பின்பற்றுபவர்கள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

மையை தொட்டு எழுதியவர் என் மனதை

ரொம்ப காலம் ஆயிடிச்சி இந்த பாடலை கேட்டு. இது மாதிரி பாடல்களை கேட்கும் போது K V மகாதேவன் அவர்களால் எப்படி இவ்வளவு ஜனரஞ்சகமாக (நான் மற்றைய எந்த இசையமைபாளர்களையும் ஒரு படி கூட  இறக்கி மதிப்பிடவில்லை. அவரவர்கள் திறமையை அவ்வப்போது சிறப்பித்து எழுதி  உள்ளேன்.) பாடல்களை மனதை பாதிக்கும் அளவுக்கு இசையமைக்க முடிகிறது என அதிசயப்பதுண்டு. அவரின் பல பாடல்கள் என் மனதில் இப்போது உருளுகிறது. அப்படியே மனதை கொள்ளைக் கொண்டு போகும் பாடல்கள் அவரது இசையில்.

இனி பாடலுக்கு வருவோம். பாடலின் படக் காட்சி கிடைக்கவில்லை. பாடல் வரிகளின் படி பார்த்தால், இரு பெண்கள் ஒரு ஹீரோவை எதிர்பார்த்து பாடுவது போல தெரிகிறது. பாடலின் முதல் வரியில் அந்த நாயகர் ஓவியராக இருக்கலாம் என்பது போல தோன்றுகிறது. இனிமையான பாடும் குரல்கள். நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.


படம்: துளசி மாடம் (1963)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடல்: கே.எம்.ஷெரிஃப்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDQyMTk0NF9rcU44MV9iNTI3/maiyai%20thottu%20ezhuthiyavar.mp3
மையை தொட்டு எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

மையை தொட்டு
எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

படத்தில் அழகாய்
சிரித்தவரே
என் பக்கத்தில் ஒரு நாள்
சிரித்திடுவார்

படத்தில் அழகாய்
சிரித்தவரே
என் பக்கத்தில் ஒரு நாள்
சிரித்திடுவார்

குடத்துள்
விளக்காய் இருக்கின்றேன்
மண கோலத்தில்
கையை பிடித்திடுவார்

கோலம் இட்டு
மாலை இட்டு
குத்து விளக்கை
ஏற்றி வைத்தே
கோலம் இட்டு
மாலை இட்டு
குத்து விளக்கை
ஏற்றி வைத்தே
காலம் எல்லாம்
வணங்குகிறேன்
பண் பாராய்
துளசி அம்மா
காலம் எல்லாம்
வணங்குகிறேன்
பண் பாராய்
துளசி அம்மா

மையை தொட்டு
எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

மீட்டிய
வீணை
நான் என்றால்
அதன் மெல்லிசை
இன்பம்
அவர்தானே
மீட்டிய
வீணை
நான் என்றால்
அதன் மெல்லிசை
இன்பம்
அவர்தானே
பாட்டு
பாடும்
நேரம் எல்லாம்
அதன் பல்லவி எல்லாம்
அவர் பெயர் தானே

கன்னியர் மனமோ காட்டாறு
அது காவிரி ஆறாய் மாறிடவே
கன்னியர் மனமோ காட்டாறு
அது காவிரி ஆறாய் மாறிடவே

மன்னவர் அவரே மாலை இட
மாதா நீ அருள் புரிவாய்
மன்னவர் அவரே மாலை இட
மாதா நீ அருள் புரிவாய்

மையை தொட்டு
எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

மையை தொட்டு
எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

3 கருத்துகள்:

கே. பி. ஜனா... சொன்னது…

இது போன்ற நிறையப் பாடல்களை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் ஜனரஞ்சகமாய், மனதை ஊடுருவும் விதமாய், மறக்க முடியாததாய் மென்மையான, மேன்மையான இசையில் அமைத்து, இன்றும் கேட்கத் திகட்டாமல் அவை மனதில் நிற்கின்றன.
பெரும்பாலும் அவர் பாடல் முதலில் எழுதப்பட்ட பின்னரே இசையமைப்பதாக சொல்வார்கள். வரிகளின் உணர்வுக்கேற்றபடி மிகப் பொருத்தமாக அவரின் தேர்ந்த இசையில் வெளிப்படும் ராகங்கள் மனதை கட்டிப் போடுவதில் வியப்பில்லைதான்..
இதேபோல் இரு நாயகியர் பாடும் உருக்கமான பாடல் ஒன்று 'மாடப்புறா' படத்தில் வருமே கவனித்தீர்களா?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்... நன்றி...

Unknown சொன்னது…

The stars appearing are Chandrakantha and Saradha.

கருத்துரையிடுக