பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது

ஸ்லோவான பாடல். எஸ் பி பி குரலாகவே தெரியவில்லை. இரண்டு ஜாம்பவான்கள் பாடியும் பாடலில் அவ்வளவாக சுரத்தில்லை. நல்ல வேளையாக பாடல் காட்சி கிடைக்க வில்லை.

திரைப் படம்: வசந்த மலர்கள் (1992)
குரல்கள்: S P பாலசுப்ரமணியம் , K S சித்ரா
இசை: தேவா
இயக்கம்: A R ரமேஷ்
நடிப்பு: ஹரிராஜ் (யார்?), ரேகா??

http://asoktamil.opendrive.com/files/Nl8yOTkxMDU3OV8yVUlYSF81MWRl/Paadatha%20padalai.mp3ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது
காணாத காட்சியை கண்கள் காணும் நாளிது

வந்ததொரு இளைய கன்னி தந்ததொரு சிவரஞ்சனி
இதுவரை இங்கே நிலவை மறைத்தது மேகம்
இவள் வரவாலே இனிமேல் பௌர்ணமி ஆகும்

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது

நீ பார்க்க உனை நான் பார்க்க கண்ணெல்லாம் கவிதை பூக்க

நான் கேட்க இசை தேன் வார்க்க நெஞ்செல்லாம் இனிமை சேர்க்க

நீ எனக்கென நான் உனக்கென பூமியில் பிறந்தோம்

ஏழ் பிறப்பிலும் ஓர் உயிரென சாசனம் வரைந்தோம்

ஒருவர் நெருங்க ஒருவர் மயங்க இதய கதவை இருவரும் திறந்தோம்

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது
காணாத காட்சியை கண்கள் காணும் நாளிது

உன் பேரை ஒரு கல்வெட்டாய் உள்ளத்தில் எழுதும்போது

பூச்சூடும் இளம் பூஞ்சிட்டாய் பக்கத்தில் உலவும்போது

நீ தழுவிட நான் நழுவிட ஆனந்த மயக்கம்

யார் கொடுப்பது யார் எடுப்பது கேள்விகள் பிறக்கும்

இளைய கிளிகள் சிறகை விரித்து திசைகள் முழுதும் தினசரி பறக்கும்

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது
காணாத காட்சியை கண்கள் காணும் நாளிது

வந்ததொரு இளைய கன்னி தந்ததொரு சிவரஞ்சனி
இதுவரை இங்கே நிலவை மறைத்தது மேகம்

இவள் வரவாலே இனிமேல் பௌர்ணமி ஆகும்

பாடாத பாடலை நெஞ்சம் பாடும் நாளிது
காணாத காட்சியை கண்கள் காணும் நாளிது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக