பின்பற்றுபவர்கள்

சனி, 6 ஏப்ரல், 2013

பிரிவு என்பது என்றும் இல்லை

இயக்குனர் கலைமாமணி K.சோமு 1917 பிறந்தவர். 1994 இறந்தார்.
1967க்கு பிறகு இவர் இயக்கிய 23 படங்களும் வெளிவரவில்லை என்பது ஒரு சோகமான விஷயம்.
இன்றைக்கான பாடல் இடம் பெற்ற படமும் தணிக்கை முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்ட பின்பும் வெளிவராத படம்.
இவர் இயக்கத்தில் த்தில் வெளியான சில படங்கள்:
மக்களைப் பெற்ற  மகராசி,
டவுன் பஸ்
பாவை விளக்கு
பட்டினத்தார்
நான் பெற்ற செல்வம் போன்ற வெற்றிப் படங்கள்.

இனிமையும் சுகமான வரிகளையும் கொண்ட இந்தப் பாடலை எழுதியவர் மற்றும் இந்தப் படத்திற்கான  இசையமைப்பாளர்  யாரென்று தெரியவில்லை.

திரைப் படம்: ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கொரு பெண்ணும்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், P சுசீலா


இயக்குனர்: K. சோமு

நடிப்பு: பிரேம் நசிர், M N ராஜம்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDE5ODA0Ml96WTVzYl9iOTE2/Pirivu%20Enbathu.mp3பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை
பிரிவு என்பது என்றும் இல்லை

பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை
பிரிவு என்பது என்றும் இல்லை

குறைவில்லா அன்பு என்னும்
செல்வமும் கொண்டு
நாம் குடும்பத்தையே நடத்திடலாம்
இன்பமும் கண்டு
குறைவில்லா அன்பு என்னும்
செல்வமும் கொண்டு
நாம் குடும்பத்தையே நடத்திடலாம்
இன்பமும் கண்டு

குன்றாக இருக்கும் பொருள்
குறைந்தே மாறலாம்
குன்றாக இருக்கும் பொருள்
குறைந்தே மாறலாம்
கொஞ்சும் அன்பு மட்டும்
குறையாது உண்மையிது
கொஞ்சும் அன்பு மட்டும்
குறையாது உண்மையிது
பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை
பிரிவு என்பது என்றும் இல்லை

சம்சாரம் தன்னை
ஒரு சாகரம் என்று
அதன் தன்மைதனை உணர்ந்தவர்கள்
சொல்வதும் உண்டு
சம்சாரம் தன்னை
ஒரு சாகரம் என்று
அதன் தன்மைதனை உணர்ந்தவர்கள்
சொல்வதும் உண்டு

அஞ்சாத நெஞ்சமெனும்
படகை கொண்டு நாம்
அஞ்சாத நெஞ்சமெனும்
படகை கொண்டு நாம்
அதிலே மிதப்பதுதான்
அழியாத ஆனந்தமே
அதிலே மிதப்பதுதான்
அழியாத ஆனந்தமே
பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை

பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை
பிரிவு என்பது என்றும் இல்லை

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குறிப்பிட்டவைகளை தேடித் பார்த்தேன்... கிடைக்கவில்லை...

நல்ல வரிகள் சார்... நன்றி...

Raashid Ahamed சொன்னது…

இவரைப்போன்றோர் கதைகள் நிறைய சினிமா உலகில் உண்டு. நீங்கள் குறிப்பிட்ட 5 படங்களை இயக்கிய இவருடைய 23 படங்களா வெளிவராமல் போனது?. உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு அது இழப்பு தான் என்று சொல்ல வேண்டும். எத்தனை நல்ல படங்களை, பாடல்களை நாம் இழந்தோமோ ?

கருத்துரையிடுக