பின்பற்றுபவர்கள்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

திரும்பி வா ஒளியே திரும்பி வா thirumbi vaa oliye thirumbi vaa

விஸ்வநாதன், கண்ணதாசன், டி  எம் எஸ், சுசீலா மற்றும்  எம் ஜி யார் கூட்டணியில் மற்றும் ஒரு இனிமை  பாடல். கேட்க கேட்க தெவிட்டாத பாடல். பாடலின்  வரிகள் அனைத்தும் முத்துக்கள்.

திரைப்படம்: நாடோடி (1966)
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: ராமகிருஷ்ண பந்துலுதிரும்பி வா ஒளியே
திரும்பி வா
விரும்பி வா
என்னை விரும்பி வா
திரும்பி வா
ஒளியே திரும்பி வா
விரும்பி வா
என்னை விரும்பி வா

இட்ட அடி கனிந்திருக்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிர்ந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க

திரும்ப வா
அறிவே திரும்ப வா
திரும்பி வா
ஒளியே திரும்பி வா

கன்னி விழி திறந்திருக்க
காதல் வழி புரிந்திருக்க
நல்ல மனம் அழைத்திருக்க
நாலு குணம் தடுத்திருக்க

திரும்ப வா
அறிவே திரும்ப வா
திரும்பி வா
ஒளியே திரும்பி வா

கண் படுவதில் பட்டு தேறும்
கை தொடுவதை தொட்டுத் தீரும்
கண் படுவதில் பட்டு தேறும்
கை தொடுவதை தொட்டுத் தீரும்
இடை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய் மொழி கூறும்
இடை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய் மொழி கூறும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்

திரும்பி வா
ஒளியே திரும்பி வா
திரும்ப வா
அரிவே திரும்ப வா

ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
இள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்கும்
இள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்கும்


திரும்ப வா
அறிவே திரும்ப வா
திரும்பி வா
ஒளியே திரும்பி வா
திரும்பி வா

1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

பாடல் காட்சியில் (பாடலில் அல்ல ) உள்ள திருஷ்டிப் போட்டு - எம்ஜியார் அணிந்திருக்கும் சம்பந்தமில்லாத முஸ்லீம் தொப்பி

கருத்துரையிடுக