பின்பற்றுபவர்கள்

சனி, 17 ஆகஸ்ட், 2013

வாழ்க்கை என்றொரு பாடல்

அர்த்தமுள்ள பாடல் வரிகள். பாடல் வரிகளில் உள்ள twist பாடல் காட்சிகளை பார்த்தால்தான் புரியும்.

திரைப் படம்: உறவுகள் என்றும் வாழ்க (1978)
இசை: ஷங்கர்-கணேஷ்
பாடல்: வாலி
குரல்: S P பாலசுப்ரமணியம்
நடிப்பு: முத்துராமன், ஸ்ரீவித்யா
இயக்கம்: H S வேணு

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjIyNDg5MF9HdXRKbV9mMWQ2/Vaazhkkai%20endrOru%20paadal.mp3

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

சரித்திரம் முழுதும்
படித்தால் தெரியும்
பணத்தால் உயர்ந்தவர் இல்லை
நம் தலைமுறைக்கென்றொரு
பண்பாடுண்டு
தர்மம் தான் அதன் எல்லை

சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு
சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

காலை மாலை
வெய்யிலின் நிறத்தை
கன்னத்தில் பூசிய மங்கை
காலை மாலை
வெய்யிலின் நிறத்தை
கன்னத்தில் பூசிய மங்கை

அவள் கால்களை பார்த்து
நடக்கின்ற போதும்
காட்சியில் காமனின் தங்கை
அவள் கால்களை பார்த்து
நடக்கின்ற போதும்
காட்சியில் காமனின் தங்கை

தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மானம்
தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மானம்

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

பார்வையில் மோகனம்
ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்மை

பார்வையில் மோகனம்
ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்மை

அது பக்தியில் கல்யாணி
பரவச வசந்தா
அது பக்தியில் கல்யாணி
பரவச வசந்தா
அந்துவராளியின் மென்மை

யாருக்கென் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும்
ஹா ஹா ஹா
யாருக்கென் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும்

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக