பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 மார்ச், 2011

துளித் துளித் துளித் துளி மழைத் துளி..

இனிமையான பாடல். வாலிப வயதில் ஒரு வித கிறக்கத்தை உண்டு பண்ணிய பாடல் இந்த பாடல்.

முரட்டு சிவகுமாரை கன்னட மஞ்சுளா வசியம் பண்ணும் பாடல். திருமதி P சுசீலா அவர்களும் அதே இளமை ததும்ப பாடி இருக்கிறார்.

திரைப் படம்: புது வெள்ளம் (1975)
இசை: M B  ஸ்ரீனிவாசன்
இயக்கம்: K விஜயன்
குரல்: P சுசீலாhttp://www.divshare.com/download/14370271-997


துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..
ஹா..துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..

இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்..
இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்..
ஆ ஆ ஆ ஆ ஆ
பூமிக்கு தீர்ந்தது தாபம்..
இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்..
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா...
ல ல ல ல லலல...
ம் ம் ம் ம் ம் ம்..

நான் வாழ்வது வேறொரு உலகம்..
அங்கு நீயின்றி எனக்கது நரகம்..
நான் வாழ்வது வேறொரு உலகம்..
அங்கு நீயின்றி எனக்கது நரகம்..
என்னை வாட்டுது வாலிப விரகம்...
என்னை வாட்டுது வாலிப விரகம்...
அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்..
ல ல ல ல ல ல ஆ ஆ ஆ ஆ..
ஹா ஹா ஹா ஹா..
ம் ம் ம் ம் ம்..
துளித் துளித் துளித் துளி மழைத் துளி..

இங்கு சில்லென வீசிடும் காற்று..
என்னை கொல்வது ஏனென்று கேட்டு..
உந்தன் கையெனும் போர்வையை போட்டு..
உந்தன் கையெனும் போர்வையை போட்டு..
கொஞ்சம் கதகதப்பை நீ ஏற்று..
துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..
ஹா..துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
ல ல ல ல ல ல ஆ ஆ ஆ ஆ..
ஹா ஹா ஹா ஹா..
ல ல ல ல ல..
ம் ம் ம் ம் ம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக