பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

இந்தப் படத்தில் பாடும் பெண் குரல் முழுவதும் பாம்பே ஜெயஸ்ரீயினுடையது. SPBயுடன் மற்றக் குரல் இணையும் போது அந்தப்  பாடல் தனி சுவை பெறுகிறது. இந்தப் பாடல் திரைப் படத்தில் இடம் பெறவில்லை என நினைக்கிறேன். நல்ல இனிமையான பாடல்.

திரைப் படம்: தம்பதிகள் (1983)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
பாடல்: வாலி
குரல்கள்: S P B, பாம்பே ஜெயஸ்ரீ
நடிப்பு: ஜெய்ஷங்கர், சிவகுமார், பூர்ணிமா ஜெயராமன்


ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்ட

இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
வளை ஓசை மெல்ல கேட்க்கும்போது உருகிடுவாயோ
ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
வளை ஓசை மெல்ல கேட்க்கும்போது உருகிடுவாயோ
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்
பின்னால் வாராதோ
அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்
பின்னால் வாராதோ

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்ட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக