பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 9 ஜூன், 2013

அவள் ஒரு நவரச நாடகம்

அருமையானப் பாடல். ஆனால் படத்தில் திணிக்கப் பட்டது போல இருக்கும். நடிகை லதா அவர்களுக்கு இந்தப் படத்தில் ஏதும் பாடல் காட்சி இல்லாததால் (அந்த படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பே குறைவுதான்) எம் ஜி யாரின்  யோசனையின்  பேரில் இந்தப் பாடல் பின்னதாக சேர்க்கப் பட்டதாக அறிகிறேன்.
S P B யின் இளமை ததும்பும் இனிய குரலில் அழகானப் பாடல்.

திரைப் படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன் 
இயக்கம்: எம் ஜி யார்
நடிப்பு:எம் ஜி யார், லதாhttp://asoktamil.opendrive.com/files/Nl8xMTI4MDg1N182NW9FMl8wZDNh/Aval%20oru%20navarasa-Ulagam%20surtrum%20Valipan.mp3


அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்

ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம்

குறுநகை கோலத்தில் தாமரை
கோடைக் காலத்து வான்மழை
குறுநகை கோலத்தில் தாமரை
கோடைக் காலத்து வான்மழை

கார்த்திகைத் திங்களில் தீபங்கள்
கார்த்திகைத் திங்களில் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

அவள் ஒரு நவரச நாடகம்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// தழுவிடும் இனங்களில் மானினம்...
தமிழும் அவளும் ஓரினம்...///

என்னே கவிஞ்ரின் வரிகள்...! இனிமையான பாடல்...

NAGARAJAN சொன்னது…

படம் வெளியான ஆண்டு 1973. ஆனால், இப்படத்தின் பாடல்கள் வெளியான ஆண்டு 1970.

MGR வெளிநாட்டில் படம் எடுக்க திட்டமிட்ட போது (1969ல் சிவாஜி நடித்த, ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் வெளியானது - அதனால், MGR வெளிநாட்டில் வைத்து படம் எடுக்க முடிவு செய்தார்) - ஜப்பானில் அப்போது நடைபெற்ற EXPO 70ல் படம் எடுக்க முடிவு செய்தார். பாடல்கள் அவசரமாகத் தேவைப்பட்டன.

MSV மிகக் குறைந்த நாட்களில் 9 பாடல்கள் இசை அமைத்துக் கொடுத்தார். இதனை அன்றைய LP record களில் இன்றும் காணலாம். (இந்த 9 பாடல்களில், 'உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் செய்தவள் நான்' என்ற பாடல், படத்தில் இடம் பெறவில்லை).


சீர்காழி பாடிய 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' பாடல், படம் வெளியாவதற்கு முன்பு டைட்டில் பாடலாக இணைக்கப் பட்டது. (இத்திரைப்படம் 1973 மே மாதம், திண்டுக்கல் தொகுதி இடைத் தேர்தலுக்கு முன் வெளியானது).


கருத்துரையிடுக