பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 2 ஜூன், 2013

அந்தி வரும் நேரத்திலே அஞ்சு வண்ண பூவெடுத்து

சின்ன வயதில் கேட்ட பாடல். (சிலோன் ரேடியோதான்) சரணம் ஆரம்பத்திலும் இறுதியிலும் மட்டுமே வரும். திருமதி சுசீலா அம்மா வழக்கம் போல  மிக மேன்மைக் குரலில் பாடியிருக்கிறார்.

திரைப் படம்: நீ வாழ வேண்டும் (1977)
குரல்கள்: P ஜெயசந்திரன், P சுசீலா
இசை : M S விஸ்வனாதன்
இயக்கம்: A. பீம்சிங்கு
நடிப்பு: முத்துராமன், சுமிதிரா

http://asoktamil.opendrive.com/files/Nl85MzQ3MTg5X0F5bHg1XzA5Zjk/Anthi%20Varum%20Nerathile.mp3


அந்தி வரும் நேரத்திலே
அஞ்சு வண்ண பூவெடுத்து
நாள்தோறும் அம்பு விடும் மன்மத ராஜா
உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா

முத்து வண்ண மாலையிட்டு
மோக வண்ண சேலை கட்டி
தேராட்டம் ஆடி வரும் தேவதை யாரோ
இந்த தேவதைக்கு பெண்ணழகு ரதி என்னும் பேரோ

கண்ணிரண்டில் உண்ணுவதும்
கையொடு கை பின்னுவதும்
என்ன கலை தெரியவில்லை
இதை பள்ளியிலும் படிக்கவில்லை

இன்ப வெறி கொள்ளுவதும்
ஈருடல்கள் துள்ளுவதும்
என்ன சுகம் புரியவில்லை
எந்த ஏடும் இதை விளக்கவில்லை

பாவை எந்தன் உள்ளம்
போதும் போதும் என்னும்

போதை ஏறும் கண்கள்
தேவை தேவை என்னும்
மௌன மொழி கேட்டேனடி
அதில் மாய வலை பார்த்தேனடி

கங்கை முடி சங்கரனார்
காமன் உனை ஏன் எரித்தான்
மோகம் என்னும் துயர் கொடுத்தாய்
முப்புரம்போல் உனை எரித்தான்

ஆட வந்த சங்கரனை
ஆட்டி வைத்த மன்மதனை
பூமிதன்னில் அழிப்பதுண்டோ
ஞானிகளும் ஜெய்ப்பதுண்டோ

யாகம் யோகம் என்று
கூறும் யாவும் இங்கு

காமம் மோகம் கண்டு
மாறும் மாறும் என்று
எத்தனையோ சாட்சியுண்டு
விஸ்வாமித்திரனின் கதையும் ஒன்று

அந்தி வரும் நேரத்திலே
அஞ்சு வண்ண பூவெடுத்து
நாள்தோறும் அம்பு விடும் மன்மத ராஜா
உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா
மன்மத ராஜா மன்மத ராஜா

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// இன்ப வெறி கொள்ளுவதும்
ஈருடல்கள் துள்ளுவதும்
என்ன சுகம் புரியவில்லை
எந்த ஏடும் இதை விளக்கவில்லை...///

எழுதியவர்...?

Unknown சொன்னது…

இந்தப் பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. கனமான பாடல் வரிகள்.

கருத்துரையிடுக