பின்பற்றுபவர்கள்

புதன், 16 மார்ச், 2011

காத்திருந்த கண்களே..கதையளந்த நெஞ்சமே..

இந்த பாடல் படமாக்கப் பட்டிருக்கும் விதம் (picturisation) மிக நன்றாக இருக்கும். நல்ல இசையமைப்பில் இனிமையான குரல் வளத்துடன் கூடிய ஒரு நல்ல பாடல். திருமதி P. சுசீலா அவர்கள் சற்று விஷேசமாகவே இந்தப் பாடலை பாடியிருப்பது போல எனக்கு தெரிகிறது.


திரைப் படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)
நடிப்பு: சிவாஜி, ரவிசந்திரன், ஜெயலலிதா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: பாலு
குரல்கள்: P B S, P. சுசீலா
பாடல்: கொத்தமங்கலம் சுப்பு




http://www.divshare.com/download/14319238-85d


காத்திருந்த கண்களே..
கதையளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே..
பொங்கிப் பெருகும் உள்ளமே..

காத்திருந்த கண்களே..
கதையளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே..
பொங்கிப் பெருகும் உள்ளமே..

கண்ணிரண்டில் வெண்ணிலா..
கதைகள் சொல்லும் பெண் நிலா..
கண்ணிரண்டில் வெண்ணிலா..
கதைகள் சொல்லும் பெண் நிலா..
நான் இருந்தும் நீ இல்லா..
வாழ்வில் ஏது தேன் நிலா..

கண்ணிரண்டில் வெண்ணிலா..
கதைகள் சொல்லும் பெண் நிலா..
நான் இருந்தும் நீ இல்லா..
வாழ்வில் ஏது தேன் நிலா..


மைவிழி வாசல் திறந்ததிலே..
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..
அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே..
புன்னகை விளைந்ததென்ன..

மைவிழி வாசல் திறந்ததிலே..
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..
அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே..
புன்னகை விளைந்ததென்ன..

பொழுதொரு கனவை விழிகளிலே..
கொண்டு வருகின்ற வயதல்லவோ..
பொழுதொரு கனவை விழிகளிலே..
கொண்டு வருகின்ற வயதல்லவோ..
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து..
தருகின்ற மனதல்லவோ..
தருகின்ற மனதல்லவோ..

காத்திருந்த கண்களே..
கதையளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே..
பொங்கிப் பெருகும் உள்ளமே..

கைவிரலாலே தொடுவதிலே இந்த..
பூமுகம் சிவந்ததென்ன..
இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே..
வையகம் இருண்டதென்ன..

செவ்விதழ் ஓரம் தேன் எடுக்க..
இந்த நாடகம் நடிப்பதென்ன..
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து..
மயக்கத்தை கொடுப்பதென்ன..
மயக்கத்தை கொடுப்பதென்ன..

காத்திருந்த கண்களே..
கதையளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே..
பொங்கிப் பெருகும் உள்ளமே..

லலலாலலலலலா லலலலாலாலாலா..
லலலலாலா....

1 கருத்து:

Pranavam Ravikumar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

கருத்துரையிடுக