பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கண்ணே கமலப் பூ காதிரெண்டும் வெள்ளரிப் பூ

வருடத்தின் முதல் பாடலை அன்னையின் தாலாட்டாக ஆரம்பிப்போம்.

இது அந்தக் காலத்து தாலாட்டு பாடல்.
அன்னையின் குரலாக  லீலா அவர்களின் அருமையான இனியக் குரலில்.

இதே பின்னணி இசையை கொஞ்சமாக மண்ணுக்கு மரம் பாரமா என்னும் பாடலிலும் மகாதேவன் அவர்கள் எடுத்து கையாண்டிருக்கிறார்.

ஆமாம், முகப்பெல்லாம் புத்திரமாம் என்பதற்கு பொருள் என்ன?
நானும் உத்திரமாம் என்றிருக்கும் என் நினைத்தேன். ஆனால் அது புத்திரமாம்தான்.

1958 ஆம் ஆண்டு பாடல் என்றாலும் மிகத் தெளிவாகத்தான்  இருக்கிறது.

ஆணோ பெண்ணோ உட்கார்ந்தவாக்கில் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடை குழந்தையை வைத்துக் கொண்டு இடுப்பினால் முன்னும் பின்னும் ஆடியவாறு இந்தப் பாடலை பாடினால் குழந்தை தூங்குவது நிச்சயம்.

எல்லாம் பழைய நினைவுகள்.


திரைப் படம்: பெரிய கோயில் (1958)
குரல்: P லீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: தெரியவில்லை.
நடிப்பு: ப்ரேம் நஸிர், M N ராஜம், கண்ணாம்பாள்
இயக்கம்: A K வேலன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDcxNDQ4MV9YOENYMl9jNzJj/KanneKamalapoo.mp3





கண்ணே கமலப் பூ
காதிரெண்டும் வெள்ளரிப் பூ
மின்னிடும் உன் பொன் மேனி
செண்பகப் பூ செண்பகப் பூ
கண்ணே கமலப் பூ
காதிரெண்டும் வெள்ளரிப் பூ
மின்னிடும் உன் பொன் மேனி
செண்பகப் பூ செண்பகப் பூ

முல்லை பூ கட்டிடமாம்
முகப்பெல்லாம் புத்திரமாம்
முகப்பை திறந்து விட்டால்
முல்லை பூவின் வாசனையாம்
முல்லை பூ கட்டிடமாம்
முகப்பெல்லாம் புத்திரமாம்
முகப்பை திறந்து விட்டால்
முல்லை பூவின் வாசனையாம்
சின்ன வாய் மணக்குதடா
சிங்கார கண்ணு
சித்திரமே பொற்க்கொடியே
சீக்கிரம் உண்ணு
கண்ணே கமலப் பூ
காதிரெண்டும் வெள்ளரிப் பூ
மின்னிடும் உன் பொன் மேனி
செண்பகப் பூ செண்பகப் பூ

மார் நிறைய சந்தனமாம்
 மடி நிறைய வெற்றிலையாம்
தேன் நிறைந்த களி பாக்காம்
சீர் கொடுப்பார் உன் மாமன்
மார் நிறைய சந்தனமாம்
மடி நிறைய வெற்றிலையாம்
தேன் நிறைந்த களி பாக்காம்
சீர் கொடுப்பார் உன் மாமன்
மண்ணிலே தவழாதே
சிங்கார கண்ணு
என் மடி மேலே நீ இருந்து
சீக்கிரம் உண்ணு
கண்ணே கமலப் பூ
காதிரெண்டும் வெள்ளரிப் பூ
மின்னிடும் உன் பொன் மேனி
செண்பகப் பூ செண்பகப் பூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக