பின்பற்றுபவர்கள்

சனி, 4 ஜனவரி, 2014

உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று

மீண்டும் திருமதி வாணி ஜெயராமின் பாடல். இது ஜெயச்சந்திரனுடன்.
கணீர் என விழும் வார்த்தைகள். சுருதி பிறழாத பாடல்.இனிமை.

திரைப் படம்: எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் (1983)

இசை: சங்கர் கணேஷ்  

பாடியவர்கள்: P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் 

உன் விழி சொல்லும் 
சிறு கதை ஒன்று 
இன்று தொடராக 
மலர்கின்றதோ 
சுகம் என்ன 
அதன் சுவை என்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணே 

உன் விழி சொல்லும் 
சிறு கதை ஒன்று 
இன்று அரங்கேற  
துடிக்கின்றதோ 
சுகம் என்ன 
அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணா 

உடல் செவ்வாழை 
முகம் ரோஜா பூ 
பனி மலரிதழ்கள் 
நான் கெஞ்ச 
நீ கொஞ்ச மனம் அஞ்சும் 
உடல் செவ்வாழை 
முகம் ரோஜா பூ பனி மலரிதழ்கள் 
நான் கெஞ்ச 
நீ கொஞ்ச மனம் அஞ்சும் 

கவிஞர்கள் சொன்னாரம்மா  
காதல் கவிதை 
கன்னி மனம் நினைக்குதைய்யா
 நாளை நடப்பதை 

உன் விழி சொல்லும்
ஆ ஆ ஆ ஆ
சிறு கதை ஒன்று
ஹ்ம்ம்ம்
இன்று தொடராக மலர்கின்றதோ
சுகம் என்ன 
அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணா 

ஒரு தனி அரையில் 
இந்த முதல் இரவில் 
துணை அருகிருக்க 
பயமேது தடையேதும் கிடையாது 
ஒரு தனி அரையில் இந்த 

இந்த முதல் இரவில் 

துணை அருகிருக்க 
பயமேது தடையேதும் கிடையாது 

நடக்கட்டும் எல்லாமிங்கே நன்மையாகவே 
கிடைக்கட்டும் ஒன்றாகவே இன்பம் யாவுமே 


உன் விழி சொல்லும் 

சிறு கதை ஒன்று 
இன்று அரங்கேற  

துடிக்கின்றதோ 
சுகம் என்ன 

அதன் சுவை என்ன நாளை விடிந்தாலே 

தெரியும் கண்ணே 


இந்த இரவோடு 

துள்ளும் அழகோடு 

அள்ளி விளையாட 
விதி சேர்க்கும் 

இந்த சொந்தம் விலகாதே 
இந்த இரவோடு 
துள்ளும் அழகோடு 
அள்ளி விளையாட 
விதி சேர்க்கும் 
இந்த சொந்தம் விலகாதே 
கனவிலும் கண்ணே 
உன்னை நான் மறப்பேனோ 
நினைவுகள் நீங்காமலே 
நான் சிரிப்பேனோ 

உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று 
இன்று தொடராக மலர்கின்றதோ 
சுகம் என்ன அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே  தெரியும் கண்ணா 
நாளை விடிந்தாலே தெரியும் கண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக