பின்பற்றுபவர்கள்

புதன், 2 மார்ச், 2011

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஒரு அர்த்தமுள்ள பாடல். திரு தமிழன்பன் ஒரு சிறந்த பாட்டை விரும்பிக் கேட்டு என்னை மகிழ்ச்சியாக்கிவிட்டார். ஒரு மனைவியின் அருமை பெருமைகளை மிக எளிதான தமிழில் கவிஞர் விளக்கி அதை T M S சரியான உணர்ச்சிகளுடன் பாடி இருக்கிறார். மனதை சிறிது புரட்டி போடும் பாடல்தான்.


திரைப் படம்: அதிர்ஷ்டம் அழைக்கிறது (1976)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்வரிகள்: கண்ணதாசன் (வாலி இல்லை)
இயக்கம்: A ஜெகனாதன்
மேற்கொண்டு விபரங்கள் எதும் கிடைக்கவில்லை.http://www.divshare.com/download/14207026-9b8

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது
ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது
அதுதான் அள்ளி இட நெருப்பை இங்கே கூட்டி வைத்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

தர்மம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீ தானே என்றது
தர்மம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீ தானே என்றது
தன் தலையில் உன் பழியை தாங்கிக் கொண்டு நின்றது
தன் தலையில் உன் பழியை தாங்கிக் கொண்டு நின்றது
தாங்கும் வரை தாங்கிவிட்டு தாளாமல் சாய்ந்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள்
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி புலியெ வந்ததடா
நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி புலியெ வந்ததடா
மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
கை பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா
பொய் படித்த பாவமடா
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது5 கருத்துகள்:

தமிழன்பன் சொன்னது…

நான் நன்றி சொல்வேன் உங்கள் சேவைக்கு.
மனதில் பல பாடல்கள் ரீங்காரமிட்டாலும்,
உங்களைச் சிரமப்படுத்த விரும்பாததால்
தற்போதைக்கு விண்ணப்பிப்பதை இடைநிறுத்துகின்றேன்

Unknown சொன்னது…

எனக்கேதும் சிரமமில்லை. சில நேரம் பாடல்கள் இருந்தாலும் உடனடியாக பாடலை தறமேற்ற முடியாமல் பல வேலைத் தடங்கல்கள் இருக்கலாம். மாற்று எண்ணங்கள் வேண்டாம். பாடலைக் கேளுங்கள். என்னிடம் இருந்தால் முடிந்தால் உடனடியாக முயற்சிக்கிறேன். நன்றிகள் பல கோடி.

tamilan சொன்னது…

சொடுக்கி படிக்கவும்.

====> இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.
இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
<===


.

ராஜேஷ் சொன்னது…

இது வாலி அவர்கள் கதை வசனம் பாடல்கள் எழுதிய படம். தெரியாமல் வாலி இல்லை என்று சொல்வது தவறு.

Graphic Crest சொன்னது…

பாடல் கண்ணதாசன் இயற்றியது அல்ல. வாலி இயற்றியது. படத்தின் டைட்டில் கார்டில் அப்படித் தான் இருக்கிறது.

கருத்துரையிடுக