பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 ஜூன், 2013

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்

அப்போதைய பாடல்களில் கதாநாயகன் சோகமாகவோ, தத்துவமாகவோ பாடும் போது நாயகி எப்படித்தான் பின்னாலேயே அவர்களுக்கு தெரியாமல் வருவார்களோ தெரியவில்லை. இதேபோல இன்னொரு பாடல்

http://asokarajanandaraj.blogspot.com/2012/01/b.html

எப்படியோ பாடல் தத்துவ பூர்வமாக பார்க்கத்தக்கதாக உள்ளது. விஷயமுள்ள பாடல்.

திரைப் படம்: டில்லி மாப்பிள்ளை (1968)
நடிப்பு: ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ
இயக்கம்: தேவன்
இசை: K V மகாதேவன்
பாடல்: வாலி
குரல்: டி எம் எஸ்

http://asoktamil.opendrive.com/files/Nl85OTMxMjE1X0FCUk1XXzNjZTg/AANDAVAN%20ORU%20NAAL%20KADAI%20VIRITHAN%20-[128].mp3ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையை சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையை சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்

பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கி கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கி கொண்டார்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையை சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒரு சிலர் மேலுக்கு விலை கேட்டார்

எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை
எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை

அன்பை வாங்கிட எவரும் இல்லை

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்... எனது பகிர்வுகளில் பயன்படுத்திக் கொள்கிறேன்... நன்றி சார்...

Raashid Ahamed சொன்னது…

இந்த பாடலை நான் கேட்டதில்லை. ஆனால் இதன் வரிகள் பிரமிப்பை உண்டாக்குகின்றன. (கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் - சாந்தி நிலையம் இந்த பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது.)

கருத்துரையிடுக