பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 20 ஜூலை, 2014

என்னதான் ரகசியமோ இதயத்திலே

ஒரு விலைமாதின் வீட்டில் பாடுவது போல இருக்கும் இந்த அழகான பாடலை கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இடையிடையே கதாநாயகியுடன் நாயகன் நடிப்பது போல காட்சி அமைத்து மனதை திருப்தி பண்ணியிருக்கிறார்கள். இசையும் குரலும் பட பிடிப்பும் மனதுக்கும் கண்ணுக்கும் இனிமை சேர்க்கிறது.

திரைப் படம்: இதயக் கமலம் (1965)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: P சுசீலா
நடிப்பு: முத்துராமன், ரவிசந்திரன், K R விஜயா
இயக்கம்: ஸ்ரீகாந்த்
என்னதான் ரகசியமோ இதயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலர் பஞ்சணை மேலே
உடல் பள்ளி கொள்ளாது
அது
பள்ளி கொண்டாலும்
துயில் கொள்ள விடாது
மலர் பஞ்சணை மேலே
உடல் பள்ளி கொள்ளாது
அது
பள்ளி கொண்டாலும்
துயில் கொள்ள விடாது

ஒரு நேரம் கூட
ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே

விழி பார்க்க சொன்னாலும்
மனம் பேச சொல்லாது
மனம் பேச சொன்னாலும்
வாய் வார்த்தை வராது

அச்சம் பாதி ஆசை பாதி
பெண் படும் பாடு
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே

பேரழகிருந்தென்ன
ஒரு ரசிகன் இல்லாமல்
தேன்
நிறைந்திருந்தென்ன
பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை
இன்பம் இல்லாமல்
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
முதல் இரவு வந்ததும்
இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும்
நான் உருகி நின்றதும்
முதல் இரவு வந்ததும்
இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும்
நான் உருகி நின்றதும்
என்
கன்னத்தின் மேல்
கோலம் போட்டு துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும்
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக