பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 4 ஜூலை, 2014

பூங்கொடியே பூங்கொடியே பூ இருந்தால் தருவாயோ

நன்றி: எங்கேயும் கிடைக்காத இந்தக் காணோளியை வழங்கி உதவிய sweetmelody1000. 

இளமை காலக் கனவுகள். அதற்கேற்றார்போல் பாடலின் காணொளி நீண்ட நாட்கள் கிடைக்கவில்லை. இன்று கிடைத்தது. பகிர்ந்துக் கொள்கிறேன்.

பாடல் மற்றும் திரைப் படத்தினைப் பற்றிய விபரங்கள் தெளிவாக இல்லை. இங்கே நான் தந்திருப்பதும் தவறாக இருக்கலாம்.திரைப்படம்: ஸ்கூல் மாஸ்டர் (1973)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: B R  பந்துலு
நடிப்பு: ஜெமினி, பத்மினி
பாடல்: கண்ணதாசன் 
குரல்கள்: எஸ் பி பி,  S ஜானகி.
பூங்கொடியே பூங்கொடியே
ஹோ ஹோ ஹோ ஹோ

லலல லலல ஆ ஆ ஆ

பூங்கொடியே பூங்கொடியே
பூ இருந்தால் தருவாயோ
பொன்னை கொண்டு மாலை கட்டி
மாலை இட வருவாயோ

பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
பார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ
பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது
கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ
பொன்னை கொண்டு மாலை கட்டி
மாலை இட வருவாயோ

கண்களிலே நாணம் வரும்
கைகளினால் மூடி விட்டேன்

கைகளினால் மூடி விட்டால்
காதலுமா ஒடி விடும்
கன்னங்களில் என்னென்னவோ மின்னல் விளையாடும்

தாங்கவோ
தழுவவோ
உண்ணவோ
உறங்கவோ

வருஷம் மாசம் போகப் போக
வளரும் ஆசை
தீராது தீராது தீராது

பூங்கொடியே பூங்கொடியே
பூ இருந்தால் தருவாயோ
பொன்னை கொண்டு மாலை கட்டி
மாலை இட வருவாயோ

பூமியிலே வானம் வந்து
போதைக் கொண்டு சேர்ந்து விடும்
சேர்ந்தவுடன் மழை பொழியும்
பூமி எங்கும் வெள்ளம் வரும்
வெள்ளத்தினால் பிள்ளைகள் போல் முல்லை விளையாடும்
எடுக்கவோ
தொடுக்கவோ
கொடுக்கவோ
முடிக்கவோ

பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது
கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ

பூங்கொடியே பூங்கொடியே
பூ இருந்தால் தருவாயோ
பொன்னை கொண்டு மாலை கட்டி
மாலை இட வருவாயோ


1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

இப்படம் பல மொழிகளில் எடுக்கப்பட்டது.
ஹிந்தியில் சிவாஜி கணேசன் ஒரு கௌரவ வேடத்தில் நதித்திருப்பார். அதற்கான காணொளி இணைப்பு இங்கே
https://www.youtube.com/watch?v=q8vxKpQy2RM

கருத்துரையிடுக