பின்பற்றுபவர்கள்

திங்கள், 21 மார்ச், 2011

என் அன்னை செய்த பாவம்..நான் மண்ணில் வந்தது..

சோகத்தை குரலிலும் இசையிலும் அப்படியே பிழிந்தெடுத்தாலும் மனதுக்கு நிறைவான பாடல்.


திரைப் படம்: சுமைதாங்கி (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்: S ஜானகி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
நடிப்பு: முத்துராமன், ஜெமினி, தேவிகாhttp://www.divshare.com/download/14237119-aa6என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..

என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..

என் அன்னை செய்த பாவம்..
நம் கண்கள் செய்த பாவம்..
நாம் காதல் கொண்டது..
இதில் கடவுள் செய்த பரிகாரம்..
பிரிவு என்பது..
பிரிவு என்பது..

என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..
என் அன்னை செய்த பாவம்..

இரவெனவும் பகலெனவும்
இரண்டு வைத்தானே..
அந்த இறைவன் அவன்
மனதை மட்டும் ஒன்று வைத்தானே..
ஒரு மனதில் ஒரு விளக்கை
ஏற்றி வைத்தானே..
அதில் ஒளியிருக்க
வழியை மட்டும் மூடிவிட்டானே..
மூடிவிட்டானே..
என் அன்னை செய்த பாவம்..

உறவினராம் பறவைகளை
நீ வளர்த்தாயே..
அதில் ஒரு பறவை நானும்
என்றே நினைத்திருந்தேனே..
சிறிய கூண்டு எனக்கு மட்டும்
திறக்கவில்லையே..
அது திறந்த போது
என் சிறகு பறக்கவில்லையே..

என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..

என் அன்னை செய்த பாவம்..1 கருத்து:

Unknown சொன்னது…

மனதை உருக்கும் நல்ல கருத்துள்ள பாடல்

கருத்துரையிடுக