பின்பற்றுபவர்கள்

திங்கள், 31 ஜனவரி, 2011

வள்ளுவன் குறளில் சொல் எடுத்தேன்..கம்பன் கவியில் சுவை எடுத்தேன்

மானே தேனே என்ற பாடல் வரிகள் இல்லாத பாடலை தேடுகையில் கிடைத்த பாடல் இது. ஆனாலும் காதலர்கள்  உலகப் பொருளாதாரம் நிறைய பேசி இருப்பது போல தெரிகிறது


திரைப்படம்: கல்யாண வளையோசை
இசை: M L ஸ்ரீகாந்த்
பாடியவர்கள்: M L ஸ்ரீகாந்த், S ஜானகி
மேற்க் கொண்டு விபரங்கள் ஏதும் என்னிடம் இல்லை. தெரிந்தவர்கள் பின்னோட்டத்தில் எழுதுங்கள்.
Music Hosting - Download Audio -


லல்ல லால ல ல ல
வள்ளுவன் குறளில் சொல் எடுத்தேன்
கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
இளங்கோ வரியில் எழில் எடுத்தேன்
பாடுவோம் நாம் ஆடுவோம்
மலரின்றி வண்டு இனம் மகிழ்ந்து வாழ்வதில்லை
மதியின்றி மண்ணுலகம் நிலைத்து இருப்பதில்லை

ஆ ஆ ஆ
ஒளியின்றி பூவுலகம் செழித்து வளர்வதில்லை
உனையன்றி என் உள்ளம் சிரித்து மகிழ்வதில்லை

மின்னல் இடை அன்னம் நடை புனைந்தேன் பாடல் ஒன்றை
ராதா உன்னை கொஞ்சும் உள்ளம் கொண்ட கண்ணன் இங்கே

லல்ல லால ல ல ல

லல்ல லால ல ல ல

வள்ளுவன் குறளில் சொல் எடுத்தேன்
கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
இளங்கோ வரியில் எழில் எடுத்தேன்
பாடுவோம் நாம் ஆடுவோம்
துணையின்றி கொடிகளெல்லாம் தானே படர்வதில்லை
நதியின்றி நாடுகளெல்லாம் வளமாய் இருப்பதில்லை

ஆ ஆ ஆ ஆ
கவியின்றி இசையெல்லாம் தேனாய் இனிப்பதில்லை
கலை இன்றி தலை உள்ளம் பாலாய் சுவைப்பதில்லை
மன்னன் உள்ளம் கள்ளம் இல்லை நினைத்தேன் காதல் கொண்டேன்
கண்ணா உன்னை கொஞ்சும் உள்ளம் கொண்ட ராதை இங்கே

லல்ல லால ல ல ல

3 கருத்துகள்:

கருத்துரையிடுக