பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 ஜனவரி, 2014

காமதேவன் ஆலயம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், S.ஜானகி ஆகியோரின் குரலில்

பாக்யராஜின் இசையில் இப்படி ஒரு அருமையான பாடலா? இயக்கம் 

பாலகுமாரன் எனவும் போட்டிருக்கிறார்கள். 

பாடல் காட்சி கிடைக்கவில்லை. ஒரு வேளை வேளை படத்தில் 

இந்தப் பாடலை தவிர்த்துவிட்டார்களோ? நல்ல பாடல்.


படம்: இது நம்ம ஆளூ (1988) 


பாடலாசிரியர்:வாலி

இயக்குநர்:கே.பாக்யராஜ்

பாடகர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், S.ஜானகி 

நடிகர்: கே.பாக்யராஜ், சோபனா

http://asoktamil.opendrive.com/files/Nl8yOTI3ODUwNV96NG55YV9lMzZi/KAAMA%20DEVAN%20aalayam-ithu%20namma%20aalu.mp3காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்
காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை
இரவினில் ராஜ லீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

பன்னீர் பூவில் இவள் தேகம்
அதை பார்க்க பார்க்க வரும் மோகம்

கண்கள் காதல் கதை பேசும்
அவை காம பானங்களை வீசும்

நெஞ்சனை பஞ்சனை இடக்கூடாதோ

கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ

தத்தி வந்த தத்தைக் கிளி
முத்தம் இட்டு முத்துக்குளி

சொர்கத்துக்கு எந்த வழி
சொல்லித் தந்தேன் நல்ல படி

இன்னும் இன்னும் என்று
மனம் ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது

காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை
இரவினில் ராஜ லீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

கட்டில் ராஜ சபை கூடும்
அதிகாலை வேலை வரை நீளூம்

தொட்டால் கை நழுவி போகும்
இந்த தோகை தேவியின் நயம் ஆகும்

ஒத்திகை நித்தம் இனி பார்க்காது

சித்திர முத்திரை இதழ் கேட்காதோ

பஞ்சு மெத்தை இட்டு செல்ல
பட்டு விரல் தொட்டு கொள்ள

நித்தம் உன்னை உச்சரிக்க
முத்தம் உன்னை அச்சடிக்க

மெட்டி சத்தம் மெட்டுச் சொல்ல
பாடவேண்டும் நூறு கவிதைகள்

காமதேவன் ஆலயம்

அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை

இரவினில் ராஜ லீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்

அதில் காதல் தீபம் ஆயிரம்

காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக