பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா


திருமதி சுசீலாம்மா  பாடினால்  விமர்சிக்க இடமே இல்லை. அவ்வளவு
பாடல்களும்  உயிரை  உருக்கும்  விதமாக  இனிமையாக  பாடி இருப்பார். இந்த பாடலும் அதற்கு விதிவிலக்கில்லை. எந்த  விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், நடிப்பவர் பாடுவது போல  பாடும்  சிறப்பு  அவருக்கு மட்டுமே  சொந்தம்.

திரைப்படம்: பூவும் பொட்டும் (1968)
இசை: R. கோவர்த்தன்
நடிப்பு: முத்துராமன், A V M ராஜன், பாரதி, ஜோதி லக்ஷ்மி
பாடிய குரல்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: தாதா மிராஸிUpload Music - Share Audio -


எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
கண்ணன் வழங்கும் இந்த உறவு
தென்றல் போல வானம் போல என்றும் வளர
பள்ளியறையில் மெல்ல நடந்து
கண்ணன் வரும் நாள் என்று வருமோ
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
சீதை மடியில் ராமன் இருந்தான்
ராமன் வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பது காதல் வடிவம்

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மாசனி, 26 நவம்பர், 2016

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி

இனிமையான பாடல். டி எம் எஸ் அவர்களின் குரல் ஜெயஷங்கர் பாடுவது போலவே அமைந்திருக்கும். காதைக் கிழிக்காத இனிய பின்னணி இசை.

திரைப்படம்: மகனே நீ வாழ்க (1969)

பாடியவர்கள்: டி எம் எஸ், P. சுசீலா

இசை: M. S விஸ்வநாதன்

இயக்கம்: M. கிருஷ்ணன்

நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மி.

பாடல்: தெரியவில்லைFree Music - Podcast Hosting -


ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

வெள்ளி, 18 நவம்பர், 2016

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு.. Naloru medai pozhuthoru
திரைப்படம்: ஆசை முகம் (1965)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு

கணீர் என்ற  குரலில் தெளிவான  ஆர்பாட்டம் இல்லாத பாடல். கருத்து மிக்க  பாடல். இன்று அல்ல  எந்த  காலகட்டத்து பொருத்தமான  பாடல்.

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில் கோழைகள் தலைவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்?
பிறந்தால் யாருக்கு லாபம்?
பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம்
இருந்தால் ஊருக்கு லாபம்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால் கோபுரமாவதில்லை
கோபுரமாவதில்லை
குருவிகளெலாம் உயரப் பறந்தால் பருந்துகள் ஆவதில்லை
பருந்துகள் ஆவதில்லை
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல