பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்

S P Bயின் இன்னுமொரு அருமையான பாடல் G K வெங்கடேஷ் இசையில்.

திரைப் படம்: மல்லிகை மோகினி
இசை: G K வெங்கடேஷ்
பாடியவர்: S P B
பாடலாசிரியர்: கண்ணதாசன்
நடிப்பு: (பம்பாய்) விக்ரம், லதா
இயக்கம்: துரை

ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன் இன்று நேரில் காண்கிறேன்

ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்

எந்தன் பாதையில் இந்த தேவதை குரலோசை கேட்கிறேன்
உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம் நான் வானில் பறக்கிறேன்
விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம்

ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்

பனி மல்லிகை மண மோகினி உனை மறக்க முடியுமோ
ஓராயிரம் கவி பாடினும் இதை ஈடு செய்யுமோ
ஏழுலகமும் சென்று தேடினும்
ஏழுலகமும் சென்று தேடினும்
இதை காணக் கூடுமோ

ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்

மழை காலங்கள் வரும் வேளையில் உன்னை மேகம் ஆக்குவேன்
இளம் கோடையில் எந்தன் ஜாடையில் உன்னை தென்றல் ஆக்குவேன்
என் நெஞ்சமே ஒரு ஆலயம்
என் நெஞ்சமே ஒரு ஆலயம்
உன்னை தெய்வம் ஆக்குவேன்

ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன் இன்று நேரில் காண்கிறேன்

ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்

சனி, 30 ஜூலை, 2011

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்

இசையிலும் குரல்களிலும் என்ன மென்மை? அழகான பாடல்.

இங்கே நான் தந்திருக்கும் விபரங்கள் தவறாகவும் இருக்கலாம்.
திரைப் படம்: கண்ணுக்கொரு வண்ணக் கிளி (1991)
குரல்கள்: S P B, ஆஷா போன்சிலே

நடிப்பு: விஜயன்
இசை: இளையராஜா
இயக்கம்: R சுந்தரராஜன்http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU1NzA5MV9LR0JlS19mOGE5/unnai%20naan%20paarkaiyil.mp3

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

ஆவாரம் பூவுக்கு மேலாடை ஏன் இங்கே
ஆடைக்கும் மேலாடை நீ கொண்டு வா இங்கே
உன் கூந்தலில் பார்க்கிறேன் தொங்கும் தோட்டங்கள்
பொன் மாலையில் மல்லிகை பூவைச் சூட்டுங்கள்
என் மார்பிலே ஆடும் பொன் ஆரமே
செந்தூரமே உன்கள் கண்ணோரமே
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே
மை வைத்த கண்ணோரம் பொய் வைக்கக் கூடாது
மாதங்கமோ தங்கம் கை வைக்கக் கூடாது
நீ பார்த்திடும் பார்வையில் முள்ளும் பூ பூக்கும்
நீ பேசிடும் சொல்லிலே கள்ளும் தேனூறும்
பிருந்தாவனம் எங்கே போகின்றது
என் கன்னமே தேடி போகின்றது
நீ கண்ணனா என் உயிர் கள்வனா

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

லா லா லா லா லா லா லலலல லா லா

வெள்ளி, 29 ஜூலை, 2011

அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ

மென்மையான இசையுடன் கூடிய பாடல்.


திரைப் படம்: இன்னிசை மழை (1991)
இசை: இளையராஜா
குரல்கள்: S P B, S ஜானகி
இயக்கம்:ஷோபா சந்திரசேகர்
நடிப்பு: நிராஜ், பர்வீன்
பாடல்: வைரமுத்து
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம் சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம் சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ

பத்து விரல் பட்டால் என்ன முத்த மழை இட்டால் என்ன
ஆகா..ஆகா..ஆகா பொன்னே மணியே
பட்டு உடல் சுட்டால் என்ன வெட்கம் அதை விட்டால் என்ன
ஆகா..ஆகா..ஆகா அன்பே அமுதே
கங்கை நதி நீராட கண்ணன் வரத்தான்
மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்
ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும் கூடி வரும் நாளிது

நேற்றிரவு..அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம் சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம் சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ

அந்தப்புர சந்தோசங்கள் அர்த்த ஜாம சங்கீதங்கள்
ஆகா ஓகோ ஹே ஹே உன்னால் வந்ததே
தென்பொதிகை சாரல் என சின்னமணி தூரல் என
ம் ம்...ஆகா..ஓகோ இன்பம் தந்ததே
முன்பின் மனம் காணாத அன்பின் விளக்கம்
முற்றுப்புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்
இனி முதுமை வரையில் நமது உறவு ஓடி வரக் கூடுமே

அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம் சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம் சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன ஹா ஹா ஹா ஹா ஹா
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ


வியாழன், 28 ஜூலை, 2011

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

எல்லா விதத்திலும் கொஞ்சம் வேகமான பாடல்.


திரைப் படம்: ஏழைக்கும் காலம் வரும் (1975)
குரல்கள்: K J யேசுதாஸ், P சுசீலா
இசை: V குமார்
நடிப்பு: முத்துராமன், ஷோபா
இயக்கம்: S ராஜேந்திர பாபு
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்
ஆ ஹ ஹ ஹ
கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம்
ஆ ஹ ஹ ஹ
தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம்
ஆ ஹ ஹ ஹ
ஹய்ய, என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம்

ம்ம்ம்ம்ம்
ஹா ஹா
ம் ம் ம் ம்
ல ல ல
ல ல ல ல ல ல
அம்மாடி புதியது புதியது உன்னாசை
என்னாளும் இனியது இனியது பெண்ணாசை

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ
ஆ ஹ ஹ ஹ
போடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானோ
ஆ ஹ ஹ ஹ
கட்டில் ஆடுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ
காம தேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ

பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே
ஆணோடு இணைவது சுகமென சொன்னானே

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

செவ்வாய், 26 ஜூலை, 2011

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது

எந்த ராகத்திலும் அடங்காத ஒரு வித்தியாசமான ஆனால் இனிமையான பாடல். M S விஸ்வனாதனின் இசையின் சாயல் தெரிகிறது.


திரைப்படம்: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (1980)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: பாக்யராஜ், ராதிகா
இயக்கம்: ரா சங்கரன்
Music File Hosting - Podcast Hosting -
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு

கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
கையில் மயங்கும் மல்லிகை செண்டு

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு

அணைக்கையில் மணக்கின்ற அமுதெனும் உன் மேனி
அழகினை கண்களால் அளந்திடவா
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
எழுதிட சம்மதம் தருவாயா.. தருவாயா..

மணவறை மாலைகள் சூடிய பின்னாலே
மலர் மகள் என்னை நீ தொட வரலாம்
உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை
பறித்திட வேகமா அவசரமா.. அவசரமா

தனிமையில் இருக்கையில் தாமதம் செய்யாதே
என்னிடம் வெட்கமேன் இளம்குயிலே
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சீதனம் வெட்கம்தான் தெரியாதா..தெரியாதா..

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நான்
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
உன் கையில் மயங்கும் மல்லிகை செண்டு.

திங்கள், 25 ஜூலை, 2011

காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க

கர்னாடக இசை பின்னனியில் ஒரு நல்ல கவிதைமயமான பாடல்.


திரைப் படம்: தாய் வீட்டு சீதனம் (1975)
குரல்கள்: K J யேசுதாஸ், P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா
இயக்கம்: மதுரை திருமாறன்காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க

கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்

காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
ஆ ஆ ஆ ஆ ஆ
தஸ நிஸ நிஸ நிஸ தரிஸ தப தப
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தனி ஸத தனி ஸத தனி தஸ பா
நித நப நித நப நித நப

கல்யாணம் ஆனால் ஆனந்த மோகம்
கல்யாணம் ஆனால் ஆனந்த மோகம்

காலைக்குக் காலை பூபாள ராகம்
காலைக்குக் காலை பூபாள ராகம்

உன் கண்வண்ணமே என் ராஜாங்கமே
உன் கைவண்ணமே என் பொன் மஞ்சமே
இனி என்னாளும் குளிர் காலமே
நம் இரு பேர்க்கும் ஒரு தேகமே
ஹோ..ஹோ..ஹோ..

காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
ஆ ஆ ஆ ஆ ஆ
காவேரி நாணல் தான் தந்த கூந்தல்
கையோடு பின்ன கால் தொட்டதென்ன
கையோடு பின்ன கால் தொட்டதென்ன

மாங்கனி வேண்டுமே.. என் மேல் இல்லையோ
தேன்பால் வண்ணமே.. என் இதழ் இல்லையோ
இன்று என் மேனி சுகம் கேட்டது
இதில் பஞ்சாங்கம் ஏன் பார்ப்பது ?
ஹோ..ஹோ..ஹோ..

காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க

ஞாயிறு, 24 ஜூலை, 2011

நீல வண்ணக் கண்களிரண்டு சிரிக்கும் முல்லை

எளிதான, சாதாரணமான கவிதை வரிகளைப் போட்டு பிரமாதமான காதல் பாடல் ஒன்றை வழங்கி இருக்கிறார்கள். இனிமையான பாடல்.


திரைப் படம்: வீராங்கனை (1964)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், P சுசீலா
இசை: S M சுப்பையா நாயுடு
இயக்கம்: A S A சாமி
நடிப்பு: பத்மினி


நீல வண்ணக் கண்களிரண்டு
நீல வண்ணக் கண்களிரண்டு
சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு
தெறித்து மின்னல் போலே வந்து மயக்குவதேனோ?
என்னை மயக்குவதேனோ?

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆசைக் கனவில் ஏறிப் பறந்து
அமுத நினைவில் ஒன்றிக் கலந்து
ஆனந்த கீதம் பாடிடும் வண்டு
அணைக்க மறந்ததேன்?
பூவை அணைக்க மறந்ததேன்?

உன் கைகள் அணைப்பிலே கனிவு தெரிந்தது
காதலின் வாசல் அன்றே திறந்தது
என் போல் ஒருவன் நினைத்தென்ன செய்வது?
இருண்ட என் வாழ்வுக்கு ஒளி யார் தருவது?
இருண்ட என் வாழ்வுக்கு ஒளி யார் தருவது?

கண் பார்த்து மகிழ்வதெல்லாம்
கனவாகிப் போவதுண்டு
கண் பார்த்து மகிழ்வதெல்லாம்
கனவாகிப் போவதுண்டு
காதல் சேர்த்து வைப்பதற்கு
காரணம் யார் சொல்வதுண்டு?
உணர்வோடு கலந்து விட்ட உயிரே உன் வாழ்வின்
ஒளியாக நானிருப்பேன்
சுடராக நீயிருப்பாய்
ஒளியாக நானிருப்பேன்
சுடராக நீயிருப்பாய்

நீல வண்ணக் கண்களிரண்டு
சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு
தெறித்து மின்னல் போலே வந்து மயக்குவதேனோ?
என்னை மயக்குவதேனோ?

சனி, 23 ஜூலை, 2011

சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று

இன்றைக்கும் கேட்டால் மனம் நெகிழச் செய்யும் பாடல். பாடலின் ஒவ்வொரு வரியும் அர்த்தமுள்ளது. குழந்தை இல்லை என்னும் உணர்வை மிகப் பிரமாதமாக பாடலாக வடித்தெடுத்திருக்கிறார்கள்.


திரைப் படம்: நீலவானம் (1965)

பாடியவர்: P சுசீலா

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி

பாடல்: கண்ணதாசன்

நடிப்பு: சிவாஜி, தேவிகா

வசனம்: K பாலசந்தர்

இயக்கம்: P மாதவன்

சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று

சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று

சொல்ல சொல்ல தாய் மனம்

மெல்ல மெல்ல போய் வரும்

சொல்ல சொல்ல தாய் மனம்

மெல்ல மெல்ல போய் வரும்

தெய்வமே தாயிடம்

தேர் ஏறி ஓடி வரும்

சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று

மலர் இல்லாத தோட்டமா

கனி இல்லாத வாழையா

மகன் இல்லாத அன்னையா

மகனே நீ இல்லையா

மலர் இல்லாத தோட்டமா

கனி இல்லாத வாழையா

மகன் இல்லாத அன்னையா

மகனே நீ இல்லையா

வண்ண வண்ண வான் முகம்

எண்ண எண்ண தேன் தரும்

வண்ண வண்ண வான் முகம்

எண்ண எண்ண தேன் தரும்

தெய்வமே தாயிடம்

தேர் ஏறி ஓடி வரும்

சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று

நினைவில் வந்த நிம்மதி

நேரில் வந்ததில்லையா

நினைவில் வந்த நிம்மதி

நேரில் வந்ததில்லையா

மனதில் மட்டும் அன்னையா

மகனே நீ இல்லையா

மனதில் மட்டும் அன்னையா

மகனே நீ இல்லையா

இல்லை இல்லை நீ என

எண்ண எண்ண வேதனை

இல்லை இல்லை நீ என

எண்ண எண்ண வேதனை

அன்னையின் வாழ்வும் நீ

இல்லாமல் போய் விடுமோ

சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று

சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று

வெள்ளி, 22 ஜூலை, 2011

மலரும் கொடியும் பெண்ணென்பார்...

கொஞ்சும் திருமதி P சுசீலா அம்மாவின் குரல் சொல்லும் இந்தப் பாடலின் தரத்தை. அந்தக் காலத்தில் காதல் வயப் பட்டவர்களுக்கு தெரியும் இந்தப் பாடலின் அருமை. காதல் குறைகளை பார்க்காது என்பது. இன்றும் மன அமைதிக்கு ஏற்ற பாடல் இது.


திரைப் படம்: எல்லாம் உனக்காக (1961)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி
இயக்கம்: A சுப்பாராவ்
குரல்கள்: T M S, P சுசீலா


மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

மலரும் கொடியும் நடப்பதில்லை

அவை மணம் தர என்றும் மறப்பதில்லை

மலரும் கொடியும் நடப்பதில்லை

அவை மணம் தர என்றும் மறப்பதில்லை

மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

கோவிலில் விளங்கும் சிலை போலே

என் குலத்தில் விளங்கும் திருமகளே

கோவிலில் விளங்கும் சிலை போலே

என் குலத்தில் விளங்கும் திருமகளே

கோவிலின் சிலைகள் நடப்பதில்லை

கோவிலின் சிலைகள் நடப்பதில்லை

அதை குறையென கலைகள் வெறுப்பதில்லை

மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

தேன் மணம் தவழும் பூ மகளே

என் சிந்தையில் மலர்ந்த தாமரையே

தேன் மணம் தவழும் பூ மகளே

என் சிந்தையில் மலர்ந்த தாமரையே

தாமரை மலரும் நடப்பதில்லை

தாமரை மலரும் நடப்பதில்லை

அதை தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை

நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டோம்

நினைவினில் குறைகள் வருவதில்லை

நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டோம்

நினைவினில் குறைகள் வருவதில்லை

கண்களில் ஒன்றாய் கலந்துவிட்டோம்

இனி காட்சிகள் வேறாய் தெரிவதில்லை

கண்களில் ஒன்றாய் கலந்துவிட்டோம்

இனி காட்சிகள் வேறாய் தெரிவதில்லை

மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

வியாழன், 21 ஜூலை, 2011

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...

எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது. நண்பர்களுக்கும் பிடிக்கும் என் நினைக்கிறேன். இதை பாடிய பெண் குரல் சரோஜினிக்கு இதுதான் முதலும் கடைசியுமான பாடல் என் நினைக்கிறேன். என்ன இனிமையான  மென்மையான குரல்!! படத்தின் பெயர் கூட சரிதானா என்பது தெரியாது. இசை K V மகாதேவன் என்பதாக நினைவு. மிக மிக இனிமையாக இசையும், குரலும் கவிதையும் கலந்து வழங்கி இருக்கிறார்கள்.

திரைப் படம்: அவளா இவள்

குரல்கள்: S P B, சரோஜினி

இப்படத்தினை பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை


Upload Music - Play Audio -

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

பூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி மூடிய திரு மேணி முக்கனி கொண்டாடும்...

மூவகை கனி தேடி மன்னவன் வரும் போது நால்வகை குணம் வந்து நெஞ்சினில் நின்றாடும்...

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

பூமழை தூவிய பஞ்சனை மேவிய பைங்கிளி போல் உன்னை அள்ள வேண்டும்....

மாலை மயங்கிய வேளை தொடங்கிட மந்திரம் யாவையும் சொல்ல வேண்டும்...

இன்னும் இன்னும் சொல்ல சொல்ல என்னென்னவோ எண்ணம் கொண்டு சொல்லு சொல்லு என்று என்னை கெஞ்ச வேண்டும்...

அந்த சுகம் என்னவென்று போக போக கொண்டு வந்து அள்ளி அள்ளித் தந்த பின்பு என்ன வேண்டும்...

நீ ஒரு கடலாட்டம்.. நான் ஒரு படகாட்டம்...நீந்திடும் மனம் உண்டு நித்தமும் வெள்ளோட்டம்...

நித்தமும் இது போலே முத்திரை பதித்தாலே சித்திரை கொடியாளின் நித்திரை என்னாகும்...

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

புதன், 20 ஜூலை, 2011

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை

புதுக் குரல் தேடலில் மகாராஜன் அருமையாக பாடி இருக்கும் ஒரு பாடல். அருமையான பாடல் வரிகள்.


திரைப்படம்: ஒரு வீடு ஒரு உலகம் (1978)
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்கள்: K S சசிரேகா, T L மகராஜன்
பாடலாசிரியர்: புலமைபித்தன்
இயக்கம்: துரை
நடிப்பு: ஷோபா, விஜயபாபுhttp://www.divshare.com/download/13571932-ada


ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை

ரதி மாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாள்தொரும் ஓதுவதில் எத்தனை ஆசை
நாள்தோரும் ஓதுவதில் எத்தனை ஆசை

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை...

ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும்
கோலம் கொண்டதென்ன...

தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு...
மயங்கி நின்றதென்ன சொல்ல...

திருமண மேடையில் நாதஸ்வரம்...

இருமன மேடையில் நாளும் சுகம்...

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை...

நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென
பாடிடும் தென்றல் காற்று...

என் காதல் தேவி...பல்லாண்டு வாழி...
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு

இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே...

இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே...

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை...

செவ்வாய், 19 ஜூலை, 2011

நன்றி

இங்கு கருத்துரைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. உங்களின் அனைத்து பாராட்டுதல்களும் இந்த பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி, படமாக்கியவர்களையே சாரும் என்பதால் நான் நமது நண்பர்களுக்கு தனித் தனியாக நன்றி சொல்ல முற்படவில்லை. உங்கள் கருத்துரைகளை தொடருங்கள். நன்றி.

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்..Alai meethu thadumaruthe...

S P B குரலை சற்று மாற்றிப் பாடியிருக்கிறார். S P Bயும் வாணியும் பாடலில் சோகத்தை இழைத்து அருமையாக பாடியிருக்கிறார்கள். ஒரு அபூர்வ பாடல்.


திரைப் படம்: அன்புள்ள மலரே (1984)
குரல்கள்: S P B , வாணி ஜெயராம்
இசை: இளையராஜா
நடிப்பு: சரத்பாபு, ஸ்ரீவித்யா
இயக்கம்: B R ரவிஷங்கர்
http://www.divshare.com/download/15328920-581


அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

சுமை தாங்காமலே கரை தேடும்

சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்கண்ணில் இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை

ஏதோ கொஞ்சம் இனிமை

பெண்ணை பெண்ணாய் காணும் காலம் இல்லை

போதும் போதும் தனிமை

பிள்ளை என்னும் கொடி முல்லை கண் வளர

இல்லை இல்லை கவலை

ஆஆ ஆஆ

இந்த நேசம் சுகம் ஆகுமே

இவள் வாழ்க்கை நிறம் மாறுமே

என்றாலும் கண்ணொரம் ஓர் சோகமேஅலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

சுமை தாங்காமலே கரை தேடும்

சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே

ஏதோ சொல்லி சிரிக்கும்

தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே

சாகும் முன்பே எரிக்கும்

தானாய் ஏணி தரும் மேலே ஏற விடும்

மீண்டும் ஏணி பறிக்கும்

ஆஆ ஆஆ

தடுமாறும் இங்கு நியாயங்கள்

இதனால்தான் பல காயங்கள்

கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

சுமை தாங்காமலே கரை தேடும்

சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

திங்கள், 18 ஜூலை, 2011

தலைவி..தலைவி..என்னை நீராட்டும் ஆனந்த அருவி...

என்ன இனிமை இந்தப் பாடும் குரல்களில்!


திரைப் படம்: மோகனப் புன்னகை (1981)
இயக்கம்: C V ஸ்ரீதர்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
பாடிய குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
நடிப்பு: சிவாஜி, ஜெய ப்ரதாதம்தம்தம்தம்தம்தனம்
தம்தம்தம்தம்தம்தனம்

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன

விரசம் எதுவும் இன்றி
சரசம் பயிலும் இந்த
வேடிக்கை நீடிக்குமோ
விரசம் எதுவும் இன்றி
சரசம் பயிலும் இந்த
வேடிக்கை நீடிக்குமோ

விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும்
ஏன் இந்த சந்தேகமோ
விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும்
ஏன் இந்த சந்தேகமோ

இது பெண்ணொடு உண்டானது

அது கூடாது பொல்லாதது

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன
ஹா ஹா ஹா ஹா
தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன
ஹா ஹா ஹா ஹா

ரதியும் மதனும் தென்றல்
ரதத்தில் உலவி வந்து
பூ பாணம் போட்டாரம்மா
ரதியும் மதனும் தென்றல்
ரதத்தில் உலவி வந்து
பூ பாணம் போட்டாரம்மா

ரசனை மிகுந்த இந்த
ரசிகன் இருக்க கண்டு
யார் என்று கேட்டாரைய்யா
ரசனை மிகுந்த இந்த
ரசிகன் இருக்க கண்டு
யார் என்று கேட்டாரைய்யா

அது நான் என்று யார் சொன்னது

அதை நான் அன்றி யார் சொல்வது

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன
ஹா ஹா ஹா ஹா
தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன
ஹா ஹா ஹா ஹா

ஞாயிறு, 17 ஜூலை, 2011

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

இனிமையான பாடல் வரிகளும், மென்மையான இசையும், அமைதியான குரலும் இணைந்தது.


திரைப் படம்: இதயத்தில் நீ (1963)
இயக்கம்: முக்தா  V ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி, தேவிகா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்: P B ஸ்ரீனிவாசன்
பாடல்: வாலி 
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...பாமாலை பாடவா...

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...பாமாலை பாடவா...

நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே....

நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே....

நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே...

நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே...

வடிவங்கள் மறைந்துவிடும் வண்ணங்கள் மறையாதே...

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...பாமாலை பாடவா...

ஆ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஹோ

கன்னம் எனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே...

கன்னம் எனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே...

கொஞ்சி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே...

உருவங்கள் மாறிவிடும் உள்ளங்கள் மாறாதே...

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...பாமாலை பாடவா...

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...

சனி, 16 ஜூலை, 2011

ஆலயம் நாயகன்..கோபுரம் நாயகி..

மற்றுமொரு ஆர்ப்பாட்ட இசை இல்லாத இனிமையான பாடல் V குமார் இசையில். இது முழுமையாக இலங்கையில் படமாக்கப் பட்டது.


திரைப் படம்: நங்கூரம் (1979)
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி, விஜய குமரதுங்க (முன்னால் இலங்கை அதிபர் சந்திரிகாவின் கணவர்)
இசை: V குமார் + கேமதாசா (இலங்கை)
பாடல்: கண்ணதாசன்http://www.divshare.com/download/14237840-10eஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை

ஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி

அமைதியான தீபம் ஒன்று
அழகு பொங்கும் மோகனம்
அமைதியான தீபம் ஒன்று
அழகு பொங்கும் மோகனம்
ஆதிகால பெண்மை
இது நீதி காக்கும் என்னை
நேரில் வந்த சொர்க்கம்
அதன் வாசல் தானே வெட்கம்

ஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி

இறைவன் பார்த்து தந்த இன்பம்
இணை இல்லாத காவியம்
இறைவன் பார்த்து தந்த இன்பம்
இணை இல்லாத காவியம்
ஏழு லோகம் எங்கும்
இந்த தேவி போல இல்லை
ஏழை தோட்ட ரோஜா
அதை காவல் காக்கும் ராஜா

ஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை

ஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி

வெள்ளி, 15 ஜூலை, 2011

எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...

இந்த படத்தினைப் பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை.
ஆனால் மிக நல்ல பாடல்.

திரைப் படம்: பணம் பகை பாசம் (1974)

இசை: ஷங்கர் கணேஷ்
குரல்கள்: S P B, P. சுசீலா

 http://www.divshare.com/download/14948623-29e

எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...

எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...எனக்கு உனது ஏக்கம் கண்ணா என்னை கேட்கலாமா...

எனக்கு உனது ஏக்கம் கண்ணா என்னை கேட்கலாமா...எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...

நல்ல வேணுகானம் உந்தன் மொழியோ...

இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ....எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ என்னை பார்த்தால் கவிதை வருமோ...நல்ல வேணுகானம் உந்தன் மொழியோ...

இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ....எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ என்னை பார்த்தால் கவிதை வருமோ...இதுதானோ காதல் அமுதம்...உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்...இதுதானோ காதல் அமுதம்...உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்...எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...எனக்கு உனது ஏக்கம் கண்ணா என்னை கேட்கலாமா...எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...விரல் தீண்டும் போது ஒரு மயக்கம்...மனம் தீணலோகத்தில் மிதக்கும்...இது போக போக இன்னும் இனிக்கும் தெளியாத போதை இருக்கும்...பூங்கோதை கன்னன் மடியில்...அவன் மங்கை அன்பின் பிடியில்...

எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...

ஒரு நூலில் ஆடுகின்ற இடையே...உன்னை வாங்க வேண்டும் என்ன விலையே..கையில் கொடுக்க வேண்டும் நீ உனையே...உடல் யாவும் உனது வசமே...ஒரு நூலில் ஆடுகின்ற இடையே...உன்னை வாங்க வேண்டும் என்ன விலையே..கையில் கொடுக்க வேண்டும் நீ உனையே...உடல் யாவும் உனது வசமே...நெடு நாளாய் உனது அடிமை...உந்தன் சொந்தம் தங்கப் பதுமை...நெடு நாளாய் உனது அடிமை...உந்தன் சொந்தம் தங்கப் பதுமை...எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...எனக்கு உனது ஏக்கம் கண்ணா என்னை கேட்கலாமா...எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...

வியாழன், 14 ஜூலை, 2011

அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்

தேவா அவர்களின் இசையில் சிறப்பான சில பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனால் இது எந்தப் பழைய பாடலின் பதிப்பு என்பது பிடிபடவில்லை. எப்படியோ பாடல் இனிமையாக இருக்கிறது.


திரைப் படம்: புது மனிதன் (1991)

இயக்கம்: மணிவண்ணன்

நடிப்பு: சத்யராஜ், பானுப்ரியா

பாடியவர்கள்: SPB, சித்ரா

கண்ணொளி:http://www.divshare.com/download/15263153-516


காதொலி:http://www.divshare.com/download/15263072-015


ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்

அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்

சங்கம் தமிழ்ச்சங்கம்

பூங்குயில் பண்பாடுது

உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது

அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்

சங்கம் தமிழ்ச்சங்கம்

பூங்குயில் பண்பாடுது

உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுதுஅள்ளித் தழுவும் பள்ளி குயிலே

அள்ளித் தழுவும் பள்ளி குயிலே

முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனேஅங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்

சங்கம் தமிழ்ச்சங்கம்

பூங்குயில் பண்பாடுது

உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுதுபோதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி

பூவில் விழுந்துவிட்டேன்தூக்கி நிறுத்த வந்தேன்

தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி

பூவில் விழுந்துவிட்டேன்தூக்கி நிறுத்த வந்தேன்

தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன்

பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன்அட உன் பேர் சொல்லிச்சொல்லி

என் பேரினை நான் மறந்தேன்அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்

சங்கம் தமிழ்ச்சங்கம்பூங்குயில் பண்பாடுது

உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுதுகாதல் பிறந்துவிட்டால்

பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லைபூக்கள் திறந்துகொண்டால்

வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லைகாதல் பிறந்துவிட்டால்

பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லைபூக்கள் திறந்துகொண்டால்

வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லைசொல்லிவிட்டால் துக்கம் இல்லை

வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லைநான் கண்ணால் சொன்னால் பாவம் தன்னால் ஏன் புரியவில்லை?அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்

சங்கம் தமிழ்ச்சங்கம்பூங்குயில் பண்பாடுது

உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுதுஅள்ளித் தழுவும் பள்ளி குயிலே

முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனேஅங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்

சங்கம் தமிழ்ச்சங்கம்

பூங்குயில் பண்பாடுது

உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது

புதன், 13 ஜூலை, 2011

தென்றல் வரும் .. என்னை அணைக்கும்

மிகச் சாதாரணப் பாடலை சிறப்பாக குரல் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார்கள் பின்னனி பாடகர்கள்.

திரைப் படம்: பாரு பாரு பட்டிணம் பாரு (1986)

இசை: இளையராஜா

இயக்கம்: மனோபாலா

நடிப்பு: மோகன், ரஞ்சினி

பாடல்: வைர முத்து


கண்ணொளி:
http://www.divshare.com/download/15273739-e7c


காதொலி:http://www.divshare.com/download/15273748-c6b

ல ல ல லா...

லலா ல ல லா....

தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

என்னை அணைக்கும்

ஹ ஹா ஹ ஹா ஹா

என் வாசல் எங்கும் பூமழை

என் வாழ்க்கை என்றும் வளர்பிறை

தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்நேற்று நான் உன்னை நினைத்தேன்

நினைத்தேன் இடை நான் இளைத்தேன்தோகை ஞாபகம் எனக்கும்

தினமும் இரவில் பிறக்கும்ஆடை சுமந்து அழகு நடக்கும்ஆசை பிறந்து அருகில் அழைக்கும்நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

என்னை அணைக்கும்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

என் வாசல் எங்கும் பூமழை

என் வாழ்க்கை என்றும் வளர்பிறை

தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

மாட மாளிகை அமைப்பேன்

மலரால் படுக்கை விரிப்பேன்கூட நான் வரத் துடிப்பேன்

கதவை மெதுவாய் திறப்பேன்காலம் கனிந்தால் கனவு பலிக்கும்காவல் கடந்தால் நாணம் தடுக்கும்பக்கம் இழுக்கும் வாலிப வேகம்தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

என்னை அணைக்கும்

ஹ ஹா ஹ ஹா ஹா

என் வாசல் எங்கும்

பூமழை

என் வாழ்க்கை என்றும்

வளர்பிறை

தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

செவ்வாய், 12 ஜூலை, 2011

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ

கர்னாடக இசை அடிப் படையில் நல்லதொரு பாடல்.


திரைப் படம்: ரத்தப் பாசம் (1980)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: SPB
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: சிவாஜி, ஜெயசித்ரா
 
கண்ணொளி:
 

 
http://www.divshare.com/download/15258252-e09
 
 
காதொலி:
 

 
http://www.divshare.com/download/15258277-ef8
 
 
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ
மஞ்சள் வானிலே வந்த பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ
மஞ்சள் வானிலே வந்த பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ

சங்க தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ

சங்க தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஹா ஹா ஹா ஹா

வண்ண சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ

வண்ண சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ
கர்னாடக இசை
அந்தக் கோவிலில் ரெண்டு தீபங்கள்
கண்ணில் ஜோதி தருகின்றதோ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ


மங்கை மோகனம் தந்த ஞாபகம்
ஒரு ராகம் பாடுதம்மா
இந்த தாகமும் அந்த பாடலும்
ஒன்று போல தோன்றுதம்மா

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

திங்கள், 11 ஜூலை, 2011

மங்கை ஒரு திங்கள் கலை மலர்ந்த மணிக் கண்கள்

கவிதை வடிவில் ஒரு திரைப் படப் பாடல். மிகச் சில இசைக் கருவிகளை மட்டும் பயன்படுத்தி இசையமைத்திருக்கிறார் M S விஸ்வனாதன். சுதந்திரமாக பாடுவதற்க்கு S P B க்கு வாய்ப்பு கொடுத்தது போல தெரிகிறது.  வெளிவராத படத்திலிருந்து ஒரு அரிய பாடல்


திரைப் படம்: முன் ஒரு காலத்தில்
பாடல்: வாலி???http://www.divshare.com/download/15278662-9b9

மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்

துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்

பாவை முகக்கலைகள்
தமிழ் கோவில் கொண்ட சிலைகள்
வங்கக்கடல் அலைகள்
பனி வழங்கும் வண்ண மலைகள்
பொங்கும் நதி நிலைகள்
அந்தப் பூவை நகை வளைகள்
மங்கை ஒரு திங்கள்

ஆ ஹா ஹா
போதை மொழி பனங்கள்
ஆ ஆ ஆ
போதை மொழி பனங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்
போதை மொழி பனங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்
ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடையில் பல விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்

காட்டும் அவள் அசைகள்
அவள் கால கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் ரெண்டு கதைகள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்

சனி, 9 ஜூலை, 2011

கொஞ்சும் மலர் மஞ்சம்...அதில் தஞ்சம் இரு நெஞ்சம்

இது கர்னாடக சங்கீதமா, மெல்லிசையா இல்லை குத்துபாட்டு ரகமா விஸ்வனாதனுக்கு மட்டுமே இந்தக் கலை கை வண்ணம். பாடகர்களை ரொம்பவும் சிரமப் படுத்தியிருக்கும் இந்தப் பாடல். ஆனால் மிக எளிமையாக பாடி இருக்கிறார்கள். (மலையாள டப்பிங்க் படமோ?)


திரைப் படம்: ஜனனி (1985)
குரல்கள்: ,வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம், பாடல்: நேதாஜி
நடிப்பு: ஜெயராம், பவ்யம்http://www.divshare.com/download/15255992-0fe

கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ
என் உயிரே தங்கம்
உனது அங்கம் அதில் எங்கும்
இசை பொங்கும் அதை தாராயோ
நான் இன்புறவே
கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ
என் உயிரே தங்கம்
உனது அங்கம் அதில் எங்கும்
இசை பொங்கும் அதை தாராயோ
நான் இன்புறவே

பொன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்

நான் ஆட
எந்தன் மணிச் சலங்கை ஆடும்
நீ ஒரு தேவதை
நாட்டிய தாரகை
நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
இடை என்ன இறைவனா
உள்ளதா இல்லையா
வானூறும் வண்ண மணிப் புறா உன் தேகம்
ஆடிடும் பாடிடும்
ஆனந்தம் தேடிடும்
நாள் தோறும் என் மேல் மலர் சிறகை மூடும்
தழுவிடும் நழுவிடும்
அது தரும் புது சுகம்
வான் நிலவொளி பரவிடும்
தாழ் மழை அது பொழிந்திடும்
பார் இனிமைகள் துளிர்விடும்
வா இளமைகள் பறந்திடும்
நாள் பார்த்து பாய் போடவா
அந்த நாள் தேடி நான் வாடவா

பொங்கும் புது இன்பம்
இனி எங்கும் ஆரம்பம்
இங்கு வாராயோ நீ
என் உயிரே எங்கும்
மலர் பொங்கும் மகரந்தம்
தேன் சிந்தும் அதை தாராயோ
நான் இன்புறவே
நதியாக நான் ஆடினேன்
தாகம் தணியாமல் நான் வாடினேன்

ஹா...ஹா ஹா
ஹா ஹா ஹா
தீயாக
உடல் கொதிப்பெழுந்து மோதும்
நான் உன்னை தழுவிடும்
நாள் வரை பொறுத்திடு
போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
வேர்வையின் போர்வையில்
வேள்விகள் புகுந்திடும்
பால் அருவியில் குளித்திட
நான் தினம் உன்னை அழைத்திட
நீ தனிமையில் அணைத்திட
நான் ஒரு கணம் சிலிர்த்திட
தேன் ஊற்று நீராட்டுது
நம்மை பூங்காற்று தாலாட்டுது

கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ
என் உயிரே தங்கம்
உனது அங்கம் அதில் எங்கும்
இசை பொங்கும் அதை தாராயோ
நான் இன்புறவே
அதை தாராயோ
நான் இன்புறவே
அதை தாராயோ
நான் இன்புறவே

வெள்ளி, 8 ஜூலை, 2011

நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே

மனைவியின் அருமை அதுவும் மழலைத் தரும் நிலையில் மனைவி. அருமையான பாடல் அளவான இசை மற்றும் குரல்கள்.

திரைப் படம்: மாமியார் வீடு (1993)
நடிப்பு: சிதாரா, சரவணன்
இசை: இளையராஜா
இயக்கம்: S கணேஷ் ராஜ்வழக்கமான காதொலி பாடல்:http://www.divshare.com/download/15255228-dbeநல்ல சம்சாரம் வாய்த்ததற்கு

நன்றி சொல்வேனே நான் உனக்கு

உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

விட்டு போகாதம்மா உறவு

இது தேயாத வெண்ணிலவு

அன்று போட்டேன் பூமாலை

இன்று படித்தேன் பாமாலைநல்ல சம்சாரம் வாய்த்ததற்கு

நன்றி சொல்வேனே நான் உனக்குவான் பார்த்ததே நீர் வார்த்திட

சிப்பி ஒன்று வண்ண சிப்பி ஒன்று

நீர் வார்த்ததும் உண்டானதே

முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று

ஆறேழு மாதங்கள் போனால்

ஆராரோ பாட்டிங்கு கேட்கும்

ஆவாரம் பூப்போன்ற கண்ணால்

அப்பாவை என் பிள்ளை பார்க்கும்

நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்

பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்

ஒன்றிரண்டு வேண்டுமென்று

உன்னை நான் கேட்பேன்சம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்துக்கு

உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

விட்டு போகாதையா உறவு

இது தேயாத வெண்ணிலவும் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

பொன் மானையும் செம்மீனையும்

கண்ணில் கண்டேன் உந்தன்

கண்ணில் கண்டேன்

பாலாற்றையும் தேனாற்றையும்

உன்னில் கண்டேன்

கண்ணே உன்னில் கண்டேன்

உன்னோடு நான் வாழும் வீடு

ஆனந்த பூ பூக்கும் காடு

அன்றில்கள் ஒன்றான கூடு

ஆகாது வேறேதும் ஈடு

தாரம் வந்தாள் கொஞ்சும் தென்றல் என்று

பிள்ளை வந்தான் வண்ண முல்லை என்று

பெண்ணரசி பொன்னரசி உன்னைப்போல் ஏதுசம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்துக்கு

உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

விட்டு போகாதையா உறவு

இது தேயாத வெண்ணிலவு

அன்று போட்டேன் பூமாலை

இன்று படித்தேன் பாமாலைஉந்தன் சம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்துக்கு

வியாழன், 7 ஜூலை, 2011

யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம்

அழகான இந்தப் பாடல், படம் பேசப் படாததால் அரிய பாடலாகிப் போனது. வழக்கமான SPBயும் சற்று வித்தியாசமாக உமா ரமணனும் இனிமை சேர்த்திருக்கிறார்கள்.


திரைப் படம்: பாரு பாரு பட்டணம் பாரு (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உமா ரமணன், SPB
நடிப்பு: மோகன், ரஞ்சனி
இயக்கம்: மனோபாலா
பாடலாசிரியர்: கங்கை அமரன்http://www.divshare.com/download/14237104-d77

ஹா ஹா ஹாஹா ஹா.. ந ந ந ந ந நா ந ந ந ந ந

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹாஹா

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா ஹா ஹா

கடலலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம் நிதம் பல வித பாவம்
ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவமேற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே வருகிறதே
தினம் தினம்

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும்

அலை என ஓடும் ஆசை வந்து கூடும்
உன் பாணமோ பூவை சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இளமனதில் புது உறவு தெரிகிறதே
தினம் தினம்

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா ஹா ஹா
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

புதன், 6 ஜூலை, 2011

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்

இந்தப் பாடலை பாடும் குரல்களின் இனிமையே தனிதான். இசையமைப்பாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். இன்னுமொரு அரிய பாடல்.
சாந்தி கிருஷ்ணா!!! தனது அமைதியான நாகரீகமான நடிப்பால் அப்போதைய ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். கிருஷ்ணா என்ற இயக்குனரை (நடிகர்?) காதலித்து மணந்துக் கொண்டார். அவரது காதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்து போனார் என்றுக் கேள்வி பட்டேன். செய்தி சரியோ தவறோ தெரியவில்லை.

திரைப் படம்: சிவப்பு மல்லி (1981)
பாடல்: வைரமுத்து
குரல்கள்: K J Y, P சுசீலா
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: ராம நாராயணன்
நடிப்பு: சந்திரசேகர், சாந்தி கிருஷ்ணாhttp://www.divshare.com/download/15246816-323

தன ந ந ந தன ந ந ந
தன ந ந ந தன ந ந ந
தன ந ந ந தன ந ந ந
தன ந ந ந தன ந ந ந
தன ந ந ந தன ந ந ந

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்

எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசி கொண்டால் அனல் உருவாகும்
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசி கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடி கொண்டால் அது கொஞ்சம் ஆறும்

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தானனா தானனா நா
தானனா தானனா நா
தானனா தானனா நா
தானனா தானனா நா

இளம்பிரையே இளம்பிரையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
இளம்பிரையே இளம்பிரையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே
அட தூங்கிய சூரியனே இரவை தொடாதே..
தொடாதே.. தொடாதே..

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்

தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தன ந ந தன ந ந தன ந ந
தன ந ந தன ந ந தன ந ந

செவ்வாய், 5 ஜூலை, 2011

காதல் சிறகை காற்றினில் விரித்து

நீண்ட காலம் பிரிந்திருந்த கணவனை சந்திக்க இருக்கும் பெண்மணியின் உள்ளக் கருத்துக்களை அப்படியே வார்த்திருக்கிறார் பாடலாசிரியர். இசையமைப்பும் பாடிய விதமும் கன கச்சிதமாக இருக்கிறது.


திரைப் படம்: பாலும் பழமும் (1961)
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி
இயக்கம்: A பீம்சிங்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்: P சுசீலாhttp://www.divshare.com/download/15154628-c49தாவி வரும் மேகமே என் தாய் நாடு செல்வாயா

ஊர் உலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ

இன்று மணம் முடித்த ஏந்திழைப் போல் நான் இங்கே

சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விட மாட்டாயோ


காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா

கண்ணீர் கடலில் குளிக்கவா

எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா

இரு கை கொண்டு வணங்கவா

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா

கண்ணீர் கடலில் குளிக்கவா

முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா

முறையுடன் நடந்த கணவர் முன்னாலே

முறையுடன் நடந்த கணவர் முன்னாலே

பரம்பரை நானம் தோன்றுமா

பரம்பரை நானம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச மறந்து சிலையாய் இருந்தால்

பேச மறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி

அதுதான் காதல் சன்னதி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா

கண்ணீர் கடலில் குளிக்கவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆவெள்ளி, 1 ஜூலை, 2011

யாரிது தேவதை ஓராயிரம் பூ மழை

நண்பர்களுக்கு,

இணைய இணைப்புக்கு முற்படாத இடத்திற்க்கு விடுமுறைக்கு செல்வதால் 2 அல்லது 3 நாட்கள் கழித்து மீண்டும் சந்திப்போம்.
 
வெளிவராமல் போன ஒரு படத்திலிருந்து கங்கை அமரன் இசையில் SPBயின் குரலில் ஒரு அருமையான பாடல்.


திரைப் படம்: என் ப்ரியமே (1983)
பாடல்: ந.காமராசன்
இயக்கம்: சிவகுமார்
நடிப்பு: வெளிவராத படத்தில் யார் நடித்திருந்தால் என்ன? சாரி...தெரியவில்லைhttp://www.divshare.com/download/15209772-aa9

யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

சுகம் தரும் நிலா
வரும் திரு விழா
இதோ என் காதல் தேசம் இங்கே

யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை


நி ச நி ச நி ச நி ச நி ச நி ச க ரி ச
நி ச நி ச நி ச நி ச நி ச நி ச ப ம க
க ம க த த த ம த ம த த த
நி நி நி ச நி நி நி ச சரி ரி ரி ரி ரி


காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
ஹோய்..
ஆ ஆ...
காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
பொன் வீணையே
புது பாடகன் தொடும் நேரமோ?
கண்மணியே என் உயிரே
பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட


யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

மேகங்கள் பூ தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ

ஆ ஆ ஆ...

மேகங்கள் பூ தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ

இதழ் ஒசைகள்
புது ஆசைகள்
பரிபாஷைகள்
ஆ ஆ ஆ ஆ
பூ முகமோ
பால் நிலவோ
பார்த்ததும் பூத்திடும்
யாத்திரை இரவினில்


யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

சுகம் தரும் நிலா
வரும் திரு விழா
இதோ என் காதல் தேசம் இங்கே

யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை