பின்பற்றுபவர்கள்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே


சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே

திரைப்படம்: திருவருட்செல்வர் (1967)
இயக்குனர்: ஏ. பி. நாகராஜன்
நடிப்பு: சிவாஜி கணேசன், பத்மினி
இசையமைப்பு: கே. வி. மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்

பாடியவர்: டி எம் எஸ்Music podcasts - Music podcasts -பித்தா பிரைசூடி பெருமானே அருளாளா
எத்தாள் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லுர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலானேன்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய
இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே
இறைவா
சித்தம் எல்லம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

இறைவா

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

கருத்துரையிடுக