பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

வீணையடி நீயெனக்கு...மேவும் விரல் நானுனக்கு..பூணும்வடம் நீயெனக்கு....


மகா கவி பாரதியின் பாடல்கள் பல திரைப் படப் பாடல்களாக வந்துள்ளன. ஆனால் காலத்திகேற்ற வகையில் பழமையான இசையையும் புதிய வகையில் கலந்து இனிமை குறையாமல் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

திரைப் படம்: ஏழாவது மனிதன் (1982)
குரல்கள்:  K J யேஸுதாஸ், நீரஜா
இசை: L வைத்ய நாதன்
மகாகவி பாரதியின் பாடல்
நடிப்பு: ரகுவரன், அனிதா
இயக்கம்: K ஹரிஹரன்
 


பாயுமொளி நீயெனக்கு...
பார்க்கும் விழி நானுனக்கு...
தோயும் மது நீயெனக்கு...
தும்பியடி நானுனக்கு...
வாயுரைக்க வருகுதில்லை...
வாழி நின்றன் மேன்மையெல்லாம்...
தூய சுடர் வானொளியே...
சூரையமுதே...
கண்ணம்மா....

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...
வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...
பூணு(ம்)வடம் நீயெனக்கு...
புது வைரம் நானுனக்கு...

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...
பூணும்வடம் நீயெனக்கு...
புது வைரம் நானுனக்கு...

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...


வானமழை நீயெனக்கு...
வண்ண மயில் நானுனக்கு...
 
வானமழை நீயெனக்கு...
வண்ண மயில் நானுனக்கு...
பானமடி நீயனக்கு...
பாண்டமடி நானுக்கு...
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமரு நல்லழகே...
நல்லழகே...
ஊனமரு நல்லழகே...
ஊறுசுவையே...கண்ணம்மா...

காதலடி நீயெனக்கு...
காந்தமடி நானுனக்கு...
வேதமடி நீயெனக்கு...
வித்தையடி நானுனக்கு...
போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே...
நாதவடிவானவளே...நல்ல உயிரே...கண்ணம்மா...

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

திரு அசோக் ராஜ் அவர்களே

சிறந்த பாடல்.மீகநன்றி.
அன்புடன்
தாஸ்

கருத்துரையிடுக