பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஜூலை, 2014

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ (Oru naal Yaaro enna paadal)

மீண்டும் ஒரு மென்மையான P சுசீலா அம்மாவின் இனிய குரலில் இனிமையான பாடல். பாடல் வரிகளும் மெல்லிசையாக வருகிறது.
எளிமையான பாடல், இசை, நடிப்பு மற்றும் படக் காட்சி. எல்லாவற்றிலும் எளிமை.

திரைப் படம்: மேஜர் சந்த்ரகாந்த் (1966)
இசை: V குமார்
பாடல்: வாலி
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: நாகேஷ், முத்துராமன், A V M ராஜன், ஜெயலலிதா
இயக்கம்: K பாலசந்தர்

ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின் பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின் பாதையில் செல்ல

மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது உறவு

நில்லடி என்றது நானம்
விட்டுச் செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

செக்கச் சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன சென்னிற இதழ்கள்
செக்கச் சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன சென்னிற இதழ்கள்

இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்

உன்னிடம் சொல்லிட நினைத்தும்
உள்ளம் உண்மையை மூடி மறைக்கும்
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ


ஞாயிறு, 27 ஜூலை, 2014

மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு (mayangivitten unnai kandu)

இது போல பாடல் வரிகளுடன் இசையும் குரல்களும் இழைந்து
"நெய்யும் தறியினிலே நூல் இழை போலே" என ஒரு சில பாடல்களை மட்டுமே கேட்க முடியும். இனிமைதான். எம் ஜி யாரின் ஸ்பெஷல் கவனிப்பில்...


திரைப்படம் : அன்னமிட்ட கை (1972)
பாடியவர் : T.M.செளந்தரராஜன், P.சுசீலா
இயற்றியவர் : வாலி
திரையிசை : K.V.மகாதேவன்
இயக்கம்: M கிருஷ்ணன்
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
 மயங்கிவிட்டேன்
மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ

மயங்கிவிட்டேன்
மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்ல சொல்ல என்ன சுகமோ

எங்கெங்கே என்னென்ன
ஆஹா
இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லை
ஆஹா
இங்கே தான்
ஓஹோ
வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

எங்கெங்கே என்னென்ன
இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லை இங்கே தான்
வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

நீ எடுக்க நான் கொடுக்க

நாம் எடுத்து கொடுத்த பின்
அடுத்தது நடக்க

மயங்கிவிட்டேன்
மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்ல சொல்ல என்ன சுகமோ

எண்ணிக்கொள்
ஆஹா
ஏந்திக்கொள்
ஓஹோ ஹோ
கன்னத்தின் கின்னம் பொங்கி வழியாமல்

கட்டிக்கொள்
ம்
ஒட்டிக்கொள்
ம்
காற்று நம்மிடையில் நுழையாமல்

எண்ணிக்கொள் ஏந்திக்கொள்
கன்னத்தின் கின்னம் பொங்கி வழியாமல்

கட்டிக்கொள் ஒட்டிக்கொள்
காற்று நம்மிடையில் நுழையாமல்

நெய்யும் தறியினிலே

நூல் இழை போலே

நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே
மயங்கிவிட்டோம்

மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ


வெள்ளி, 25 ஜூலை, 2014

சொல்லி தரவா இடை மூடும் மேலாடை (Solli tharava idai moodum)

வழக்கமான தமிழில் இசையை விட்டு, வித்தியாசமான இசைநடையை கேட்ட மாத்திரம் மனதுக்கு இதம். பிரமாதமாக Dedication உடன் பாடியிருப்பார்கள் இருவரும். அழகான பின்னணி இசை. அலட்டிக் கொள்ளாத ஒரு பாடல்.
ஆனால் பாடல் வரிகள் சொல்லும்  கருத்துகளுடன் பாடல் காட்சிக்கும் ஒத்து வரவில்லையோ என  எனக்குத் தோன்றுகிறது.

திரைப் படம்: உழவன் மகன் (1987)
இசை: மனோஜ் கியான்
நடிப்பு: விஜயகாந்த், ராதிகா
இயக்கம்: ஆபாவாணன் 
பாடல்:யார்?
குரல்கள்: எஸ் பி பி, சசிரேகாம் ம் ம் ம்
சொல்லி தரவா
சொல்லி தரவா 
சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை 
தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு 
விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் 
நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் 
சுவை அல்லவா
சொல்லி தரவா 
சொல்லி தரவா

சில்லென்று காற்றே 
நீ வழி போகும் நேரம்
நில்லென்று நான் கூற 
ஏன் இந்த நாணம்

சொல்லி தெரியாத 
கலை இன்று கண்டேன்
சொல்ல தெரியாதா 
சிலையாகி நின்றேன்

கண்மணி உந்தன் கருவிழி பேசும் கதைகள் புரிகிறது
வெண்பனி தூவும் விடியல் வரையில் அதுவும் தொடர்கிறது

சொல்லி தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம்

சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை 
துணை அல்லவா
துணை சேர என் நாணம் 
தடை அல்லவா
தடை சொல்லும் பெண்ணுக்கு 
வழி சொல்லவா
வழி சொல்லும் உன் பாடல் 
புதிதல்லவா

சொல்லி தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம்

சொல்லி தரவா

இரவென்றும் பகலென்றும் 
அறியாத உறவு
யார் இங்கு தந்தாலும் 
சுகம் தானே வரவு

இன்னும் ஏன் இங்கு தடை மீற தயக்கம்
இல்லை வேறெங்கும் இடை மீறும் மயக்கம்

அச்சம் நாணம் 
அறிந்தது புரிந்தது
காதல் விளையாட்டு
மிச்சம் மீதி 
இருந்ததும் மறைந்தது
காமம் சொல் கேட்டு


சொல்லி தரவா
சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை 
தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு 
விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் 
நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் 
சுவை அல்லவா

ட ட ட டா
சொல்லி தரவா 

 


செவ்வாய், 22 ஜூலை, 2014

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா (mannukku maram parama)

 thamizhisai.com சொல்வது....இந்த பாடலுக்கு மிக அழகாக விமர்சனம் கொடுத்திருக்கிறார். நன்றி.

இதற்கு மேல் நான் இந்த பாடலைப் பற்றி சொல்ல தகுதி இல்லை. என்றென்றும் மறக்க முடியாத பாடல்.

உயிர்களுக்கிடையில் திகழும் பாசப் பிணைப்பினாலேயே உலகம் செயல்படுகிறது. ஒரு தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பாசத்துக்கு வேறெவர் பாசமும் ஈடாகாது என்பது அனைவரும் அறிவோம். இதில் விதிவிலக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாதாயினும் இயற்கை நியதிப்படி தாயின் பாச உணர்வே அனைத்திலும் உயர்ந்ததென்பதை ஒப்புக்கொள்கிறோம். இத்தகு தாய்ப்பாசம் மனிதர்களிடம் மட்டுமின்றி அனைத்து உயிர்களிடமும் ஒரே தரத்தில் உயர்ந்து விளங்குவதையும் காண்கிறோம். உதாரணமாக ஒரு கோழி சாதாரணமாக உயரப் பறப்பதில்லை. ஆனால் அதே கோழி, பருந்தொன்று தன் குஞ்சினைக் கவ்விச் செல்லக் கண்டு வானுயரப் பறந்து பருந்தினை விரட்டித் தன் குஞ்சினைக் காத்த காட்சியை நான் கண்டிருக்கிறேன்.
ஒரு பெண் தான் பெற்ற செல்வங்கள் அனைத்திலும் உயர்ந்ததாக உள்ளுணர்வாலும் பகுத்தறிவாலும் ஒன்றுபட்ட நோக்குடன் கருதுவது தான் ஈன்ற மகவையே ஆகும். தனக்கு எத்தகைய துன்பம் நேரிடினும் அதனால் தன் குழந்தைக்கு ஊறு விளையாது பார்த்துக் கொள்வது ஒரு தாயின் இயல்பு. பத்து மாதம் வயிற்றில் சுமந்து தன் ரத்தத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்து, தன் உயிரையே பணயம் வைத்து, உலகில் வேறு யாராலும் தாங்க இயலாத பிரசவ வேதனையை அனுபவித்துப் பெறும் பிள்ளை அல்லவா? அதனை விடவும் உயர்ந்த செல்வம் உலகில் வேறுண்டோ?
"ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன்" எனும் ஆங்கிலக் கவிஞர் தான் எழுதிய "ஹோம் தே ப்ராட் ஹர் வாரியர் டெட்"  எனும் கவிதையில் கூறுவதாவது: ஒரு பெண்ணின் கணவன் போரில உயிர்துறக்கவே அவனது உடலை அவனது வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். அவனது மரணத்தினால் ஏற்பட்ட துக்கத்தால் அப்பெண் ஸ்தம்பித்துப் பேச்சற்றவளாகி நிலைகுலைந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விடுகிறாள். அவள் அழவில்லை, வாயைத் திறந்து பேசவுமில்லை. துக்கம் விசாரிக்க வந்திருந்த அண்டை வீட்டார்கள் பலர் அவளை அழ வைக்க முயற்சிக்கின்றனர், ஏனெனில் அவள் தனது துக்கத்தை வெளியே அழுது கொட்டாவிடில் அவள் இறந்து விடும் அபாயம் உள்ளது. அவர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, அவள் அழவில்லை. இந்நிலையில் அவர்களுள் இருந்த ஒரு மூதாட்டி வேறோரிடத்தில் இருந்த அப்பெண்ணின் சிறு குழந்தையை எடுத்து வந்து அவளது மடியில் கிடத்த, "ஓ மை சைல்ட், ஐ லிவ் ஃபார் தீ" என்று கூறிக் கதறியழுகிறாள்.
தான் வாழ்வதே தன் குழந்தைக்காக எனும் மன நிலை கொண்டவள் தாய் எனும் உண்மையைக் கவிஞர் தெளிவாக்குகிறார்.

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
இயற்றியவர்: சுரதா (கண்ணதாசன் ???)

இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
நடிப்பு: S S ராஜேந்திரன், ராஜசுலோக்ஷ்னா 

இயக்கம்: A K வேலன்
மண்ணுக்கு மரம் பாரமா 
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா 

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா 

மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா 

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
வாடிய நாளெல்லாம் 
வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் 

வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் 

செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் 

செல்வமாய் வந்தவளே

மலடி மலடி என்று 

வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று 

வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை 

மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை 

மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா 
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா 

மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா 

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
அழுதா அரும்புதிரும் 
அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் 

அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் 

வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா  முத்துதிரும் 

வாய் திறந்தால் தேன் சிதரும்

பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா
பேணி வளர்க்க வேணும் தெரியுமா
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா
பேணி வளர்க்க வேணும் தெரியுமா
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா 
குழந்தை அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா

குழந்தை அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா
மண்ணுக்கு மரம் பாரமா 
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா 

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா

ஞாயிறு, 20 ஜூலை, 2014

என்னதான் ரகசியமோ இதயத்திலே

ஒரு விலைமாதின் வீட்டில் பாடுவது போல இருக்கும் இந்த அழகான பாடலை கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இடையிடையே கதாநாயகியுடன் நாயகன் நடிப்பது போல காட்சி அமைத்து மனதை திருப்தி பண்ணியிருக்கிறார்கள். இசையும் குரலும் பட பிடிப்பும் மனதுக்கும் கண்ணுக்கும் இனிமை சேர்க்கிறது.

திரைப் படம்: இதயக் கமலம் (1965)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: P சுசீலா
நடிப்பு: முத்துராமன், ரவிசந்திரன், K R விஜயா
இயக்கம்: ஸ்ரீகாந்த்
என்னதான் ரகசியமோ இதயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலர் பஞ்சணை மேலே
உடல் பள்ளி கொள்ளாது
அது
பள்ளி கொண்டாலும்
துயில் கொள்ள விடாது
மலர் பஞ்சணை மேலே
உடல் பள்ளி கொள்ளாது
அது
பள்ளி கொண்டாலும்
துயில் கொள்ள விடாது

ஒரு நேரம் கூட
ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே

விழி பார்க்க சொன்னாலும்
மனம் பேச சொல்லாது
மனம் பேச சொன்னாலும்
வாய் வார்த்தை வராது

அச்சம் பாதி ஆசை பாதி
பெண் படும் பாடு
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே

பேரழகிருந்தென்ன
ஒரு ரசிகன் இல்லாமல்
தேன்
நிறைந்திருந்தென்ன
பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை
இன்பம் இல்லாமல்
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
முதல் இரவு வந்ததும்
இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும்
நான் உருகி நின்றதும்
முதல் இரவு வந்ததும்
இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும்
நான் உருகி நின்றதும்
என்
கன்னத்தின் மேல்
கோலம் போட்டு துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும்
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே


வெள்ளி, 18 ஜூலை, 2014

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா


இளையராஜா மற்றும் எஸ் பி பி, S ஜானகி கூட்டணியில் இனிமையான பாடல்தான். ஆனால் அப்போதைய காலக் கட்டத்தில் பல படங்கள் இது போன்ற விடலைகளை வைத்து எடுக்கப்பட்டு பார்க்கும் விடலைகளையும் ஏக்கமுற வைத்து இப்படி ஆரம்பித்து வைத்தார்கள் நமது இளசுகள் உருப்புடாமல் போக. எஸ் பி பி, S ஜானகி குரல்களும் இவர்களுக்கு set ஆனா மாதிரி தெரியவில்லை. இப்படி நடித்தவர்களும் ஒரு சிலர் தவிர  மற்றவர்களும் தேறவில்லை.

திரைப் படம்: ஆனந்தக் கும்மி (1983)
நடிப்பு: பாலச்சந்தர் , அஷ்வினி
பாடியவர்கள்: எஸ் பி பி, S ஜானகி, S P ஷைலஜா (பாடலின் ஆரம்ப வரிகள்- காணொளியில் கேட்கலாம் )
இசை:  இளையராஜா
இயக்கம்: பாலகிருஷ்ணன்ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா

ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா

நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோய்
பால் போல வா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோய்
பால் போல வா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா

நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ

மலர்கள் சேர்ந்து மாலை கோர்த்து
ஆடடா நீயும் பூச்சூடு

கதைகள் பேசு கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு

நிலவே நீயும் தூங்காதே ஹோய்

நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோய்
பால் போல வா


ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா

ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா

நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோய்
பால் போல வா


லாலி லாலி லாலி லாலி லா

லாலி லாலி லாலி

லாலி லல்லாலி லாலி லல்லாலி லா

லாலி லாலி லாலி

லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லா
லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லா
லாலி லல்ல லாலி லல் 

லா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

இதமாய் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது ஹோய்

இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது

காதல் மாலை சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது

நிலவே நீயும் தூங்காதே ஹோய்

நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோ
பால் போல வா


ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோ
பால் போல வா

ஆனந்தம் கொண்டு நீங்கள்
இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள்
கண்டு தான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல்
ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும்
அழியாமல் வாழ்கவே
வேலையில்லா பட்டதாரி.

வேலையில்லா பட்டதாரி.

படம் முடிந்து வெளியில் வருமுன்னமே மக்கள் போனில் படம் மொக்கை படம் மொக்கை என்று விளம்பரம் செய்துவிட்டார்கள்.
இந்த காலத்தில் காமெடியாக படம் எடுத்து ஓட்டுவார்களா...இயக்குனர் சுமார் 1௦௦ பழைய தமிழ் படங்களைப் பார்த்து அதிலிருந்து சில சில காட்சிகளை சுட்டு பட மாலை கட்டியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஒரு படத்துடன் இயக்குனர் வேலையில்லா பட்டதாரி ஆகிறார் என்பது மட்டும் நிச்சயம்.
இசையும் தேறவில்லை பாடல்களும் படு அரைகிறுக்கு பாடல்கள்.
தனுஷ் நடிப்பில் கொஞ்சம் கூட இயற்கை தெரியவில்லை. 
காமெடியாகிப் போன அசிங்கமான சண்டைக் காட்சிகள். 

மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி ஒரு வேலையில்லா நாதாரி.

புதன், 16 ஜூலை, 2014

காதல் சிலைகள் காவிய கலைகள்

அழகான அமைதியான பாடல். பாடலின் காணொளி கிடைக்கவில்லை.

திரைப் படம்: அவள் ஏற்றிய தீபங்கள் (1980)

நடிப்பு: பானுமதி ராமகிருஷ்ண , சரத்பாபு, அபர்ணா
இயக்கம், தயாரிப்பு, இசை: சகலகலாவல்லி திருமதி பானுமதி ராமகிருஷ்ண அவர்கள்.


காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம்
இங்கே அழியாத நினைவு சின்னம்

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம்
இங்கே அழியாத நினைவு சின்னம்

எங்கோ பிறந்தோம் வாலிபம் மறந்தோம்
இங்கே சேர்ந்திருந்தோம்
ஏற்றிய தீபம் காற்றடித்தாலும்
நெஞ்சில் வாழ்ந்திடுப்போம்
என்றும் நிலையாய் சேர்ந்திருப்போம்

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம்
இங்கே அழியாத நினைவு சின்னம்

ஆசை பிரிவு ஆயிரம் நிகழும்
பாசம் தொடர் கதையே
வாசனை மாறும் பூவும் வாடும்
மீண்டும் தோன்றுகிறதே
என்றும் வேண்டும் வரம் இனிதே

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம்
இங்கே அழியாத நினைவு சின்னம்

திங்கள், 14 ஜூலை, 2014

ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே

இந்தப் படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர்அவர்களின் இயக்கத்தில்தான் நமது ரஜினி முதன்முதலாக பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த இயக்குனர் கடந்த 2013 ஜூலை மாதம் மாரடைப்பினால் காலமானார்.
ஷங்கர் கணேஷ் இசையில் இது ஒரு அருமையான பாடல்.

திரைப்படம்: தீர்ப்புகள் திருத்தப்படலாம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: குருவிக் கரம்பை ஷண்முகம்
இயக்கம்: எம்.பாஸ்கர்
நடிப்பு: சிவ குமார், அம்பிகா
 லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா
லா ல ல ல் ல லா லா
லா ல ல ல் ல லா லா
ல ல் லா ல ல ல் லா ல ல ல் லா

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

ஆ ஆ ஆ ஆ

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

இதழ் தரும் மலரே
பழரச நதியே
என் தேகம் தீக்கடலே

கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா

இதழ் தரும் மலரே
பழரச நதியே
என் தேகம் தீக்கடலே

கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா

தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்

மாலைகள் சூடிக்கொள்ளும்
தேதி பார்க்கட்டும்

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

ஆ ஆ ஆ ஆ
பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

வானும் மண்ணும்
தீபமேற்றி மாறும் நேரமிது
வானும் மண்ணும்
தீபமேற்றி மாறும் நேரமிது


பாவை மேனி பூவைப்போல
ஆகும் வேளையிது
பாவை மேனி பூவைப்போல
ஆகும் வேளையிது

காலங்கள் மேளங்கள்

நேரங்கள் தாளங்கள்

தேகங்கள் ராகங்கள்

கோலங்கள் போடுங்கள்

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்

ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும்
இந்நாளே
நம் பொன் நாள்
ஆ ஆ ஆ ஆ
பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா

சனி, 12 ஜூலை, 2014

ராஜ மோகினி சுக ராக தேவி நீ


கோபால் ராவ் கரி அப்பாயி (1989) என்ற தெலுங்கு படத்தின் டப்பிங் இந்தப் படம். இந்தப் பாடலும் ட ப்பிங் போலிருக்கிறது. ஆனால் டப்பிங் வாடை அவ்வளவாக இல்லை. இனிமையான பாடலாக இருக்கிறது.

திரைப் படம்: காதல் ஓய்வதில்லை (1989)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம், S ஜானகி
நடிப்பு: ராஜேந்திர பிரசாத், அஷ்வினி. கார்த்திக்கும், ரம்யா கிருஷ்ணனும் கூட நடித்திருக்கிறார்கள் போலுள்ளது.
இயக்கம்: மணிவண்ணன்
  ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ

மது தேன் குடங்கள்
இடை மேல் சுமந்துபோகும்
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ

காதல் என்றும் ஓய்வதில்லை
கவிதை சொன்னது

காதல் கண்ணில் தூக்கமில்லை
கவிஞர் சொன்னது

இரு கண்ணில் உன் பேரை
எழுதி பார்க்கிறேன்

உறங்காமல் இருந்தாலும்
கனவு காண்கிறேன்

எந்த நாளும் எந்தன் ஜீவன்

எந்த நாளும் எந்தன் ஜீவன்
நீயே

ராக ராஜனே
நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும்
இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே
நீ எந்தன் ஜீவனே

நாணம் கொண்டு போகும் பெண்மை
என்னை மீறி போகுமா

வேகமாகவேகமாக போகும் மேகம்
வானம் தாண்டி போகுமா

மடிமீது தலை வைத்து
மயங்க போகிறேன்

விழியோடு இமை வைத்து
உறங்க போகிறேன்

உன்னை அள்ளி கொண்ட பின்பு

என்னை அள்ளி தந்த பின்பு
பிரிவேது

ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
இதயம் துடிக்கும்
இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே
சுக ராக தேவி நீ

வியாழன், 10 ஜூலை, 2014

மலர்களில் ராஜா அழகிய ரோஜா

டூயட் பாடலாக ஆரம்பித்து தேச பக்தி பாடலாக முடித்திருக்கிறார்கள். இந்த படம், இசையமைப்பாளருக்கும் வாழ்வு தரவில்லை, பாடகர்களுக்கும் வாழ்வு தரவில்லை. பாவம். இனிமையான பாடல்.

திரைப் படம்: வள்ளிதெய்வானை (1973)
இசை: N S  தியாகராஜன்
பாடியவர்கள்: தனசேகர், மல்லிகா
இயக்கம்: தெரியவில்லை
பாடல்: தெரியவில்லை
நடிப்பு: சசிக் குமார், M பானுமதிமலர்களில் ராஜா
அழகிய ரோஜா
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா

இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா  ராஜா மகராஜா

காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி
கலை தரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி, ராணி ராணி மகராணி

ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை
காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி

பூங்கொடி முகத்தில்
புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும்
கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின்
குல நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா

பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்
அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா

செவ்வாய், 8 ஜூலை, 2014

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது

 காலத்திற்கேற்ற வகையில் அப்போதைய trendக்கு ஏற்றவாறு ஹிந்தி பாடல் இசையை ஒட்டி நமது சகலகலா வல்லவர் டி ஆர் இந்தப் பாடலை போட்டிருக்கிறார். எஸ் பி பியின் பாடல் ரசிக்கத்தக்கது. டான்ஸ்தான் உடான்ஸ். 

திரைப் படம்: தங்கைகோர் கீதம்
நடிப்பு: T ராஜேந்தர், சிவகுமார், நளினி 
பாடியவர்: எஸ் பி பி
இயக்கம், பாடல், இசை: T ராஜேந்தர்ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
யா யா யா 
தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்

மலருன்னை நினைத்து
மலர் தினம் வைத்தேன்
மலருன்னை நினைத்து
மலர் தினம் வைத்தேன்
மைவிழி
ர ப பர ப இப ப
மயக்குதே
ஹ ஹா ஹ
டிஸ்கோ   டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ  
ஹை  ஹை ஹை ஹை
ஹோ ஹோ ஹோ

கவிதைகள் வரைந்தேன்
அதிலெந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ

முல்லையுன்னை அடைய
முயற்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால்
மனதினில் அழுவேன்
பாவை உன் பார்வையே அமுதமாம்
தக தக தக தக தம்
தேவி உன் ஜாடையே தென்றலாம்
தக தக தக தக தம்
 ப ப ப ப ப ப ப பபபப
ஆஆஆஆஆ
தாம் தர்ரிந்ததக
தாம் தர்ரிந்ததக

தவம் கூட செய்வேன்
தேவதையே கண் திறந்து பாராயோ ஹா
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனமின்றி போவாயோ

திரியற்று கருகும் தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து
உன்னை தானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா
தக தக தக தக தம்
நினைவே நீ தான் நீ தான்
தக தக தக தக தம்

தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
டிஸ்கோ   டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

ஞாயிறு, 6 ஜூலை, 2014

உணவு செல்லவில்லை சகியே

இதுவரை மகா கவி பாரதியார் பாடல்களை தமிழ் படங்களில் இசையமைப்பாளர்கள் மிக அருமையாக, கவனமாக  கையாண்டிருந்தார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் பாடலை (இறுதியாக இருக்கும் காணொளி) கேட்ட பிறகு நமது இசையமைப்பாளர்களில் ஒருவர்  அவரது பாடலை கொலை செய்ய இதோ இருக்கிறார் என்று தெரிய வந்தது. 
இதற்காகவே திருமதி ஜமுனா ராணியும் திருமதி ஜிக்கியும் குழுவினருடன் பாடியுள்ள அதே பாடலை இங்கே இணைத்திருக்கிறேன். இது நமது ஆறுதலுக்காக.
இந்தப் பாடல் தனி பாடலா அல்லது திரைப்படத்திற்காக பாடப்பட்டதா எனத் தெரியவில்லை.

இது பாரதியின் கண்ணன் பாட்டு, கண்ணன் என் காதலன், (செஞ்சுருட்டி-திஸ்ர ஏகதாளம்.)
சிருங்கார ரசம்.
இந்த பாடலின் சினிமா காட்சி பிடிக்காதவர்களுக்கு பாரதியின் கண்ணன் பாடலை முழுசாக இங்கே கொடுத்திருக்கிறேன்.

என்ன சொன்னாலும் கங்கை அமரன் கங்கை அமரன் தான். அவரை மிஞ்ச தமிழ் திரை உலகில் யாரும் இல்லை. இந்தப் படத்தின் தலைப்பு பாடல் ஒன்று போட்டிருக்கிறார். ஐயப்பன் பக்தர் வீரமணியின் பாடல் உல்ட்டா பண்ணியிருக்கிறார். பாவம் தமிழ் திரை உலகம். இன்னும் வாரிசுகள் வேறு....


திரைப் படம்: சம்சாரமே சரணம் (1989)
இசை: கங்கை அமரன்
நடிப்பு: யோகராஜ், ரஞ்சனி
இயக்கம்: ஜீவபாலன்
பாடல்: மகா கவி பாரதியார் (பாவம் )
தூண்டிற் புழுவினைப்போல்
வெளியே
சுடர் விளக்கினைப்போல்
நீண்ட பொழுதாக
எனது
நெஞ்சந் துடித்த தடீ
கூண்டுக் கிளியினைப்போல்
தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளையெல்லாம்
மனது
வெறுத்து விட்டதடீ


பாயின் மிசைநானும்
தனியே
படுத் திருக்கையிலே
தாயினைக் கண்டாலும்
சகியே
சலிப்பு வந்ததடி
வாயினில் வந்ததெல்லாம்
சகியே
வளர்த்துப் பேசிடுவீர்
நோயினைப் போலஞ் சினேன்
சகியே
நுங்க ளுறவையெல்லாம்.   

கேளாதிருப்பான்

உணவு செல்லவில்லை
சகியே
உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை
சகியே
மலர் பிடிக்கவில்லை
குண முறுதியில்லை
எதிலும்
குழப்பம் வந்ததடீ
கணமும் உள்ளத்திலே
சுகமே
காணக் கிடைத்ததில்லை

பாலுங் கசந்ததடீ
சகியே
படுக்கை நொந்ததடீ
கோலக் கிளிமொழியும்
செவியில்
குத்த லெடுத்ததடீ
நாலு வயித்தியரும்
இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்
பாலத்துச் சோசியனும்
கிரகம்
படுத்து மென்றுவிட்டான்

கனவு கண்டதிலே
ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல்
இனம் விளங்கவில்லை
எவனோ
என்னகந் தொட்டு விட்டான்
வினவக் கண்விழித்தேன்
சகியே
மேனி மறைந்துவிட்டான்

மனதில் மட்டிலுமே
புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ

உச்சி குளிர்ந்ததடீ
சகியே
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்
முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ
இச்சை பிறந்ததடீ
எதிலும்
இன்பம் விளைந்ததடீ
அச்ச மொழிந்ததடீ
சகியே
அழகு வந்ததடீ

எண்ணும்பொழுதி லெல்லாம்
அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ
புதிதோர்
சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன்
அவன்தான்
யாரெனச் சிந்தைசெய்தேன்
கண்ணன் திருவுருவம்
அங்ஙனே
கண்ணின்முன் நின்றதடீ