பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

தங்கரதம் வந்தது வீதியிலே

M S விஸ்வனாதன் தயாரிப்பில் இந்தப் படத்தில் T K ராமமூர்த்தி அவர்கள் எதிர் பார்த்த அளவில் விஸ்வனாதனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அதனால் இந்தப் படத்திலிருந்தே அவர்களுக்குள் மனக் கசப்பு ஏற்பட்டது என்றும் கேள்விப் பட்டேன். பின்னர் அவர்கள் இருவரும் பிரிவதற்க்கு பல காரணங்கள் உண்டாயின.
இந்தப் பாடலுக்கு பல இசை ஜாம்பவான்கள் இணைந்திருக்கிறார்கள்.
நமது தளத்திற்கு பல  பாடல் காட்சிகளை வழங்கி உதவும் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி, தூத்துக்குடி அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.

திரைப் படம்: கலைக்கோவில்
பாடியோர்டாக்டர் எம்பாலமுரளிகிருஷ்ணாபிசுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
நடிப்பு: முத்துராமன், சந்திரகாந்தா 
இயக்கம்:C V ஸ்ரீதர் 
வீணை: சிட்டிபாபு


 ஆ ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ   ஆ ஆ   ஆ ஆ ஆ ஆ   ஆ   ஆ ஆ ஆ ஆ   ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே

மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட

தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ 

செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தெண்டில் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே

தங்கரதம் வந்தது வீதியிலே
ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

தங்கரதம் வந்தது வீதியிலே
ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ


4 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

VEENAI ISAI BY CHITTU BABU AND NOT BY S BALACHANDER

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன், தவறு திருத்தப் பட்டது

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமையான பாடல்.இந்தப் பாடல் ஆபோகி என்ற ராகத்த்தில் அமைந்தது.இந்த ராகத்த்திலேயே இளையராஜா "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..."என்ற பாடலை அமைத்தார்.
THANK YOU SIR,

தாஸ்

Raashid Ahamed சொன்னது…

டாக்டர் எம் பாலமுரளி கிருஷ்ணா என்றொரு மாமெரும் இசைவாணர் பாடிய இந்த பாடல் மிக அருமை. திரையில் குறைந்த பாடல்களே பாடினாலும் ஒவ்வொரு பாடலும் ஒரு GEM போன்றது. உதாரணத்துக்கு “ஒரு நாள் போதுமா” - திருவிளையாடல், “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” - கவிக்குயில்

கருத்துரையிடுக