பின்பற்றுபவர்கள்

வியாழன், 10 மார்ச், 2011

விழி வாசல் அழகான மணி மண்டபம்..

அரிய பாடல்களில் ஒன்று. தெளிவான தமிழில் கவிதையாக பொழிகிறார்கள். அள்ளிப் பருகுவோம்.


திரைப் படம்: பெண் குலத்தின் பொன் விளக்கு (1959)
இசை: மாஸ்டர் வேணு
இயக்கம்: B விட்டலா ஆச்சாரி
நடிப்பு: ஜெமினி, M N ராஜம்
பாடியவர்கள்: சீர்காழி S கோவிந்தராஜன், P சுசீலா
பாடல்: வில்லிபுத்தூரன்






http://www.divshare.com/download/14237677-f69





விழி வாசல் அழகான மணி மண்டபம்..
உன் விழி வாசல் அழகான மணி மண்டபம்..
மின்னல் விளையாடும் புதுப் பார்வை உயிர் தாண்டவம்..
விழி வாசல் அழகான மணி மண்டபம்..
வண்டாடும் மலர் வீதி அலங்காரமே..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..
வண்டாடும் மலர் வீதி அலங்காரமே..
என்னை வரவேற்க வரும் இன்ப சாம்ராஜ்யமே..
விழி வாசல் அழகான மணி மண்டபம்..
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
உன் புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
பாச புது மாலை உனை நாடி வரும் தாரகை..
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
புனலான தேன் கூடு பார் வெண்ணிலா..
வந்த பொழுதல்ல உன் பாடல் என் நெஞ்சிலே..
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
செடியிலே பூவிருக்கு அழகாக..

உன் சிரிப்பிலே நான் இருக்கேன் உனக்காக..

கொடியிலே கோனலிருக்கு எதற்காக..

பெண்கள் குணத்திலே நானம் இருக்கு அதுக்காக..

நானம்தானே பெண்களுக்கு நாணயம்..
இந்த நல்ல பண்பு கொண்ட பெண்கள் குடும்ப வாழ்வின் ஆலயம்..

ஞானமோடு பேசுதிங்கே ஓவியம்..
தமிழ் வானில் ஆடும் தாரகை நீ உலக மகா இலக்கியம்..

முல்லையோடு தென்றல் சேரும் நேரம்..

முதல் முத்தம் ஒன்று கேட்டு வந்து பாடுதே சிங்காரம்..

குறும்பு வார்த்தை ஏனோ தமிழ் பண்பு கண்கள் பாரும்..

திரை அரும்பும் இதழில் ஊரும் தேனை எனக்கு சாயும் நேரம்..
மிகப் பொருத்தமான நேரம்..
விழி வாசல் அழகான மணி மண்டபம்..

உன் புகழ் மாலை அமுதான கவி மாளிகை..

1 கருத்து:

கருத்துரையிடுக