பின்பற்றுபவர்கள்

சனி, 5 செப்டம்பர், 2015

நான் ஆட்சி செய்து வரும்..Naan aatchi seithuvarum...

சுசீலா அம்மாவின் மிக மென்மையான குரலில் அழகு ததும்பும் பாடல் அம்மனுக்கு உகந்த இந்த ஆவணியில்...
K S கோபாலகிருஷ்ணன்இயக்கத்தில் வந்த அருமையான படங்களில் மறக்க முடியாத ஒன்று.

திரைப்படம்: ஆதி பராசக்தி (1971)
குரல்: P சுசீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி ஜெயலலிதா மற்றும் பலர்.நானாட்சி ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு

நானாட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

கருத்துரையிடுக