பின்பற்றுபவர்கள்

புதன், 16 மார்ச், 2011

செல்லபிள்ளை சரவணன்.. திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

நன்றாக நினைவில் இருக்கிறது. இந்த பாடல் வெளியான புதிதில் எனக்கு தெரிந்த எல்லா பெண்களும் (அட! தப்பா நினைக்காதீர்கள் எனது சகோதிரிகள்தான்) இந்த பாடலைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பிரபலம்.




திரைப் படம்: பெண் ஜென்மம் (1977)

இசை: இளையராஜா

நடிப்பு: முத்துராமன், ஜெயப்ரபா

இயக்கம்: திருலோகசந்தர்

பாடியவர்கள்: KJY, P சுசீலா



http://www.divshare.com/download/14327280-215



செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

கோபத்தில் மனஸ்தாபத்தில்

குன்றம் ஏறி வந்தவன்





செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்



ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான்

பின்பு ஊடலில் கொஞ்சம் ஆடுவான்

கூந்தலில் மலர் சூடியே

அவன் கூட நான் வர வேண்டுவான்

மயங்கி நான்

மயங்கி நான் மெல்ல தடை சொல்ல

சினம் கொள்வான்



செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

வள்ளியை இன்பவல்லியை

அள்ளிக்கொண்ட மன்னவன்

செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்



மாலையில் ஒரு மல்லிகை என

மலர்ந்தவள் இந்த கன்னிகை

மன்மதன் கணை ஐவகை அதில்

ஓர் வகை இவள் புன்னகை

மடியில் நான்

மடியில் நான் துயில

இடை துவள கலை பயில



செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்



கார்குழல் உந்தன் பஞ்சணை

இரு கைகளே உந்தன் தலையணை

வேலவன் கொஞ்சும் புள்ளிமான்

அதன் வடிவம்தான் இந்த வள்ளிமான்

அருகில் நான்

அருகில் நான் வந்தேன் இதழ் செந்தேன்

இதோ தந்தேன்



செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

3 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நல்ல பாடல்.
நான் கேட்கும் இந்த இரண்டு பாடல் இருந்தால் பதிவிடுங்கள். "நெஞ்சத்தை அள்ளித்தா" என்கிற படத்தில் இடம் பெற்ற "நீரில் ஒரு தாமரை... தாமரையில் பூவிதழ்... பூவிதழில் புன்னகை... புன்னகையில் என்னவோ..." என்ற பாடல். மற்றொரு பாடல் "இரவு பூக்களே... இரவு பூக்களே... இரக்கமில்லையா, நெஞ்சில் உறக்கமில்லையா"... படத்தின் பெயர் தெரியவில்லை.

Unknown சொன்னது…

நன்றி தமிழ் உதயன், நீங்கள் கேட்ட பாடல்களை விரைவில் வழங்க முயற்சிக்கிறேன்.

Raashid Ahamed சொன்னது…

இந்தப்பாடலில் தான் ஜேசுதாசின் குரல் மிகவும் இனிமையாகவும் அழகாகவும் இருப்பதாக உணர்கிறேன். வள்ளியை இன்ப வல்லியை என்ற வல்லின மெல்லின வார்த்தைகளை அருமையாக உச்சரித்திருப்பார். ஜேசுதாஸ் சுசீலா அம்மாவின் ஜோடிபாடல்கள் அனைத்தும் தேனமுது.

கருத்துரையிடுக