பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே... தீண்டாதிரு...

SPBயின் அழகானப் பாடல். உண்மையாகவே விடியலில் கேட்டால் அற்புதமே.


திரைப்படம்; கல்யாணக் காலம் (1982)

இயக்கம்: ராஜசேகர், ராபர்ட்
பாடல் வரிகள்: வைரமுத்து
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: தியாகு, சுஹாசனி
Share Music - Download Audio -அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...
அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...

பூக்கள் விழித்து கண்கள் துடைத்து
காலை வணக்கம் சொல்லும்
தூங்கி கிடந்த சூரியன் எழுந்து
சோம்பல் முறித்து கொள்ளும்
குளிக்கும்போது தெரிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்
குளிக்கும்போது தெரிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்

அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...

அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைபற்ற முந்து
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைபற்ற முந்து

அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...

பார்த்து புளித்து கசந்தபோதும்
பழகி போன பந்தம்
உயிரில் நிறைந்து மனதில் வழிந்து
சுகங்கள் வளர்க்கும் சொந்தம்
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும்
ஆ ஆ ஆ ஆ
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும்

அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...
குளிரே...ஹா ஹா ஹா ஹா தீண்டாதிரு...

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நான் தேடிக் கொண்டிருந்த பாட்டு. பகிர்வுக்கு நன்றி.

kavignar சொன்னது…

thanks. continue your service; good songs are necessary when the mind needs. vanakkam.kavignarThanigai.

கருத்துரையிடுக