பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 நவம்பர், 2011

கண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவியம்


அமைதியான இனிமையான பாடல். திரு G ராமனாதன் இசையில் பாடல் என்றாலே தனி இனிமைதான்.

திரைப்படம்: சாரங்கதாரா (1958)
பாடியவர்: ஜிக்கி, T M S
இசை: G. ராமநாதன்
பாடல் : மருதகாசி
இயக்கம்: V S ராகவன்
நடிப்பு: சிவாஜி, பானுமதி




http://asoktamil.opendrive.com/files/Nl8zNzc0NzM0N19HZFNIZl9lNjQz/Kangalal%20kaathal%20kaviyam.mp3










கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்

தங்கள் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
உந்தன் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

தங்களால் ஆ ஆ ஆ ஆ
தங்களால் இந்த இன்பமே
என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே
தங்களால் இந்த இன்பமே
என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே
தங்கமே அதில் ஐயமேன்?
இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே ஏ ஏ ஏ  
தங்கமே அதில் ஐயமேன்
இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே
திங்களைக் கண்ட அல்லி போல்
திருவாய் மொழியால்
உள்ளம் மலருதே
செந்தமிழ் கலைச்செல்வியே
மனம் தேனுன்னும் வண்டாய் மகிழுதே
கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்


மண்ணிலே ஆ ஆ ஆ
மண்ணிலே உள்ள யாவும்
எழில் மன்னவர் உம்மைப்போல் காணுதே
மண்ணிலே உள்ள யாவும்
எழில் மன்னவர் உம்மைப்போல் காணுதே

எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோணுதே ஏ ஏ ஏ
எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோணுதே
இன்பமோ அன்றி துன்பமோ
எது நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்
அன்றில் போல் பிரியாமலே
நாம் இன்று போல் என்றுமே வாழ்வோம்
கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்



1 கருத்து:

பால கணேஷ் சொன்னது…

ஜி.ராமநாதன் மெலடி மன்னர். இந்தப் பாடலிலும் அவரது இசை குறைந்த இசைக்கருவிகளுடன் கேட்பதற்கு நிறைவாய் ஒலிக்கிறது. அருமை...

கருத்துரையிடுக