பின்பற்றுபவர்கள்

புதன், 7 ஆகஸ்ட், 2013

இல்லை இல்லை நீ

இந்தப் படம் அன்றைய இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்தது. இந்தப் பாடல் படத்தில் உள்ளதா  இல்லையாவென தெரியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் பாடல் காட்சி கிடைக்கவில்லை. இனிமையான பாடல்.
திரு ராமராவ் அவர்களுக்கு நன்றி பாடல் காட்சியை காட்டிக் கொடுத்ததற்கு..
திரைப் படம்: நங்கூரம் (1979)
பாடியவர்கள்: S P B, ஸ்வர்னா
பாடல்: கண்ணதாசன் என்று நினைக்கிறேன்
இசை : V குமார் & காமதாசா
இயக்கம்: திமோதி வீரரத்னே
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjIyNDYyMF9od3VuMV9iMzI5/illai%20illai%20nee%20illaamal.mp3


இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

இருவருக்குள் இன்பம் இன்பம்
அதற்கொரு நாள் வேண்டுமா

எனக்கென நீ சொந்தம் சொந்தம்
இனிக்கின்ற தேன் வேண்டுமா

அமுதத்தில் நனைந்தது குமுதத்து பூங்கொடியே

சமயத்தில் கனிந்தது மடியினில் மாங்கனியே

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
மலர்ந்திருக்கும் நெஞ்சில் நெஞ்சில்
உனைப் போல மன்னன் இல்லை

குவிந்திருக்கும் செல்வம் செல்வம்
உனையன்றி தேவையில்லை

எனக்கென கிடைத்தது இந்திர லோகம் ஒன்று

என்னிடம் விழுந்தது மந்திர மேகம் ஒன்று

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
கிடைத்தப் பிடி என்றும் என்றும் நழுவாமல் காத்திருப்பேன்

கிடைத்த சுகம் என்னை விட்டு விலகாமல் பார்த்திருப்பேன்

முதுகினில் சாய்ந்ததில் உலகத்தை மறந்துவிட்டேன்

இனி என்ன கேளுங்கள் முழுவதும் கொடுத்துவிட்டேன்

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே


4 கருத்துகள்:

myspb சொன்னது…

அறிதான பாடல் பா.நி.பாவில் தொடர்பு கொடுத்துள்ளேன். நன்றி சார்.

myspb சொன்னது…

சார், இந்த பாடலை என் மின்முகவரிக்கு அனுப்ப முடியுமா? பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.covairavee@gmail.com

Ramarao சொன்னது…

இந்தப் பாடல் காட்சி you tube ல் கிடைக்கும்.
Link: https://www.youtube.com/watch?v=N5g0KM8jsE0

Ramarao சொன்னது…

இந்தப் பாடல் காட்சி you tube ல் கிடைக்கும்.
Link: https://www.youtube.com/watch?v=N5g0KM8jsE0

கருத்துரையிடுக