பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

காலத்திற்கேற்ற நல்ல இளமை துள்ளும் பாடல் நல்ல தமிழில்.


திரைப் படம்: தங்க மகன் (1983)
இயக்கம்: A ஜெக நாதன்
நடிப்பு: ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ்
இசை:இளையராஜா
குரல்கள்: S P B, S ஜானகி
பாடல்: வாலி



ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ


வீணை என்னும் மேனியிலே
தந்தி என்னை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

1 கருத்து:

arrawinth yuwaraj சொன்னது…

நண்பரே...இந்தப் பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள்.... எதற்கும் சரி பார்த்து திருத்திக்கொள்ளவும்...

கருத்துரையிடுக