பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஜூலை, 2014

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ (Oru naal Yaaro enna paadal)

மீண்டும் ஒரு மென்மையான P சுசீலா அம்மாவின் இனிய குரலில் இனிமையான பாடல். பாடல் வரிகளும் மெல்லிசையாக வருகிறது.
எளிமையான பாடல், இசை, நடிப்பு மற்றும் படக் காட்சி. எல்லாவற்றிலும் எளிமை.

திரைப் படம்: மேஜர் சந்த்ரகாந்த் (1966)
இசை: V குமார்
பாடல்: வாலி
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: நாகேஷ், முத்துராமன், A V M ராஜன், ஜெயலலிதா
இயக்கம்: K பாலசந்தர்

ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின் பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின் பாதையில் செல்ல

மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது உறவு

நில்லடி என்றது நானம்
விட்டுச் செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

செக்கச் சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன சென்னிற இதழ்கள்
செக்கச் சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன சென்னிற இதழ்கள்

இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்

உன்னிடம் சொல்லிட நினைத்தும்
உள்ளம் உண்மையை மூடி மறைக்கும்
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக