பின்பற்றுபவர்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

டி எம் எஸ், S ஜானகி இணைந்து பாடிய பாடல்கள் யாவும் ஏதாவது ஒரு விதத்தில் இனிமைதான். அதுவும்  K V மகாதேவன் இசையில் என்றால் இனிமைக்கு கேட்கவும் வேண்டுமா?


திரைப் படம்: செங்கமலத் தீவு (1962)
இயக்கம்: ராஜேந்திரன் (யார் இவர் ?)
குரல்கள்: டி எம் எஸ், S ஜானகி
பாடல்: ஏகலைவன் அல்லது திருச்சி தியாகராஜன்.
நடிப்பு: ஆனந்தன், ராஜஸ்ரீ
இசை: K V மகாதேவன்


ஹூ ஹூ ஹூம்
ஹா ஹா ஹா ஹா
ஹூம் ஹூம் ஹூம்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
ஆ ஆ ஆ ஆ ஆ
மலையில் அருவி பாய்ந்தோடும்
மதியை கண்ட கடல் பொங்கியெழும்
மலையில் அருவி பாய்ந்தோடும்
மதியை கண்ட கடல் பொங்கியெழும்
மங்கை உந்தன் முக மதிக் கண்டு
மனதில் இன்பம் பொங்கிடுதே
மனதில் இன்பம் பொங்கிடுதே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
மாமலையாகி நீங்கள் இருக்க
மங்கை அருவியாய் பாய்ந்திடுவேன்
மாமலையாகி நீங்கள் இருக்க
மங்கை அருவியாய் பாய்ந்திடுவேன்
அன்புக் கடலாய் நீங்கள் இருக்க
அமுதம் பொழியும் மதியாவேன்
அமுதம் பொழியும் மதியாவேன்
ஹா ஹா ஹா ஹா ஹா
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
துன்பம் தீர்ந்தது வாழ்வினிலே
இன்பம் வந்தது மனம் போலே
மணமாலை நாளை
மகிழ்ந்திடுவோம்
ஹா ஹா ஹா ஹா ஹா
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நெஞ்சு பொருக்குதில்லையே நெஞ்சு பொருக்குதில்லையே

இன்றைய இந்தியாவின் நிலைமையை பார்த்தால் இப்படித்தான் பாடத் தோன்றுகிறதோ? அன்றும் இப்படித்தான் இருந்தததால் இதை மீசை கவிஞன்  பாடினான். இன்றும் நமது நிலைமை இப்படித்தான் என்றால் நாம் வாங்கிய சுதந்திரத்திற்கு என்ன அர்த்தம் என்பது விளங்கவில்லை.
பின்னர் யார்தான் இந்த சுதந்திரத்தால் பயன் அடைந்தவர்கள்?

மிகக் கோபமாக பாரதியாரால் பாடப் பெற்ற இந்தப் பாடல் திரைப் படத்தில் சோகமாக இசைக்கப் படுகிறது. ஒரு வேளை சுதந்திரத்திற்கு பின் எடுக்கப் பட்ட படமானதால் அந்த உத்வேகம் குறைக்கப் பட்டதோ?
மற்றபடி  சரித்திரப் படங்களில் வரும் பாரதியாரின் கோபமானப்  பாடல் எல்லாமே (வீர பாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ) அப்படியே கொண்டுவரப் பட்டதாக நான் எண்ணுகிறேன்.

திரைப் படம்: பராசக்தி (1952)
இயக்குனர்: R கிருஷ்ணன் S பஞ்சு
இசை: R சுதர்சனம்
நடிகர்கள்: சிவாஜி, பண்டரிபாய்
பாடல் ஆக்கம்: மகா கவி பாரதியார்
பாடியவர்: C S ஜெயராமன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xOTQ3MTIyMF9vMHYzRV9iMmMy/nenju%20porukkuthillaiye.mp3


நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே

அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார்
மிக துயர் படுவார்
எண்ணி பயப்படுவார்
ஆங்கோர்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே

கஞ்சி குடிப்பதற்கில்லான்
அதன் காரணங்கள் இவையெனும் அறிவும் இலான்
பஞ்சமோ பஞ்சம் என்றே
நிதம் பரிதவித்து
உயிர் துடிதுடித்து
கஞ்சி குடிப்பதற்கில்லான்
கஞ்சி குடிப்பதற்கில்லான்
அதன் காரணங்கள் இவையெனும் அறிவும் இலான்
பஞ்சமோ பஞ்சம் என்றே
பஞ்சமோ பஞ்சம் என்றே
நிதம் பரிதவித்து
உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே
இவர் துயர்களை தீர்க்க ஓர் வழியுமில்லை
அங்கோர்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

இயக்குனர் திரு S P முத்துராமனுக்கு முதல் படம். நடிகை ஜெயாவிற்கு இரெண்டாவது படமானாலும் இதுவே அவருக்கு தமிழ் திரை உலகில் ஒரு ஆரம்பம் ஆனது. 
P சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் மறக்க முடியாத பாடல்.
இசை ராஜு அவர்கள். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தவர். தமிழில் இந்தப் படத்துக்கும் ராணி யார் குழந்தை என்ற படத்திற்கும் மட்டுமே இசையமைத்திருக்கிறார்.

திரைப் படம்: கனிமுத்துப் பாப்பா (1972)
குரல்: P சுசீலா
பாடலாசிரியர்: பூவை செங்குட்டுவன் என்கிறது வல்லமை
இசை : ராஜு
நடிப்பு : முத்துராமன், ஜெயா
இயக்கம்: S P முத்துராமன்


ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்று கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து
வாழ்த்துக் கூறும் தென்றலே
வசந்த காலத் தேரில் வந்து
வாழ்த்துக் கூறும் தென்றலே

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்
மாலையிட்ட மன்னனோடு
மனம் நிறைந்து வாழுவேன்
மாலையிட்ட மன்னனோடு
மனம் நிறைந்து வாழுவேன்

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

இந்தப் படத்தில் பாடும் பெண் குரல் முழுவதும் பாம்பே ஜெயஸ்ரீயினுடையது. SPBயுடன் மற்றக் குரல் இணையும் போது அந்தப்  பாடல் தனி சுவை பெறுகிறது. இந்தப் பாடல் திரைப் படத்தில் இடம் பெறவில்லை என நினைக்கிறேன். நல்ல இனிமையான பாடல்.

திரைப் படம்: தம்பதிகள் (1983)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
பாடல்: வாலி
குரல்கள்: S P B, பாம்பே ஜெயஸ்ரீ
நடிப்பு: ஜெய்ஷங்கர், சிவகுமார், பூர்ணிமா ஜெயராமன்


ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்ட

இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
வளை ஓசை மெல்ல கேட்க்கும்போது உருகிடுவாயோ
ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
வளை ஓசை மெல்ல கேட்க்கும்போது உருகிடுவாயோ
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்
பின்னால் வாராதோ
அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்
பின்னால் வாராதோ

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்ட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தேடும் என் காதல் பெண் பாவை சூடும் என் மார்பில்

மீண்டும் மறைந்த திரு சந்த்ரபோஸ் அவர்களின் இனிமைப்பாடல் ஒன்று. வாணி ஜெயராம் அவர்களின் கணீர் குரலில், முரளிக்கு ஏற்ற  T L தியாகராஜன் குரலும் இணைந்து இங்கு பளபளக்கின்றது.
பாடல் காட்சியோ இளமை இளமை இளமைதான்.


ஒரு மலரின் பயணம் (1985)
நடிப்பு: லக்ஷ்மி, முரளி, ஊர்வசி
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
குரல்கள்: T L தியாகராஜன் , வாணி ஜெயராம்
இசை: மறைந்த திரு சந்த்ரபோஸ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xOTI5MDYzMV9Sa0dQMF9kYWM2/Thedum%20En%20Kadhal-Oru%20Malarin%20Payanam.mp3

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே

தேடும் என் காதல் பெண் பாவை

கோவில் இங்கு தேவன்
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
கோவில் இங்கு தேவி
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
மனதின் வாசல் விழிகளாகும்
இதயம் காதல் பதியம் போடும்
பாடம் கேட்கும் பருவமே

தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
தேடும் என் காதல் பெண் பாவை

மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
கடலில் சேரும் நதியின் பாதம்
மனதில் சூடும் உனது வேதம்
வேகம் மோகம் நினைவிலே

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை


புதன், 21 ஆகஸ்ட், 2013

தோடி ராகம் பாடவா

அமைதியானப் பாடல். சொக்க வைக்கும் புது நடையில் இனிய குரல்களில் வருகிறது.
இது இணைத் தரமேற்ற நீண்ட நாட்களாக  என் கையிருப்பில் இருந்த பாடல். இன்றுதான் வேளை வந்தது.

திரைப் படம்: மாநகர காவல் (1991)
பாடிய்வர்கள்: K J யேஸுதாஸ், K S சித்ரா
இசை: மறைந்த திரு சந்திர போஸ்
இயக்கம்: M தியாகராஜன்
நடிப்பு: விஜயகாந்த், சுமா ரங்கநாதன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjc3NjMyOV90QWJKal8wZjZk/Thodi%20Raagam%20Paadavaa.mp3


தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீட்டுகின்ற வேளை
மடியினில் உன்னை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு

இதுவரை உன்னை நானும்
இளையவன் என்னை நீயும்
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து
உடல் முழுவதும் வேர்த்து
நீராட போராட இன்னாளில் தீர்ந்தோம்
கல்யாணம் கச்சேரி கண்ணார
என்னாளில் காணலாம்
பொன் ஊஞ்சல் பூ பந்தல் வைபோகம்
தை மாதம் மாலையிடு

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு

இரவுகள் என்னை வாட்டும்
இடையினை அது கூட்டும்
நீ இன்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனி ஏது
பிறவியில் கிடையாது
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று
உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும்
அப்போது பூங்காற்றை தூது விடு

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீட்டுகின்ற வேளை
மடியினில் என்னை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா

குழந்தைக் குரலில் M S ராஜேஸ்வரி அவர்களின் மற்றும் ஒரு பாடல். குழந்தை மனதின் கேள்விகளை அப்படியே பாடல் வரிகளாக வடித்திருக்கிறார் கவிஞர்.

திரைப் படம்: திக்கு தெரியாத காட்டில் (1972)
இசை:  M S விஸ்வனாதன்
பாடியவர்: M S ராஜேஸ்வரி
பாடல்: மறைந்த திரு வாலி
இயக்கம்: N C சக்கரவர்த்தி
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதா

http://asoktamil.opendrive.com/files/Nl8xODc3MDAyNV9LdURsNV8zZmMz/PooPoovaParanthuPogum.mp3

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

குதிச்சு குதிச்சு ஓடிப் போகும்
குள்ள முயல் அண்ணா
நீ குதிக்காதே கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒன்னா

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பாவாடை போல் தோகை விரிச்சு
புள்ளி மயில் வாயேன்
என் புத்தகத்திலே குட்டி போடவே
பூஞ்சிறகொன்னு தாயேன்

தாண்டி தாண்டி கிளைக்கு கிளை
தாவி போகும் குரங்கே
நான் பாண்டி ஆடவே
உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இரங்கி ஓடி வா

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

யானைக் குட்டி மாமா நீயும்
தும்பிக்கையை நீட்டு
உன் முதுகின் மேலே குந்திக்க போறேன் 
காட்டை சுத்திக் காட்டு

மான் குட்டியே உன் உடம்பு முழுக்க
புள்ளி வச்சதாரு
நீ துள்ளி ஓடினா நான் துரத்தி பிடிக்கிறேன்
நீயும் ஓடி ஒளிஞ்சுக்கோ

பட்டுச் சிவப்பா மூக்கு இருக்குற
பச்சை கிளியை பாரு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சுப் போடு

பூச்சி புழுவை கொத்தித் திங்கிற
ஒத்தைக் கண்ணுக் காக்கா
நீ மறைஞ்சி இருக்குற
வடையை திருடி திங்குறே
நாந்தான் பேச மாட்டேன் போ
கா

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
 

சனி, 17 ஆகஸ்ட், 2013

வாழ்க்கை என்றொரு பாடல்

அர்த்தமுள்ள பாடல் வரிகள். பாடல் வரிகளில் உள்ள twist பாடல் காட்சிகளை பார்த்தால்தான் புரியும்.

திரைப் படம்: உறவுகள் என்றும் வாழ்க (1978)
இசை: ஷங்கர்-கணேஷ்
பாடல்: வாலி
குரல்: S P பாலசுப்ரமணியம்
நடிப்பு: முத்துராமன், ஸ்ரீவித்யா
இயக்கம்: H S வேணு

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjIyNDg5MF9HdXRKbV9mMWQ2/Vaazhkkai%20endrOru%20paadal.mp3

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

சரித்திரம் முழுதும்
படித்தால் தெரியும்
பணத்தால் உயர்ந்தவர் இல்லை
நம் தலைமுறைக்கென்றொரு
பண்பாடுண்டு
தர்மம் தான் அதன் எல்லை

சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு
சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

காலை மாலை
வெய்யிலின் நிறத்தை
கன்னத்தில் பூசிய மங்கை
காலை மாலை
வெய்யிலின் நிறத்தை
கன்னத்தில் பூசிய மங்கை

அவள் கால்களை பார்த்து
நடக்கின்ற போதும்
காட்சியில் காமனின் தங்கை
அவள் கால்களை பார்த்து
நடக்கின்ற போதும்
காட்சியில் காமனின் தங்கை

தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மானம்
தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மானம்

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

பார்வையில் மோகனம்
ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்மை

பார்வையில் மோகனம்
ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்மை

அது பக்தியில் கல்யாணி
பரவச வசந்தா
அது பக்தியில் கல்யாணி
பரவச வசந்தா
அந்துவராளியின் மென்மை

யாருக்கென் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும்
ஹா ஹா ஹா
யாருக்கென் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும்

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே

இது போல ஒரு பாடல் மீண்டும் இல்லை. பாடும் குரல்களில் கம்பீரமும், பெண் குரலில் ஒரு காதலும். நீண்ட நாள் கழித்து ஜிக்கியின் இனிமை குரலில் ரசிக்கும் படியான பாடல்.


திரைப் படம்: மதுரை வீரன் (1965)
இயக்கம்: D யோகானந்த்
இசை: G ராமநாதன்
பாடியோர்: டி  எம் எஸ், ஜிக்கி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி.


http://asoktamil.opendrive.com/files/Nl8xODUwNzIxOF84enFlWV8zOTJj/Naadagamellam%20Kanden-Madhurai%20Veeran.mp3

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
கனா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கன்னி பருவம் எனும் கட்டழகு தேரினிலே
ஆ ஆ ஆ ஆ
என்னையே ஆள்கொள்ள இசைந்து வந்த மணவாளா
ஆ ஆ ஆ ஆ
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே
ஆ ஆ ஆ ஆ
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே
ஆ ஆ ஆ ஆ
உன்னழகை பார்த்திருக்கும்
உன்னழகை பார்த்திருக்கும்
என்னாளும் திரு நாளே
அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சாதே
அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சாதே
கலை மாதை கண்டதாலே நிலை மாரி கெஞ்சுதே
கலை மாதை கண்டதாலே நிலை மாரி கெஞ்சுதே

வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா
மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா
ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே
ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

தங்கரதம் வந்தது வீதியிலே

M S விஸ்வனாதன் தயாரிப்பில் இந்தப் படத்தில் T K ராமமூர்த்தி அவர்கள் எதிர் பார்த்த அளவில் விஸ்வனாதனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அதனால் இந்தப் படத்திலிருந்தே அவர்களுக்குள் மனக் கசப்பு ஏற்பட்டது என்றும் கேள்விப் பட்டேன். பின்னர் அவர்கள் இருவரும் பிரிவதற்க்கு பல காரணங்கள் உண்டாயின.
இந்தப் பாடலுக்கு பல இசை ஜாம்பவான்கள் இணைந்திருக்கிறார்கள்.
நமது தளத்திற்கு பல  பாடல் காட்சிகளை வழங்கி உதவும் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி, தூத்துக்குடி அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.

திரைப் படம்: கலைக்கோவில்
பாடியோர்டாக்டர் எம்பாலமுரளிகிருஷ்ணாபிசுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
நடிப்பு: முத்துராமன், சந்திரகாந்தா 
இயக்கம்:C V ஸ்ரீதர் 
வீணை: சிட்டிபாபு


 ஆ ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ   ஆ ஆ   ஆ ஆ ஆ ஆ   ஆ   ஆ ஆ ஆ ஆ   ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே

மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட

தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ 

செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தெண்டில் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே

தங்கரதம் வந்தது வீதியிலே
ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

தங்கரதம் வந்தது வீதியிலே
ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ


ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நிலவோடு வான் முகில்

கணீர் குரலோனுடன் A P கோமளா இணைந்து பாடிய அருமையானப் பாடல். எம் ஜி யாரும் பத்மினியும் படத்தில் இனிமையான காட்சி. மனம் குளிரும் இசையும் பாடல் வரிகளும்.

திரைப் படம்: ராஜ ராஜன் (1957)
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், A P கோமளா
இசை: K V மகாதேவன்
பாடல் வரிகள்: Ku. Sa கிருஷ்ண மூர்த்தி
இயக்கம்: T V சுந்தரம்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி


http://asoktamil.opendrive.com/files/Nl8xODA2OTQ3N19LR0JGeF82Njk3/Nilavodu%20Vaan%20mugil.mp3
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே

எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்பக் கதை பேசுதே
இனிதாகவே இன்பக் கதை பேசுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே

புதுப் பாதைதனை காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
புதுப் பாதைதனை காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா
மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
என்னாளும் பிரியாத நிலை காணுவோம்
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
என்னாளும் பிரியாத நிலை காணுவோம்

ஓ ஓ ஓ

நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

விழிகளில் கோடி அபிநயம்

திருமதி P சுசீலா அவர்களுக்கு பிறகு K S சித்ரா அவர்கள் S P B யுடன் இணைந்தாலே பாடல் சுகம்தான். அதிலும் இசையமைப்பாளர் V S நரசிம்மன் ஒரு மௌனமான வெற்றியாளர். அவருடன் இவர்கள் இணைந்தால்.... விருந்துதான். ஒரு காலத்தில் அழகான அம்பிகா.

திரைப் படம்: கண் சிமிட்டும் நேரம் (1988)
இயக்கம்: கலைவாணன் கண்ணதாசன்
நடிப்பு: கார்த்திக், அம்பிகா
இசை: V S நரசிம்மன்
குரல்கள்: S P B, K S சித்ரா


http://asoktamil.opendrive.com/files/Nl8xNzQ0NDM3OF9RTnRsa19jNjU3/VizhigalilKodiAbinayam-S.P.B.Chitra.mp3

ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிருவிழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்

இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே
வந்தால் என்ன
என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்
இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே
வந்தால் என்ன
என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்

உறவுக்கு ஒன்றான காலம் இது
உரிமைக்கு நான் தந்த பாலம் இது
கண்ணில்
ஒரு மின்னல்
புது கவிதைகள் படிக்கட்டும்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிருவிழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்

மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே
சொன்னால் என்ன
பொன்னான என் வாழ்வில்
நன்னாள் இதே
மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே
சொன்னால் என்ன
பொன்னான என் வாழ்வில்
நன்னாள் இதே

ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
இன்பம் இனி என்றும்
புது சுரங்களும் பிறக்கட்டும்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிருவிழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்

புதன், 7 ஆகஸ்ட், 2013

இல்லை இல்லை நீ

இந்தப் படம் அன்றைய இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்தது. இந்தப் பாடல் படத்தில் உள்ளதா  இல்லையாவென தெரியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் பாடல் காட்சி கிடைக்கவில்லை. இனிமையான பாடல்.
திரு ராமராவ் அவர்களுக்கு நன்றி பாடல் காட்சியை காட்டிக் கொடுத்ததற்கு..
திரைப் படம்: நங்கூரம் (1979)
பாடியவர்கள்: S P B, ஸ்வர்னா
பாடல்: கண்ணதாசன் என்று நினைக்கிறேன்
இசை : V குமார் & காமதாசா
இயக்கம்: திமோதி வீரரத்னே
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjIyNDYyMF9od3VuMV9iMzI5/illai%20illai%20nee%20illaamal.mp3


இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

இருவருக்குள் இன்பம் இன்பம்
அதற்கொரு நாள் வேண்டுமா

எனக்கென நீ சொந்தம் சொந்தம்
இனிக்கின்ற தேன் வேண்டுமா

அமுதத்தில் நனைந்தது குமுதத்து பூங்கொடியே

சமயத்தில் கனிந்தது மடியினில் மாங்கனியே

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
மலர்ந்திருக்கும் நெஞ்சில் நெஞ்சில்
உனைப் போல மன்னன் இல்லை

குவிந்திருக்கும் செல்வம் செல்வம்
உனையன்றி தேவையில்லை

எனக்கென கிடைத்தது இந்திர லோகம் ஒன்று

என்னிடம் விழுந்தது மந்திர மேகம் ஒன்று

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
கிடைத்தப் பிடி என்றும் என்றும் நழுவாமல் காத்திருப்பேன்

கிடைத்த சுகம் என்னை விட்டு விலகாமல் பார்த்திருப்பேன்

முதுகினில் சாய்ந்ததில் உலகத்தை மறந்துவிட்டேன்

இனி என்ன கேளுங்கள் முழுவதும் கொடுத்துவிட்டேன்

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே


திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

இந்தப் பாடலில் S P B யின் குரலில் உள்ள உயிரோட்டமும், ஏற்ற இறக்கங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. திரும்பவும் ஒருவர் இதை பாடுவதென்றால் நிச்சயமாக அது மேடையில் மெல்லிசை கச்சேரியில் பாடும்  பாடல் போலதான் இருக்கும். சிறந்த தமிழ் திரைப் பாடல்களில் தவிர்க்க முடியாத ஒரு பாடல்.
 
திரைப் படம்: தில்லு முல்லு (1981)
பாடியவர்: S P பாலசுப்ரமணியம்
இசை: M S விஸ்வநாதன்
நடிப்பு: ரஜினிகாந்த், மாதவி
பாடல்: கண்ணதாசன் 
இயக்கம்: K பாலசந்தர் 

http://asoktamil.opendrive.com/files/Nl8xNzMyMzgxOF9aclR5aV9iNjA1/Raagangal%2016.mp3


அ  ஹ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா


கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான்
கூடஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான்
கூடஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா.
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ஆ ஆ ஆ ஆ
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
சனி, 3 ஆகஸ்ட், 2013

சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா

குழந்தை குரலுக்கு இவரை விட்டால் இன்று வரை இணையானவர் இல்லை. எனது மதிப்புக்குரிய ஜானகி அம்மா கூட குழந்தைகளுக்கு குரல் கொடுத்து பாடியிருக்கிறார். ஆனாலும் இவர் அளவு இல்லை எனதான் சொல்வேன்.
படக் காட்சியில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரியவில்லை. மிக அருமையான நடிப்பு. இந்த ஒரு காட்சியில் மட்டுமே இப்படி என்றால் படத்தில் எப்படி இருக்கும் அவரது நடிப்பு?

மணிரத்தினத்தின் அஞ்சலிக்கு அடுத்து குழந்தைகளை வைத்து சமூக நோக்கத்துடன் ஒரு படமும் வெளிவரவில்லை என நினைக்கிறேன். இப்பொழுது வரும் தமிழ் படங்கள் எல்லாமே சூப்பர் மேன் வகையை சேர்ந்தது. நம்ப முடியாத காட்சிகளை கொண்டவை. இவை எல்லாம் குழந்தைகளுக்காக எடுக்கப் பட்ட படங்களாகக் கொள்ளலாம்.

இதே நேரத்தில் நடிகை கனகாவை பற்றிய சில வதந்திகள் அவரது அம்மா தேவிகாவை நினைவுபடுத்தியது. என்ன ஒரு அருமையான நடிகை.

தெளிவான இசையில் தெளிவான குரலுடன் இந்த பாடலை கேட்டு, பார்த்து ரசிப்போம்.

திரைப் படம்: தெய்வீக உறவு (1968)
இசை: கே வி மகாதேவன்
நடிப்பு: ஜெயஷங்கர், தேவிகா
இயக்கம்: சத்யம்
குரல்: M S ராஜேஸ்வரி
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNzQzNzM5MF9hVzBaS183MjMw/sinthaamal%20sirippaa%20singara.mp3


சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா

பூவாக மதிச்சா போகாம இருப்பா
தானாக நினைச்சா ஓஹோன்னு ரசிப்பா
பூவாக மதிச்சா போகாம இருப்பா
தானாக நினைச்சா ஓஹோன்னு ரசிப்பா
யாரானும் அடிச்சா அம்மான்னு அழைப்பா
ஆராரோ படிச்சா அப்போது படுப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா

செண்டாகப் பழுத்து ரெண்டான இதழை
ஒன்னாக குவிப்பா எண்ணாம கொடுப்பா
செண்டாகப் பழுத்து ரெண்டான இதழை
ஒன்னாக குவிப்பா எண்ணாம கொடுப்பா
வண்டாக குதிப்பா பாலாக இனிப்பா
உன்னோட படுப்பா ஒன்னாக கலப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா

நெஞ்சோடு அணைச்சா பஞ்சாக இருப்பா
கொண்டாடும் எடத்தில் கும்மாளம் அடிப்பா
நெஞ்சோடு அணைச்சா பஞ்சாக இருப்பா
கொண்டாடும் எடத்தில் கும்மாளம் அடிப்பா
ரெண்டாக மிதப்பா அஞ்சாமே நடப்பா
என்னாளும் உனக்கே பொண்ணாகப் பொறப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாகப் பறப்பா வாயாடிப் பாப்பா


வியாழன், 1 ஆகஸ்ட், 2013

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்

K V மகாதேவன்  மற்றும் S P B யின் திறமைகளை வீணாக்கிய பாடல் இது. இந்த படத்திற்கு தேவை இல்லாத பாடல். S P B இந்தளவு உயிர் கொடுத்து பாடிய இந்தப் பாடல் பொது ஜனங்களை அந்த அளவுக்கு சென்றடையவில்லை. மைக் மோஹன் வாயசைத்து பாடினாலும் சங்கராபரணம் சோமயாஜுலு போன்று வருமா? படக் காட்சியும் பாடலுக்கு நடுவே இது போன்ற காட்சியமைப்புக்கள் கொண்ட பாடல்கள் இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் நிறையவே வந்து போரடித்து போனது.
ஆனாலும் இனிமையான K V மகாதேவன் ின் இசைக்கும் S P Bயின் குரலுக்கும் இன்றைக்கு மறந்துவிட்டாலும் ரசிக்கும்படியானப் பாடல்.

திரைப் படம்: தூங்காத கண்ணென்று ஒன்று (1983)
இசை: K V மகாதேவன்
பாடல்: முத்துலிங்கம்
நடிப்பு: மோகன், அம்பிகா
இயக்கம்: R சுந்தரராஜன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNzI3MTkyMF9NQld5YV84ZTQ0/Nee%20azhaiththau%20poloru.mp3நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

தங்க முக செங்கமலம் பூத்திருக்க
நீ தனிமையிலே என் நினைவில் காத்திருக்க
தங்க முக செங்கமலம் பூத்திருக்க
நீ தனிமையிலே என் நினைவில் காத்திருக்க
நீல நயனங்களின் நளினங்களில்
நீல நயனங்களின் நளினங்களில்
போதை கொண்டு கோதை
உன்னை அணைத்திருக்க
அணைத்திருக்க

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

நாளை வரும் புது வசந்த காலமடி
நம் பாதையிலே மனமலரின் கோலமடி
நி ச ரி க ம க ரி ச நி த த ம த ப ச நி நீ ச
நாளை வரும் புது வசந்த காலமடி
நம் பாதையிலே மனமலரின் கோலமடி
காதல் இலக்கியத்தில் சரித்திரத்தில்
காதல் இலக்கியத்தில் சரித்திரத்தில்
நீயும் நானும் கோயில் கொண்டு
நிலைத்திருக்க நிலைத்திருக்க

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

க ம ப த நி ச ரி க நி ம ப ச க ம ரீ சா ரி நீ நீ ச
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ம க ம க ரி ச த ப த ப ம க ச நி ச நி த ப
க ரி க ரி ச நி சாரி  நி நி ச தா நி நி ச
ப ம ம ப க க ம ரி க ச
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

க ம கர் கர் ரி க ரிர்  ச ரி சர் சர் நி ச நி
ரி க ரி ரி ச நி ச ச நின் நீ தா நி தா
ம தா ம தன நி நி நி நி நி க ம கத் கத்
க நி ச நிர் நிர்  ப தா நிரி சர் சர் சர்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

க ரி கட் கட் கா ம தா நி ச ரி க ப ம கா
ரி க ரி கட் கட் கா ரி ச ரிர் ரீர் ரீர்
க ரி ச ம ரி க ரி க நி க ச ரீர் ரீர் ரீ
க ரி க ம ப தி நி தா ப ம ப தா ம
நி தா ச நி நி தா நி தா நி தா ச நி
தா தா கி ம தா நி க ரி ரி ரி ரி ரி ச நி
தா ரி ரி ரி ரி தா நி ச காக்க ரி க க க
க நி தா ரி க க க காக ரி தா ரி ம ம ம ம
க ரி க ம ம ம ம க நி க தனா