பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 23 ஜூன், 2013

மாமா பிள்ளை மாப்பிள்ளே மாலையிட்டான் தோப்புளே

ஜானகி அம்மாவின் குரல் இனிமையோ இனிமை. கிராமத்து சாயலில் ஒரு இனிமை நிறைந்த காதல் டூயட். பட காட்சியில் தோன்றுபவர் தேவிகாவா?

திரைப் படம்: ஆயிரம் காலத்துப் பயிர் (1963)
நடிப்பு: T S துரைராஜ், பாலாஜி, தேவிகா.
இயக்கம்: T S துரைராஜ்
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: T M S, S ஜானகி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNDYwNDI4Nl9iOXAxMV85ODBj/maama%20pillai%20maapillai-Aayiram%20kaalathu%20payir.mp3மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே
மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே
சாதி சனம் பார்க்கலே
தடையிருந்தும் நினைக்கலே
மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே

அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
தொட்டு வந்தா பின்னாடி
தொடர்ந்து வந்தா முன்னாடி
அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

பூ முடிச்சான் தலையிலே
பொட்டும் வச்சான் முகத்திலே
பூ முடிச்சான் தலையிலே
பொட்டும் வச்சான் முகத்திலே
கட்டி வச்சான் கையிலே
கலந்துவிட்டான் நெஞ்சிலே
மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே

கட்டி வெல்லம் மாம்பழம்
கரைச்சி வச்சேன் தேன் குடம்
வெட்டி விட்டா கண்ணிலே
விழுந்துவிட்டேன் பெண்ணிலே
அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

மானம் காக்க சேலையும்
மனசு போல புருஷனும்
சேர்ந்து வந்த பொண்ணுக்கு
தெய்வம் தோனும் கண்ணுக்கு
சேர்ந்து வந்த பொண்ணுக்கு
தெய்வம் தோனும் கண்ணுக்கு
மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே

கூட்டி வச்ச கடவுளே
கோடிக் காலம் வாழ்கவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கூட்டி வச்ச கடவுளே
கோடிக் காலம் வாழ்கவே
வாழ வைத்த கடவுளே
வாழ்க வாழ்கவே
வாழ வைத்த கடவுளே
வாழ்க வாழ்கவே

மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே

அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் பாட்டு... நன்றி சார்...

கே. பி. ஜனா... சொன்னது…

மிக மிக இனிமையான பாடல். ரேடியோவில் அந்த நாட்களில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பிடித்த பாடல். ஆனால் இசை எஸ்.எம். சுப்பையா நாயுடு என ஞாபகம். சரியா?

Raashid Ahamed சொன்னது…

ஜானகி அம்மாவின் குரல் இந்தப்பாடலில் கேட்க மிகவும் அழகாக இனிமையாக உள்ளது. மேலும் டிஎம்எஸ் உடன் பாடிய சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடலையும் மிக அழகாக பாடியிருப்பார். இந்த பாடலை கேட்கும் போது ”தாமரைப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே” என்ற டிஎம்எஸ் சுசீலா அம்மா பாடிய பாடல் ஏனோ நினைவில் வருகிறது

கருத்துரையிடுக