பின்பற்றுபவர்கள்

சனி, 12 ஜூலை, 2014

ராஜ மோகினி சுக ராக தேவி நீ


கோபால் ராவ் கரி அப்பாயி (1989) என்ற தெலுங்கு படத்தின் டப்பிங் இந்தப் படம். இந்தப் பாடலும் ட ப்பிங் போலிருக்கிறது. ஆனால் டப்பிங் வாடை அவ்வளவாக இல்லை. இனிமையான பாடலாக இருக்கிறது.

திரைப் படம்: காதல் ஓய்வதில்லை (1989)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம், S ஜானகி
நடிப்பு: ராஜேந்திர பிரசாத், அஷ்வினி. கார்த்திக்கும், ரம்யா கிருஷ்ணனும் கூட நடித்திருக்கிறார்கள் போலுள்ளது.
இயக்கம்: மணிவண்ணன்
  ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ

மது தேன் குடங்கள்
இடை மேல் சுமந்துபோகும்
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ

காதல் என்றும் ஓய்வதில்லை
கவிதை சொன்னது

காதல் கண்ணில் தூக்கமில்லை
கவிஞர் சொன்னது

இரு கண்ணில் உன் பேரை
எழுதி பார்க்கிறேன்

உறங்காமல் இருந்தாலும்
கனவு காண்கிறேன்

எந்த நாளும் எந்தன் ஜீவன்

எந்த நாளும் எந்தன் ஜீவன்
நீயே

ராக ராஜனே
நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும்
இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே
நீ எந்தன் ஜீவனே

நாணம் கொண்டு போகும் பெண்மை
என்னை மீறி போகுமா

வேகமாகவேகமாக போகும் மேகம்
வானம் தாண்டி போகுமா

மடிமீது தலை வைத்து
மயங்க போகிறேன்

விழியோடு இமை வைத்து
உறங்க போகிறேன்

உன்னை அள்ளி கொண்ட பின்பு

என்னை அள்ளி தந்த பின்பு
பிரிவேது

ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
இதயம் துடிக்கும்
இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே
சுக ராக தேவி நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக