பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 18 ஜூலை, 2014

வேலையில்லா பட்டதாரி.

வேலையில்லா பட்டதாரி.

படம் முடிந்து வெளியில் வருமுன்னமே மக்கள் போனில் படம் மொக்கை படம் மொக்கை என்று விளம்பரம் செய்துவிட்டார்கள்.
இந்த காலத்தில் காமெடியாக படம் எடுத்து ஓட்டுவார்களா...இயக்குனர் சுமார் 1௦௦ பழைய தமிழ் படங்களைப் பார்த்து அதிலிருந்து சில சில காட்சிகளை சுட்டு பட மாலை கட்டியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஒரு படத்துடன் இயக்குனர் வேலையில்லா பட்டதாரி ஆகிறார் என்பது மட்டும் நிச்சயம்.
இசையும் தேறவில்லை பாடல்களும் படு அரைகிறுக்கு பாடல்கள்.
தனுஷ் நடிப்பில் கொஞ்சம் கூட இயற்கை தெரியவில்லை. 
காமெடியாகிப் போன அசிங்கமான சண்டைக் காட்சிகள். 

மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி ஒரு வேலையில்லா நாதாரி.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லவேளை... நன்றி...

காரிகன் சொன்னது…

உங்களுக்கு இவ்வளவு கோபம் வருமென்று இப்போதுதான் தெரிகிறது . இருந்தாலும் நியாயமான கோபம்தான். அந்தக் கண்ராவிப் படத்தை பார்க்காமலே இதை என்னால் சொல்ல முடியும்.

NAGARAJAN சொன்னது…

இப்படத்தின் விமர்சனத்தை இந்த இணைப்பில் பாருங்கள்.

http://www.truetamilan.com/2014/07/blog-post_21.html

Unknown சொன்னது…

நாகராஜன் சார், நான் படம் பார்த்தது 17ந்தேதி. பார்த்து வந்தவுடன் யாருடைய கருத்தையும் எதிர்பார்க்காமல் என்னுடைய உள்ளத்தில் தோன்றியதை எழுதினேன். மெச்சூர் ஆடியன்ஸ் என்பார்கள். அவர்களுக்கு இந்தப் படம் பார்த்தால் இப்படித்தான் தோன்றும் என்று கருதுகிறேன். நீங்களும் பாருங்கள். பின்னர் புரியும். இதற்கிடையே நேற்று இந்த தளத்தில் இந்த விமர்சனம் வந்துள்ளது. நான் எழுதியதற்கும் இவர்களின் விமர்சனத்திக்கும் இடையே பல தனுஷ் ரசிகர்கள் படம் பிரமாதம் என எழுதி மக்களை ?? வருவதால் எதற்கு வம்பு என பலர் இப்பொழுது இதை ஒரு சிறப்பான படமாக எழுதி வருகின்றனர். இதை சிறந்த படம் என்றால் சைவம் போன்ற படங்களை எங்கே கொண்டு போய் வைப்பது?

கருத்துரையிடுக