பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 அக்டோபர், 2014

படிக்க வேண்டும் புதிய பாடம் padikka vendum puthiya paadam

வாத்தியாரைய்யா மற்றும் வாத்தியாரம்மா காதலை பல பாடல்கள் சொல்லியிருந்தாலும் இது தனி இனிமை பாடல். வித்தியாசமான பாடல் வரிகள்.

திரைப் படம்: தாயில்லா பிள்ளை (1961)

குரல்கள்: K ஜமுனாராணி, P B ஸ்ரீனிவாஸ்

இயக்கம்: L V பிரசாத்
 நடிப்பு: கல்யாண்குமார், முத்துக் கிருஷ்ணன், T S பாலையா, நாகேஷ்,  M V ராஜம்மா
பாடல்: மருதகாசி

இசை: K V  மகாதேவன்









படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரைய்யா

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரைய்யா

பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா
நான்
படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா
பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா
நான்
படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா

கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு
நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு

ஒட்டும் இரு உள்ளம் தன்னில் பற்றிக் கொண்டது
ஒட்டும் இரு உள்ளம் தன்னில் பற்றிக் கொண்டது
அந்த புத்தம் புது நெருப்பைத் தானே காதல் என்பது
கவிஞர் சொன்னது

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரைய்யா

தன்னை தானே சுற்றிக் கொண்டு இந்த உலகமே
செங்கதிரோனை சுற்றும் சேதி பழைய பாடமே

என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்த உள்ளமே
என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்த உள்ளமே
இன்று உன்னை சுற்றி கேட்கும் பாடம் புதிய பாடமே
புதிய பாடமே

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா

பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரைய்யா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக