளி இருக்கும்

HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU

நாகரீகம் தனை மனம் வெறுக்கும்
உந்தன் மனம் வெறுக்கும்

உண்ணும் உணவில் கூட செந்தமிழ் மணக்கும்
இன்பதமிழ் மணக்கும்

பொன்மாலை பரிசுகள் தேவையில்லை என
நாளும் கூறும் குணமிருக்கும்

நல்ல குணமிருக்கும்

பாவலன் பாடிய புதுமை பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய் குலம் தந்த
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று

ஏழை வாழ்வு தர துடி துடிக்கும்
துடி துடிக்கும்
நெஞ்ஜம் துடி துடிக்கும்

உந்தன் ஆடை கூட அதை எதிரொலிக்கும்
இங்கு எதிரொலிக்கும்
எங்கும் எதிரொலிக்கும்

HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU

கோட்டை மீது உந்தன் கொடி பறக்க
தனி கொடி பறக்க

இந்த நாட்டை ஆளவந்த குலவிளக்கே
பெண் குலவிளக்கே

தன் வீடு போலவே நாடு யாவையும்
நாளும் காணும் தமிழணங்கே

எங்கள் தழிழணங்கே

பாவலன் பாடிய புதுமை பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய் குலம் தந்த
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று

HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU

பாடலின் சிறப்பே இது மோகனகல்யாணி அல்லது கல்யாணியின் சாயலின் அமைந்தது தான் !

இனிய தைத் திங்கள் திரு நாள் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தைத் திங்கள் திரு நாள் வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லா வளமும் பெற்று சிறக்க வாழ வேண்டும்.
அசோகராஜ் குடும்பத்தினர்-தோஹா, கத்தார்.

சனி, 11 ஜனவரி, 2014

ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே

இனிமையானப் பாடல்.  பாடலின் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் நம்மை கட்டிபோடும் பாடல்.


திரைப்படம்: தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1982)
பாடியவர்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம் 
பாடல்: குருவிக் கரம்பை சண்முகம் 
இசை: சங்கர் கணேஷ் 
இயக்கம்: M பாஸ்கர் 
நடிப்பு: சிவகுமார், அம்பிகா 

http://asoktamil.opendrive.com/files/Nl8xODg0ODYxNV9sYVRuYl9hMGE4/Raagam%20Thaalam%20pallavi-theerppugaL%20thiruththap%20padalaam.mp3

லாலா லாலா லல்லலா லல

ராகம் தாளம் பல்லவி 
அது காதல் பூபாளமே

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

ஆ ஹா ஆ ஹா 

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

இதழ் தரும் மலரே
பழரச நதியே
என் தேகம் தீக்கடலோ

கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மென் காற்று மெல்ல அள்ள வா

இதழ் தரும் மலரே
பழரச நதியே
என் தேகம் தீக்கடலோ

கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம்  மென் காற்று மெல்ல அள்ள வா

தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்

மாலைகள் சூடிக்கொள்ளும்
தேதி பார்க்கட்டும்

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்
ஆ ஹா ஆ ஹா 
பொங்கும் இந்நாளே 
நம் பொன் நாள்

வானும் மண்ணும் தீபம் ஏற்றி மாறும் நேரம் இது
வானும் மண்ணும் தீபம் ஏற்றி மாறும் நேரம் இது

பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளை இது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளை இது

காலங்கள் மேளங்கள்

நேரங்கள் தாளங்கள்

தேகங்கள் ராகங்கள்

கோலங்கள் போடுங்கள்

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்

ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும்

இந்நாளே

நம் பொன் நாள்

ஆ ஹா  ஆ ஹா பொங்கும் இந்நாளே 
நம் பொன் நாள்

லலல்லலல் லாலா லலல்ல லலல லா

வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஜில்லா!!!!

ஜில்லா!!!!இன்றைகெல்லாம் மூளையை கழட்டி வச்சுட்டுதான் (அதான் லாஜிக்) விஜய் படங்களை பார்க்கனும் போல இருக்குது. இனி நல்ல விஜய் படங்களுக்கு வாய்ப்பே இல்லை. இயக்குனர்கள் விஜய், நேசன் போன்றவர்கள் ஒரு மாயையிலேயே வாழ்கிறார்கள் போலிருக்கிறது. நிதர்சனதிற்கு வாங்கப்பா.

வியாழன், 9 ஜனவரி, 2014

ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை

V குமார் அவர்களின் இசையில் பல பாடல்கள் சிறப்பானவை. அதுவும் எஸ் பி பி, K சொர்ணா அவர்களுடன் இணைந்து பாடியிருக்கும் பாடல்கள் நிறைய உண்டு. அவை யாவுமே இனிமையானவை. கே.சொர்ணா அவர்கள் திரு குமார் அவர்களின் மனைவி. எல்லா படத்திலும் ஒரு பாடலாவது அவருக்கு பாட வாய்ப்பு கொடுத்துவிடுவார்.
ஆனால் இங்கு பாடியிருப்பவர் அவர் அல்ல. இவை வேறு அழகிய பாடல்கள்.

S P பாலசுப்ரமணியம், P சுசீலா இருவரின் குரல்களில் இரண்டு பாடல்களும் இங்கே.

திரைப் படம்: ஏழைக்கும் காலம் வரும் (1975)
பாடியவர்: S P பாலசுப்ரமணியம், P சுசீலா தனித் தனியே பாடிய இரு பாடல்கள்.
இசை: V குமார்
இயக்கம்: ராஜேந்திர பாபு.
நடிப்பு: முத்துராமன், சுபா.
பாடல்: தெரியவில்லை

முதலில் S P பாலசுப்ரமணியம் குரலில்:

http://asoktamil.opendrive.com/files/Nl8yODg0NDI4MF9rNWJQWl9mMTBl/OraayiramKarpanai.mp3

இது P. சுசீலா அம்மாவின் குரலில்:
http://asoktamil.opendrive.com/files/Nl8yODg0NDUzOF9MTm95cl85ZmIz/oraayiram%20kar-eazhaikkum%20kaalam%20varum-PS.mp3ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடி வா
ஓடி வா

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடி வா
ஓடி வா

நான் பாடும் ராகங்கள்
கார் கால மேகங்கள்
நான் பாடும் ராகங்கள்
கார் கால மேகங்கள்
தேன் மாரி பெய்யும்
தீரும் தாகங்கள்
தென்றலின் ஓசை பாட்டாக
தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக
கீதமே நாதமே ஓடி வா

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை

ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
உறவாடும் உள்ளம்
இசை பண்ணோடு
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னென்ன கோலம் கொண்டாலும்
என் உயிர் நாதம் சங்கீதம்
கீதமே நாதமே ஓடி வா

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடி வா


P. சுசீலா அம்மாவின் பாடல்:

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே ஓடி வா
ஓராயிரம் கற்பனை
உனக்காக பெண் ஒன்று உறங்காத கன் கொண்டு
எதிர் பார்க்கும் நேரம் இங்கு வாராயோ
பன்னீரில் ஆடாமல் கண்ணீரில் ஆடும் பூ மாலை நான் அல்லவா
வாழ்விலே வசந்தமே ஓடி வா
ஓராயிரம் கற்பனை
மாமன்னன் துஷ்யந்தன் மரந்தாலும் தோகைத் தன் உயிர் காதல் வெல்லும் என வாழ்ந்தாளே
பால் அல்ல கள்ளென்று ஊர் சொன்ன நாளுண்டு மெய்யல்ல பொய்யென்று காதலே கண்டு நீ ஓடி வா
நீ ஓடி வா
நீ ஓடி வா

நீ ஓடி வா

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்

தெலுங்கிலிருந்து இறக்குமதியான படமும் இசையும்.என்று நினைக்கிறேன். பாடலின் ஆரம்பத்தில் எஸ் பி பியின் குரல் போலவே தெரியவில்லை. அழகானபாடல்.


திரைப்படம்: கிழக்கே ஒரு காதல் பாட்டு (1992)
பாடியவர்கள்: எஸ் பி பி, K சித்ரா
நடிப்பு: ஆனந்த், ரஞ்சிதா.
இசை: வித்யாசாகர்

http://asoktamil.opendrive.com/files/Nl8yODcyNzM1MF9OcXlSUF9jMWRk/Raagam%20thaalam%20iruvarin%20thegam.mp3ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

பெண்மகள் தங்க மேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்

பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்

இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

ல ல ல ல ல ல லாலா 
ல லாலா லலல லல 
ந ந ந ந ந ந ந 

எத்தனை இரவு கனவு வந்தது
இன்று கண்டது பொய் இல்லை

பந்தி வைக்கவே ஆசை உள்ளது
பரம்பரை நாணம் விடவில்லை

கட்டிலில் மெத்தையில் இன்பமென்ற சொந்தம்
சேவல்கள் கூவியும் விலகிடாத பந்தம்

மரம் மீது பறவை ஆவோமா

சிறகோடு வானம் போவோமா

நீல வானில் பாடல் பாடி நிலவை தேடி போவோம்

கோடை காலம் போன பின்பு மீண்டும் மண்ணில் சேர்வோம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

காதல் என்னுமோர் புதிய பள்ளியில் உந்தன் மாணவி ஆனேனே

காமன் என்பவன் நமது பள்ளியில் பாடம் கேட்கிறான் பெண் மானே

நீரிலே நீர்த்துளி சங்கமிக்கும் வேளை
ஆயிரம் பூ விடும் பெண்மை என்ற சாலை

நான் என்ற வார்த்தை முடியட்டுமே

நாம் என்ற வார்த்தை தொடங்கட்டுமே

மாரிகாலம் போன பின்பு பூமி எங்கும் பூக்கள்

எந்தன் வாழ்வில் காண வேண்டும் ஈரமான நாட்கள்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

பெண்மகள் தங்க மேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்

பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ஆ ஆ ஆ

ராகம் தாளம் 

இருவரின் தேகம் ஆகும்

இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்


சனி, 4 ஜனவரி, 2014

உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று

மீண்டும் திருமதி வாணி ஜெயராமின் பாடல். இது ஜெயச்சந்திரனுடன்.
கணீர் என விழும் வார்த்தைகள். சுருதி பிறழாத பாடல்.இனிமை.

திரைப் படம்: எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் (1983)

இசை: சங்கர் கணேஷ்  

பாடியவர்கள்: P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் 

உன் விழி சொல்லும் 
சிறு கதை ஒன்று 
இன்று தொடராக 
மலர்கின்றதோ 
சுகம் என்ன 
அதன் சுவை என்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணே 

உன் விழி சொல்லும் 
சிறு கதை ஒன்று 
இன்று அரங்கேற  
துடிக்கின்றதோ 
சுகம் என்ன 
அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணா 

உடல் செவ்வாழை 
முகம் ரோஜா பூ 
பனி மலரிதழ்கள் 
நான் கெஞ்ச 
நீ கொஞ்ச மனம் அஞ்சும் 
உடல் செவ்வாழை 
முகம் ரோஜா பூ பனி மலரிதழ்கள் 
நான் கெஞ்ச 
நீ கொஞ்ச மனம் அஞ்சும் 

கவிஞர்கள் சொன்னாரம்மா  
காதல் கவிதை 
கன்னி மனம் நினைக்குதைய்யா
 நாளை நடப்பதை 

உன் விழி சொல்லும்
ஆ ஆ ஆ ஆ
சிறு கதை ஒன்று
ஹ்ம்ம்ம்
இன்று தொடராக மலர்கின்றதோ
சுகம் என்ன 
அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணா 

ஒரு தனி அரையில் 
இந்த முதல் இரவில் 
துணை அருகிருக்க 
பயமேது தடையேதும் கிடையாது 
ஒரு தனி அரையில் இந்த 

இந்த முதல் இரவில் 

துணை அருகிருக்க 
பயமேது தடையேதும் கிடையாது 

நடக்கட்டும் எல்லாமிங்கே நன்மையாகவே 
கிடைக்கட்டும் ஒன்றாகவே இன்பம் யாவுமே 


உன் விழி சொல்லும் 

சிறு கதை ஒன்று 
இன்று அரங்கேற  

துடிக்கின்றதோ 
சுகம் என்ன 

அதன் சுவை என்ன நாளை விடிந்தாலே 

தெரியும் கண்ணே 


இந்த இரவோடு 

துள்ளும் அழகோடு 

அள்ளி விளையாட 
விதி சேர்க்கும் 

இந்த சொந்தம் விலகாதே 
இந்த இரவோடு 
துள்ளும் அழகோடு 
அள்ளி விளையாட 
விதி சேர்க்கும் 
இந்த சொந்தம் விலகாதே 
கனவிலும் கண்ணே 
உன்னை நான் மறப்பேனோ 
நினைவுகள் நீங்காமலே 
நான் சிரிப்பேனோ 

உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று 
இன்று தொடராக மலர்கின்றதோ 
சுகம் என்ன அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே  தெரியும் கண்ணா 
நாளை விடிந்தாலே தெரியும் கண்ணா

வியாழன், 2 ஜனவரி, 2014

ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம்

வாணி ஜெயராமின் கணீர் குரலும், கே ஜே யேசுதாஸின் மேன்மைக் குரலும் எம் எஸ்விஸ்வநாதன் இசையும்  ஒரு அமைதியான சூழ்நிலையை காண்பிக்கிறது. மென்மையான பாடல்.

திரைப் படம்: பயணம் (1976)
குரல்கள்: கே ஜே  யேஸுதாஸ், வாணி ஜேயராம்
இசை: எம் எஸ் விஸ்வனாதன்
இயக்கம்: தெரியவில்லை
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஜெயசித்ரா

http://asoktamil.opendrive.com/files/Nl8yODQ0MTI1N19uaXhtTl8zZWUx/Aaramba%20Kaalam%20oru%20pakka.mp3ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 
     

ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 

ஆனப் பின்னலே இருப்பக்க மேளம் 
அதுதான் வாழ்க்கை அன்போடு 

ஆனப் பின்னலே இருப்பக்க மேளம் 
அதுதான் வாழ்க்கை அன்போடு 

தேவாமிருதம் தேனிதழ்கள் 
தேவர்கள் இல்லை நான் வந்தேன் 

மார்பின் அகலம் குன்றங்கள் 
மலர்கள் இல்லை நான் வந்தேன் 

தேவாமிருதம் தேனிதழ்கள் 
தேவர்கள் இல்லை நான் வந்தேன் 

மார்பின் அகலம் குன்றங்கள் 
மலர்கள் இல்லை நான் வந்தேன் 

மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு 
அஞ்சக்கண்டு நான் வந்தேன் 

மாலைகள் ஏந்து மங்கள சாந்து 
மார்பினில் நீந்து என்னைத் தந்தேன் 

ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 
     

நாடகமேடை திரை இல்லை 
நாயகி வந்தாள் கவி பாடி 

நாயகியுடனே துணை இல்லை 
நாயகன் வந்தான் துணை தேடி 

மின்னல் ரோஜா பொன்னில் ஊறி 
கையில் வந்தது உறவாடி 

கன்னன் ராதா, ராமன் சீதா 
வந்தார் இங்கே நம்மைத் தேடி 

ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 

ஆனப் பின்னலே இருப்பக்க மேளம் 
அதுதான் வாழ்க்கை அன்போடு


ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ