பின்பற்றுபவர்கள்

வியாழன், 10 ஜூலை, 2014

மலர்களில் ராஜா அழகிய ரோஜா

டூயட் பாடலாக ஆரம்பித்து தேச பக்தி பாடலாக முடித்திருக்கிறார்கள். இந்த படம், இசையமைப்பாளருக்கும் வாழ்வு தரவில்லை, பாடகர்களுக்கும் வாழ்வு தரவில்லை. பாவம். இனிமையான பாடல்.

திரைப் படம்: வள்ளிதெய்வானை (1973)
இசை: N S  தியாகராஜன்
பாடியவர்கள்: தனசேகர், மல்லிகா
இயக்கம்: தெரியவில்லை
பாடல்: தெரியவில்லை
நடிப்பு: சசிக் குமார், M பானுமதிமலர்களில் ராஜா
அழகிய ரோஜா
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா

இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா  ராஜா மகராஜா

காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி
கலை தரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி, ராணி ராணி மகராணி

ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை
காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி

பூங்கொடி முகத்தில்
புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும்
கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின்
குல நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா

பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்
அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா

1 கருத்து:

கருத்துரையிடுக