பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 11 ஜூன், 2013

கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்


L R ஈஸ்வரி பாடிய சிறந்த பல பாடல்களில் எனக்கும் பிடித்த பாடல் இது.

கம்பீரமான திருமதி விஜய நிர்மலாவிற்க்கு இணையான குரலாக

அமைந்துவிட்டது.

கண்ணுக்கு குளிரான படப்பிடிப்பு. இனிமையாக பாடப் பட்ட பாடல்.

மென்மையான காதல் பாடல்.

திரைப்படம்: என் அண்ணன் (1970)

நடிப்பு: எம்.ஜி,ஆர் ஜெயலலிதா

இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர்கள் முத்துராமனும் விஜய நிர்மலாவும்

பாடகர்கள்: P.B.ஸ்ரீநிவாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி

இசையமைப்பாளர்: கே.வி.மகாதேவன்  

பாடலாசிரியர்: வாலி 

இயக்குநர்: ப.நீலகண்டன் http://asoktamil.opendrive.com/files/Nl8xMzk5NjkwM19OaU1TTl8zODcw/Kannukku%20Theriyatha.mp3 


கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்


ஒரு முறையா இருமுறையா


உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இருமுறையா

உன்னைக் கேட்கச் சொல்லும்
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
 
நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்

ஒரு முறையா இருமுறையா


உன்னைக் கேட்கச் சொல்லும்

ஒரு முறையா இருமுறையா

உன்னைக் கேட்கச் சொல்லும்

மலர்க் கூட்டம் மெத்தை விரிக்க

மணக்க  மேனி குளிர்ந்திருக்கபழத்தோட்டம் பக்கம் இருக்க

இனிக்க  கைகள் பறித்திருக்க
உள்ளூறக் கள்ளூறும் கனியல்லவோ
நானந்தக் கனியுண்ணும் கிளியல்லவோ

கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
பன்னீரில் மெல்லக் குளித்து 
எழுந்து பாவை உடல் சிலிர்க்க 
முன்னேறும் வழி தெரிந்து
நடந்து கால்கள் களைத்திருக்க
ஒரு போது மடி மீது இளைப்பாறலாம்
மறுபோது இதழோரம் பசியாறலாம்

கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா

உன்னைக் கேட்கச் சொல்லும்

பயிலாதக் கலை பயின்று

முயன்று பார்வை சிவந்திருக்க
துயிலாமல் விழித்திருந்து
தொடர்ந்து பாடம் படித்திருக்க

சேவல்கள் கூவாமல் இருந்தாலென்ன
பகல்கூட இரவாகத் தெரிந்தாலென்ன     
   
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்

ஒரு முறையா இரு முறையா

உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்த இழுவையான குரல் அற்புதம்... நன்றி சார்...

myspb சொன்னது…

என் மனதையும் கவர்ந்த பாடல் இது. நன்றி.

கருத்துரையிடுக