பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 29 மார்ச், 2011

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா

மீண்டும் ஒரு இளமையான இனிமையான பாடல் எஸ் பி பி யிடமிருந்து. அதே கொஞ்சல், குறும்புகளுடன். இனிய தென்றலே எஸ் பி பி இனிமையாக பாடி வா வா என்று அழைக்கலாமா?


திரைப் படம்: அம்மா பிள்ளை (1990)
இசை: சங்கர் கணேஷ்
பாடல்: வாலி
நடிப்பு: ராம்ஜி, சீதா
இயக்கம்: R C சக்தி



http://www.divshare.com/download/14435325-a83








இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஓ ஓ ஓ ஓ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

தரையில் வந்த சொர்க்கம் எனத் தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும் அது அழகின் ஆலயம்
பவளம் போலும் தேகம் அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும் நல்ல அமுத பாத்திரம்
இளமை என்னும் நாவல் அவள் தான் அவள் தான்
கனவில் அதை நாளும் படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

கருமையான கூந்தல் நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்
அசைந்து மெல்ல அசைந்து என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல் இவள் இடை காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து என்னை அணைக்கச் சொன்னது
நடந்தால் வண்ண பாதம் சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் எந்தன் நெஞ்சம் தவிக்கும் தவிக்கும்
இதை நான் எங்கு சொல்வது

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஓ ஓ ஓ ஓ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக