பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 மார்ச், 2011

தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு

தாய், தந்தையாகப் போகும் இருவரின் கற்பனையில் குழந்தை வளர்ப்பு சுகம் சுகமே.


திரைப் படம்: அச்சாணி (1978)
நடிப்பு:லக்ஷ்மி, முத்துராமன்
இயக்கம்: காரைக்குடி நாராயணன்
பாடிய குரல்கள்: S P B, P சுசீலா
இசை: இளையராஜா




http://www.divshare.com/download/14297452-bb3



தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு

மணித் தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனி கன்னம் முத்தமிட்டு

பாராட்டு... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்

தாலாட்டு..

நாம் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெற வேண்டும்
ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை
மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்

தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்
தாலாட்டு..

வாழ்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
வருத்தமுறும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
கண்ணன் வண்ணம் கண்டு
துள்ளும் உள்ளம் ரெண்டு
தென் பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்

பாராட்டு... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

மிக அழகான பாடல் !! தாலாட்டு பாடல் அல்லாமல் குழந்தை பெற்ற மகிழ்ச்சியை கணவன் மனைவி பகிர்ந்து கொள்ளும் பாடல். மகன் வக்கீலாக டாக்டராக வரவேண்டும் என ஆசைப்படுவதை சொல்லியிருக்கும் வரிகள் அருமை.

கருத்துரையிடுக